சாங்ஷா
சாங்ஷா
长沙市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
அடைபெயர்(கள்): "星城" (விண்மீன் நகரம்) | |
குறிக்கோளுரை: "心忧天下,敢为人先" (உலகை நேசி, முன்னோடியாகத் துணி) | |
ஹுனான் மாகாணத்தில் சாங்ஷா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°13′40″N 112°56′20″E / 28.2277765095°N 112.9388453666°E | |
நாடு | சீனா |
மாகாணம் | ஹுனான் |
நகராட்சி | யுயேலு மாவட்டம் |
கோட்டங்கள் | 9 நாட்டளவிலான கோட்டங்கள், 172 நகராட்சிப் பிரிவுகள் |
அரசு | |
• கட்சிச் செயலாளர் | யீ லியாங்கோங் |
• நகரத்தந்தை | ஹு எங்குவா |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 11,819 km2 (4,563 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 738 km2 (285 sq mi) |
ஏற்றம் | 63 m (207 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மாவட்டநிலை நகரம் | 74,31,800 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 40,20,000 |
• நகர்ப்புற அடர்த்தி | 5,400/km2 (14,000/sq mi) |
• பெருநகர் | 45,97,134 |
• சீனாவில் வரிசையெண் | 19வது |
இனத்தவர் | |
• ஹான் | 99.22% |
• சிறுபான்மையினர் | 0.78% |
நேர வலயம் | ஒசநே+8 (சீனா சீர்தர நேரம்) |
அஞ்சல் குறியீடு | 410000 |
இடக் குறியீடு | 0731 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-HN-01 |
மொ.உ.உ மொத்தம் (2016) | CNY 931 பில்லியன் (US$139 billion)[2] |
மொ.உ.உ தனிநபரின் (2016) | CNY 127,346 (US$19,025) |
மொ.உ.உ வளர்விகிதம் | 10.7% |
வண்டியுரிமம் | 湘A 湘O (காவல் மற்றும் அதிகாரிகள்) |
நகர மரம் | கற்பூர மரம் |
நகர மலர் | புதர் மலர்ச்செடியினம் |
மொழிகள் | மாண்டரின், சாங்ஷா வட்டாரமொழி |
இணையதளம் | www.changsha.gov.cn |
சாங்ஷா | |||||||||||||||||||||||||||||||||||
"சாங்ஷா" எளிய சீனத்தில் (மேல்) , வழமையான சீனத்தில் (கீழே) | |||||||||||||||||||||||||||||||||||
நவீன சீனம் | 长沙 | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 長沙 | ||||||||||||||||||||||||||||||||||
Literal meaning | "Long Sandbar" | ||||||||||||||||||||||||||||||||||
|
சாங்ஷா (Changsha, எளிய சீனம்: 长沙) சீன மக்கள் குடியரசின் தென்மத்தியில் உள்ள ஹுனான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். 11,819 கிமீ2 (4,563 ச.மை) பரப்பில் அமைந்துள்ள இந்த நகரத்தின் எல்லைகளாக வடக்கில் யுயெயாங், யியாங் நகரங்களும் மேற்கில் லௌதியும் தெற்கில் சியாங்டான், ஷுஷுவும் கிழக்கில் ஜியாங்சி மாகாணத்தின் யிசூன், பிங்சியாங் நகரங்களும் உள்ளன. 2010 கணக்கெடுப்பின்படி, சாங்ஷாவில் 7,044,118 பேர் வசிக்கின்றனர். இது மாகாணத்தின் மக்கள்தொகையில் 10.72% ஆகும். [3] இது சாங்-சூ-டான் நகரத்தொகுப்பின் அங்கமாகும்.
சாங்ஷா ஜியாங் ஆற்றுப் பள்ளத்தாக்குச் சமவெளியில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் லுவோக்சியோ மலைகளும் மேற்கில் ஊலிங் மலைகளும் வடக்கில் டோங்டிங் ஏரியும் தெற்கில் எங்சான் மலைகளும் அமைந்துள்ளன. இங்கு பருவப் பெயர்ச்சிக் காற்று சார் ஈரப்பதமுள்ள மிதவெப்ப மண்டல வானிலை நிலவுகின்றது. ஆண்டின் சராசரி வெப்பநிலை 16.8 முதல் 17.3 °C வரையும் (62.2 - 63.1 °F) ஆண்டுக்கான மழையளவு 1,358.6 முதல் 1,552.5 மிமீ வரையும் (53.49 முதல் 61.12 அங் வரை) உள்ளது.[4]
சாங்ஷாவின் வரலாறும் பண்பாடும் 3,000 ஆண்டுகள் தொன்மையானது.[5] ஆன் அரசமரபு (கி.மு 206 – கி.பி 220) ஆட்சியில் சாங்ஷா மாகாணத் தலைநகராக விளங்கியது. பத்து இராச்சியங்களின் காலத்தில் (907–951) சூ இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளது. பொதுயுகத்திற்கு முன்னதான இரண்டாம் நூற்றாண்டு காலத்து அரக்குக் கைவினைப்பொருட்களும் பட்டு உரைநூல்களும் மாவங்குடுயில் கண்டறியப்பட்டுள்ளன. இது இந்நகரத்தின் பண்பாட்டுத் தொன்மைக்கும் கைவினை மரபுகளுக்கும் சான்றாக உள்ளது.
1904இல் சாங்ஷா வெளிநாட்டு வணிகத்திற்கு அறிமுகமானது. இங்கு ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் பெருமளவில் குடியேறினர். இங்குதான் மா சே துங் பொதுவுடமைக் கொள்கைக்கு மாறினார். சீன-சப்பானியப் போர்களின்போது (1931–1945) இங்குதான் முதன்மையான சண்டைகள் நடந்தேறின; சிறிதுகாலத்திற்கு சப்பானியர் கைவசப்படுத்தியிருந்தனர். தற்காலத்தில் சாங்ஷா சீனாவின் முதன்மையான வணிக, தயாரிப்பு, போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Cox, Wendell (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 22.
- ↑ "Statistical Communiqué of Changsha on the 2016 National Economic and Social Development (Chinese·中文)". Archived from the original on 17 ஏப்பிரல் 2016.
- ↑ "湖南省第六次全国人口普查 - 湖南省第六次全国人口普查主要数据公报[1]". Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016.
- ↑ Changsha.gov: Geography of Changsha பரணிடப்பட்டது 19 செப்டெம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Complete list of national famous historical and cultural cities (promulgated by State Council of China): Chinese-EconomicsNet.com (2015-9-1) பரணிடப்பட்டது 4 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் or Netease (2015-9-1) பரணிடப்பட்டது 17 செப்டெம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சாங்ஷா
- Changsha Interactive Map, Information on Locations
- Changsha Government website பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Changsha National High-Tech Industrial Development Zone பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம்