சத்யேந்திர நாராயண் சின்கா
சத்யேந்திர நாராயண் சின்கா | |
---|---|
பீகாரின் 19வது முதலமைச்சர் | |
பதவியில் 11 மார்ச் 1989 - 6 திசம்பர் 1989 | |
முன்னையவர் | பகவத் ஜா ஆசாத் |
பின்னவர் | முனைவர் ஜெகந்நாத் மிசுரா |
தொகுதி | அவுரங்காபாத் |
பீகாரின் கல்வியமைச்சர்.[1] | |
பதவியில் 18 பிப்ரவரி 1961 – 1 அக்டோபர் 1963 | |
பதவியில் 1 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967 | |
முதலமைச்சர் | பினோதனந்த் ஜா, கே. பி. சஹாய் |
முன்னையவர் | ஆச்சார்ய பத்ரிநாத் வர்மா |
பின்னவர் | கர்ப்பூரி தாக்கூர் |
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான சர்வதேச குழுவின் முன்னாள் தலைவர்.[2] | |
பதவியில் 1977–1987 | |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்.[3] | |
பதவியில் 26 ஜனவரி 1950 – 17 ஏப்ரல் 1952 | |
பிரதம அமைச்சர் | ஜவகர்லால் நேரு |
மாநிலம் | பீகார் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | முதலாவது மக்களவை |
அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1961 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | இரமேஷ் ப்ரிஅசாத் சிங் |
பதவியில் 1971–1989 | |
முன்னையவர் | முத்ரிகா சிங் |
பின்னவர் | இராம் நரேஷ் சிங் |
பீகாரின் வேளாண்மைத் துறை அமைச்சர்.[4] | |
பதவியில் 18 பிப்ரவரி 1961 – 1 அக்டோபர் 1963 | |
பதவியில் 1 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967 | |
முதலமைச்சர் | பினோதனந்த் ஜா, கே. பி. சஹாய் |
ஜனதா கட்சியின் தலைவர், பீகார் | |
பதவியில் 1973–1984 | |
தேசியத் தலைவர் | சந்திரசேகர் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | இல்லை |
பீகாரின் நபிநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962–1967 | |
பதவியில் 1967–1969 | |
முன்னையவர் | முனைவர் அனுக்கிரகா நாராயண் சிங் |
பின்னவர் | மகாவீர் பண்டிட் அகேலா |
பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1961–1962 | |
முன்னையவர் | கமலா ராய். சின்கா இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றார். |
பின்னவர் | அப்துல் கப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொய்வான், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய பீகார், இந்தியா) | 12 சூலை 1917
இறப்பு | 4 செப்டம்பர் 2006 பட்னா, பீகார், இந்தியா | (அகவை 89)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1940–1969,1984–2006) நிறுவன காங்கிரசு (1969–1977) ஜனதா கட்சி (1977–1984) |
துணைவர் | கிஷோரி சின்ஹா |
பிள்ளைகள் | நிகில் குமார் |
வாழிடம்(s) | சோபன், பட்னா, பீகார் |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
புனைப்பெயர்(s) | சோட்டா சாஹேப், சத்யேந்திர பாபு, எஸ்என் சின்கா |
சத்யேந்திர நாராயண் சின்கா (Satyendra Narayan Sinha) (12 ஜூலை 1917 - 4 செப்டம்பர் 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும், விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவருமாவார். நெருக்கடி நிலை காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் 'முழுமையான புரட்சி இயக்கத்தின்' முன்னணி நபராகவும்,[5] பீகாரின் முதல்வராகவும் மூத்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், ஏழு முறை வென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாவார்]].[6][7][8]
பின்னணி
[தொகு]சத்யேந்திர நாராயண் சின்கா பீகாரின், அவுரங்காபாத் மாவட்டம், பொய்வானில் ஒரு பிரபுத்துவ அரசியல் குடும்பத்தில் பிறந்தார். இவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர். இவர், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முதல் துணை முதல்வராகவும் நிதியமைச்சருமாவார். [9]
அலகாபாத்தில் தனது மாணவப் பருவத்தை[10] லால் பகதூர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் கழித்தார். அரசியல் சூழலில் வளர்ந்த சின்கா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து இலக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர் , பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஆனால் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர தனது வேலையை விட்டுவிட்டு 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவி திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]சுதந்திரத்திற்குப் பிறகு இவர் 1950இல் பீகாரிலிருந்து தற்காலிக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் காலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இளம் துருக்கியப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.[11]
சொந்த வாழ்க்கை
[தொகு]நாட்டின் முதல் சத்தியாகிரக இயக்கமான சம்பரண் சத்தியாகிரக இயக்கத்தில் இராசேந்திர பிரசாத்துடன் சேர்ந்து[12] மகாத்மா காந்திக்கு நெருக்கமாக உதவி செய்த அனுக்ரா நாராயண் சின்கா இவரது தந்தையாவார்.[13][14][15] இவரது மனைவி கிஷோரி சின்கா வைசாலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவருடைய மருமகள் சியாமா சிங் அவுரங்காபாத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.[16] முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவரது மகன் நிகில் குமார்[17][18] இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஆளுநராகவும், கேரள ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ministers of Education". Central Advisory Board of Education. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 10 July 2007.
- ↑ "Lok Sabha Debates". பார்க்கப்பட்ட நாள் 10 July 2007.
- ↑ "Some Facts of Constituent Assembly". Parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 22 December 2013.
- ↑ [1]
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Official website. "PM condoles passing away of Satyendra Narayan Singh". PM's Messages. Archived from the original on 13 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
- ↑ Magnificent Bihar. "Nikhil Kumar on Bihar". Archived from the original on 8 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-20.
- ↑ Kamat. "Biography: Anugrah Narayan Sinha". Kamat's archive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2006.
- ↑ "SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage". PATNA DAILY OFFICIAL WEBSITE. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
- ↑ "SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage". PATNA DAILY OFFICIAL WEBSITE. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011."SN Sinha -spent his student years under Lal Bahadur Shastri's (future PM) tutelage".
- ↑ "Remembering the first Satyagraha: 100 years of Champaran". Hindustan Times. 14 April 2017.
- ↑ "First Bihar Deputy CM cum Finance Minister;Dr. A N Sinha". Indian Post. official Website. பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
- ↑ [2]
- ↑ "First Bihar Deputy CM cum Finance Minister;Dr. A N Sinha". Indian Post. official Website. பார்க்கப்பட்ட நாள் 20 May 2008.
- ↑ A.J. Philip. "A gentleman among politicians". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2006-09-05.
- ↑ Home Page on the Parliament of India's Website]. "Member Bio Data". Loksabha. Archived from the original on 19 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2006-09-25.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Official Website. "Nagaland Governor". Raj Bhavan. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
- ↑ "Nikhil Kumar sworn in as Governor of Kerala". The Hindu. 23 March 2013.
ஆதாரங்கள்
[தொகு]- Mere Sansmaran, an autobiography by Dr. Anugrah Narayan Sinha
- Anugrah Abhinandan Granth samiti. 1947 Anugrah Abhinandan Granth. பீகார்.
- Anugrah Narayan centenary year celebration Committee. 1987. Bihar Bibhuti : Vayakti Aur Kriti , பீகார்.
- Bimal Prasad (editor). 1980. A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan. Oxford University Press, தில்லி.