சிறுபான்மையினர்
Jump to navigation
Jump to search
சிறுபான்மையினர் என்போர் ஒரு நாட்டிலோ, அதற்குட்பட்ட பகுதிகளிலோ இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதாச்சார அடிப்படையில் குறைந்த அளவிலோ வாழ்பவர்கள். உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். வெகு சில நாடுகளே தங்கள் நாட்டில் ஒரே இனத்தை, பண்பாட்டை, மொழியைப் பாவிக்கிற மக்களைக் கொண்டுள்ளன. சிறுபான்மையினர் பூர்வகுடிகளாகவோ, குடிபெயர்ந்தோராகவோ இருக்கலாம். எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்தாலும், அவர்களும் தங்கள் வாழும் பகுதியின் குடிமக்களே என்பதால், பல நாடுகள், பகுதிகள் இவர்களுக்கும் சம உரிமையை வழங்கியுள்ளன. சில நாட்டின் எல்லைகளில் வாழும் பிற நாட்டினரும் சிறுபான்மையினரே.