சாந்திகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Parnasala.jpg

சாந்திகிரி ஆசிரமம் (Santhigiri Ashram) என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் போத்தன்கோடு கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இந்த ஆசிரமம் நவஜோதி ஸ்ரீ கருணாகர குரு என்பவரால் நிறுவப்பட்டது,[2] இந்த ஆசிரமமானது இந்திய அரசால் சமூக மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

கருணாகர குருவின் சீடர்கள், ஆசிரம வளாகத்தில் மக்ரானா பளிங்கால் ஒரு வெள்ளை நிற தாமரைப் பூ வடிவத்தில் பர்னாசலை என்ற அழகிய நினைவுச்சின்னத்தை கட்டியுள்ளனர். இந்த தனித்துவமான கட்டமைப்பை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆனது. இது 2010 ஆகஸ்ட் 13 ம் தேதி இந்தியாவின் சனாதிபதியான பிரதிபா தேவி பாடிலால் திறந்துவைக்கப்பட்டது அதன்பிறகு 2010 செப்டெம்பர் 12 அன்று பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்காக முறைப்படி திறக்கப்பட்டது. இது ஆன்மீக புனிதத்தலமாக மட்டுமல்லாமல், ஆசிரமத்தின் தாமரை பர்னசாலையானது திருவனந்தபுரத்தின் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.

பார்வை[தொகு]

இந்த ஆசிரமமானது நவாஜோதி ஸ்ரீ கருணாகர குருவின் கொள்கையின்படி ஆன்மீக, சமூக, பொருளாதார, கலாச்சார அம்சங்களை உள்ளடக்கிய புத்துயிரூட்டப்பட்ட வாழ்க்கையை நிறைவேற்றுவதற்காக செயல்படுகிறது.[4] அவருடைய பார்வை மதச்சார்பற்ற ஆன்மீகத்தை வலியுறுத்துகிறது.

நவாஜோதி ஸ்ரீ கருணாகர குரு (பிறப்பு 1927, இறப்பு 1999) கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள சந்திரூர் என்ற கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆன்மிகத் தேடலினால் வீட்டைவிட்டு வெளியேறியவர், பிரம்மத்தின் விருப்பப்படி இந்த உலக வாழ்வின் இருப்பை உணர்ந்தார். பிறகு சிறு ஓலைக் குடிசையில் சாந்திகிரி ஆசிரமத்தை நிறுவினார். அன்னதானம், ஆத்மபோதனை, மருத்துவ சேவை ஆகிய மூன்றும் ஆசிரமத்தின் முக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இந்த உலகில் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் கருணை வடிவான பிரகாசமே இறைநிலை என்பதை உணர்ந்தார். அதையே பக்தர்களுக்கும் போதித்தார்.[5]

இந்த ஆசிரமம்ஒரு பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது;மக்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்து, குருவின் போதனைகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வரிகின்றனர்.

இடங்கள்[தொகு]

பொத்துக்கோடு முக்கிய மையமாக செயல்படுகிறது கூடுதலாக ஆசிரமத்தின் கிளைகள் இடுக்கி, எர்ணாகுளம், சந்திரூர், ஹரிப்பாடு, கொல்லம், கன்னியாகுமரி, கோட்டயம், மதுரை, திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, கோழிக்கோடு, கண்ணூர், சுல்தான் பத்தேரி. ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. மேலும் கிளைகள் பெங்களூரிலும், புதுதில்லியிலும் கட்டப்பட்டு வருகின்றன.

செயல்பாடுகள்[தொகு]

அன்னதானம்[தொகு]

குருவின் குறிக்கோள்களில் ஒன்று ஏழைகளுக்கு உணவளிப்பதாகும் இதனால் ஆசிரமத்தின் அனைத்து மையங்களிலும் பார்வையாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.[6]

அத்துருஷ்வம்[தொகு]

அத்துருஷ்வம் அல்லது நோயாளிகளை கவனித்து அவர்களுக்கு துணைபுரிவது என்பது குருவின் நோக்கங்களில் ஒன்றாகும். இதனால் ஆசிரமத்தில் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையங்கள்,[7] மருத்துவமனைகள்,[8] நலவாழ்வு முகாம்கள் s[9] சமூக ஆய்வு மையங்கள் போன்றவை செயல்படுகின்றன..

ஆத்மபோதனம்[தொகு]

குருவின் நோக்கங்களில் ஒன்று ஆத்மாபோதனம் என்னும் ஆன்மீக விழிப்புணர்வு ஆகும்.[10] இதன்படி ஆசிரமம் மக்களின் அறியாமையை நீக்குதலில் கவனம் செலுத்துகிறது.[11]

பொருளாதார மேம்பாடு[தொகு]

புத்துயிரூட்டப்பட்ட வாழ்க்கைத் தரிசனத்தின் ஒரு பகுதியாக, ஆசிரமமானது பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக, பெண்களது வர்த்தக திறமையை வளர்க்க ஆதரவு அளிக்கும் விதமாக [12] குடிசைத் தொழில் திட்டங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Advani hails contributions of spiritual leaders". The Hindu. April 28, 2008. Archived from the original on 2008-05-02. https://web.archive.org/web/20080502031408/http://www.hindu.com/2008/04/28/stories/2008042860970300.htm. பார்த்த நாள்: 2009-07-14. 
 2. "Prime Minister to inaugurate ashram's research centre". The Hindu. November 24, 2004. Archived from the original on 2005-01-17. https://web.archive.org/web/20050117091524/http://www.hindu.com/2004/11/24/stories/2004112402900300.htm. பார்த்த நாள்: 2009-07-14. 
 3. "Directory of Scientific and Industrial Research Organization". Ministry of Science and Technology, Govt of India (November 2007). பார்த்த நாள் 2009-07-14.
 4. Tankha, Upendra (March 11, 2002). "Between religion and spirituality". The Hindu. Archived from the original on 2003-10-09. https://web.archive.org/web/20031009111513/http://www.hindu.com/thehindu/mp/2002/03/11/stories/2002031100440200.htm. பார்த்த நாள்: 2009-07-14. 
 5. நதீரா (2017 மே 25). "உலகை ஒளிமயமாக்கும் சாந்திகிரி ஆசிரமம்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 29 மே 2017.
 6. "Santhigiri Ashram". India9.com (July 14, 2005). பார்த்த நாள் 2009-07-15.
 7. Devraj, Ranjit (July 2, 2005). "Herbs and hysteria". Asia Times. Archived from the original on 2011-06-04. https://web.archive.org/web/20110604045155/http://www.atimes.com/atimes/South_Asia/GG02Df01.html. பார்த்த நாள்: 2009-07-15. 
 8. "Bulgarian princess visits ashram". The Hindu. November 3, 2009. Archived from the original on 2009-05-24. https://web.archive.org/web/20090524072500/http://www.hindu.com/2008/11/03/stories/2008110360650300.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
 9. "Santhigiri Ashram to organise free medical camp". The Hindu. April 5, 2006. Archived from the original on 2008-02-12. https://web.archive.org/web/20080212060024/http://www.hindu.com/2006/04/05/stories/2006040502970200.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
 10. "International conference on health in Kottayam". The Hindu. December 14, 2004. Archived from the original on 2004-12-26. https://web.archive.org/web/20041226042604/http://www.hindu.com/2004/12/14/stories/2004121416890300.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
 11. "Blind man's buff - Interview with Rajeev Anchal". Rediff.com. http://www.rediff.com/entertai/1998/mar/16guru.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
 12. "Study materials, uniforms distributed". The Hindu. May 7, 2009. Archived from the original on 2008-05-12. https://web.archive.org/web/20080512002343/http://www.hindu.com/2008/05/07/stories/2008050758890300.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
 13. "Santhigiri Ashram for an all-round health". The Tribune (Chandigarh). March 23, 2002. http://www.tribuneindia.com/2002/20020324/ncr1.htm. பார்த்த நாள்: 2009-07-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திகிரி&oldid=3243546" இருந்து மீள்விக்கப்பட்டது