அனுக்ரா நாராயண் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா
பீகார் மாகாணத்தின் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்
பதவியில்
1937 சூலை 20 – 1939 அக்டோபர் 31
முன்னையவர்நிறுவப்பட்ட பதவி
பின்னவர்ஆளுநரின் ஆட்சி
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
பதவியில்
1946 திசம்பர் 9 – 1950 சனவரி 26
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவி நிறுத்தப்பட்டது
தொகுதிஅவுரங்காபாத்
பீகார் முதலாவது துணை முதல்வர் மற்றும் பீகார் நிதி அமைச்சர்
பதவியில்
1946 ஏப்ரல் 2 – 1957 சூலை 5
முதல் அமைச்சர்சிறி கிருட்டிணா சின்கா
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்எவருமில்லை
மத்திய சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1926–1930
தலைமை ஆளுநர்தி ஏர்ல் ஆஃப் ஹாலிஃபாக்ஸ்
முன்னையவர்மகாராஜா ராமேசுவர் சிங்
பின்னவர்எவருமில்லை
மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினர்
பதவியில்
1923–1926
தலைமை ஆளுநர்ஏர்ல் ஆப் ரீடிங்
முன்னையவர்அம்பிகா பிரசாத் சின்கா
பின்னவர்பத்ரி லால் ரஸ்தோகி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1887-06-18)18 சூன் 1887
அவுரங்காபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போது பீகார், இந்தியா)
இறப்பு5 சூலை 1957(1957-07-05) (அகவை 70)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்இரு மகன்கள்
முன்னாள் கல்லூரிபாட்னா பலகலைகழகம்
மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
வேலைவழக்கறிஞர்
தேசியவாதம்
அரசியல்வாதி
கல்வி
நிர்வாகி
புனைப்பெயர்(s)பீகார் விபூதி, பாபுசாகேப்
MERAY SANSMARAN
As of 12 July, 2006
மூலம்: [1]

பீகார் விபூதி என்று அழைக்கப்படும் முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா (Dr. Anugrah Narayan Sinha) ( 1887 சூன் 18 - 1957 சூலை 5) இவர் ஓர் இந்திய தேசியவாத அரசியல்வாதியும், சம்பரண் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றவரும் மற்றும் காந்தியவாதியுமாவார். மேலும் இவர், நவீன பீகாரை கட்டமைத்தவர்களில் ஒருவராவார்.[1] பீகாரின் முதல் துணைத் முதல்வராகவும்,[2] பீகார் மாநிலத்தின் முதல் நிதியமைச்சராகவும் இருந்தார். (1946-1957).[3] மேலும், இவர் இந்திய அரசியலமைப்புச் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பை எழுதத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் அதன் முதல் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார். தொழிலாளர், உள்ளாட்சி, அரசு, பொதுப்பணி, வழங்கல் மற்றும் விலை கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல இலாகாக்களையும் இவர் வகித்தார்.[4]

முனைவர் அனுக்ரா நாராயண் சின்கா 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில்

காந்தியின் தோழர்[தொகு]

பாபு சாகேப் என்று அன்பாக அழைக்கப்படும் ஏ.என். சின்கா, சுதந்திர போராட்ட காலத்தின் போது மகாத்மா காந்தியின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.[5] மேலும் பீகார் கேசரி முனைவர் சிறி கிருட்டிணா சின்காவுடன் பீகாரில் காந்திய இயக்கத்தை வழிநடத்த பணியாற்றினார் [6]

துணை முதலமைச்சர்[தொகு]

இராஜேந்திர பிரசாத்துக்குப் பிறகு பீகாரில் இருந்து இந்திய சுதந்திர இயக்கத்தின், முன்னணி தேசியவாதிகளில் ஒருவரான இவர் மாநில சட்டசபையில் காங்கிரசு கட்சியின் துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1952 இல் நடைப்பெற்ற பீகார் பொதுத் தேர்தலில் காங்கிரசு கட்சி அதிக அளவில் வெற்றி பெற்ற போது மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார். ஜெய் பிரகாஷ் நாராயண் தனது அமாரே அனுக்ரா பாபு என்ற கட்டுரையில், "நவீன காலங்களில், நமது அனுக்ரா பாபுவைப் போலவே பீகாரிற்கு கடன்பட்டிருப்பது அரிதான ஒரு சிலரே. இவர் நவீன பீகாரை கட்டமைப்பதில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தார். பல ஆண்டுகளாக பீகார் இவரது தலைமையைப் பெற்றது. பீகார் நிலத்தின் இந்த பெரிய மகனுக்கு இந்த மாநில மக்கள் கடன்பட்டிருக்கிறார்கள்." என்று எழுதினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அனுக்ரா நாராயண் சின்கா விசுவேசுவர் தயால் சின்காவுக்கு 1887 சூன் 18 அன்று பீகாரின் முந்தைய கயா மாவட்டத்தின் (இன்று அவுரங்காபாத் என்று அழைக்கப்படுகிறது) போவன் கிராமத்தின் குடும்பத்தில் பிறந்தார். அவர் ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர், அவரது இளைய மகன் சத்யேந்திர நாராயண் சின்ஹா பீகார் முதல்வரானார். ஒரு சிறுவனாக இருக்கும்போதே இவரது தேசபக்தி நற்பண்புகள் விளங்கின. தனது ஆரம்பக் கல்வியை கிராமப் பள்ளியில் பெற்றார். இளையோர் பள்ளியிலிருந்து பட்டப்படிப்பு வரை [8]

ஒவ்வொரு தேர்விலும் இவர் முதலிடத்தில் இருந்தார், 1914இல் புகழ்பெற்ற கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றிம் முதுகலைப் பட்டம் பெற்றார். இராஜேந்திர பிரசாத் மற்றும் பாட்னா கல்லூரியின் சாணக்யா சங்கம் ஆகியோரால் நிறுவப்பட்ட பீகார் மாணவர் மாநாட்டின் செயலாளராக ஆனார். இவர் பாட்னா காங்கிரசில் தன்னார்வலராக பணியாற்றினார். அதன் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். 1915 ஆம் ஆண்டில், பாகல்பூரில் உள்ள டி.என்.பி கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1916வரை ஒரு சிறந்த பேராசிரியராக அறியப்பட்டார். பாகல்பூர் வெள்ளத்தால் மூழ்கியபோது இவர் நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்தார். இவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வெற்றிகரமாக சட்ட பயிற்சியையும் செய்யத் தொடங்கினார்.

சுதந்திர இயக்கம்[தொகு]

(இடதிலிருந்து வலது) அனுக்ரா பாபுவின் இல்லத்தில் இராஜேந்திர பிரசாத், ஜவகர்லால் நேரு, அனுக்ரா நாராயண் சின்கா மற்றும் சிறி கிருட்டிணா சின்கா

1917ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் அழைப்பு ஏற்று, சம்பரண் சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர தனது செழிப்பான சட்ட நடைமுறையை விட்டுவிட்டார்.[5] சம்பரண் சத்தியாகிரகம் இந்தியாவில் காந்திய முறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அத்தியாயத்தை உருவாக்கியது. மேலும் இவர் தேசிய அரங்கிற்குத் தள்ளப்பட்டார். இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக முனைவர் இராஜேந்திர பிரசாத் நிறுவிய பீகார் வித்யாபீடத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4]

இவரது முதல் மாணவர்களில் இளம் ஜெய்பிரகாஷ் நாராயண் இருந்தார். 1922 இல் இவர் கயா காங்கிரசு மாநாட்டை ஏற்பாடு செய்தார். அடுத்த ஆண்டில் இவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரானார். பாட்னா நகராட்சியின் தலைவராக இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, துணைத் தலைவராக அனுக்ரா நாராயண் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பின்னர், கயா மாவட்ட வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அப்பதவியை விட்டு வெளியேறினார். 1930 ஆம் ஆண்டில் காந்தி தலைமையிலான சட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் பின்னணியில் இவர் முக்கிய சக்தியாக இருந்தார். இது இந்திய தேசியவாத வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.[8]

இவரது தேசபக்தி இவருக்கு 1933–34ல் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது. 1934 சனவரி 15 ஆம் தேதி நேபாள-பீகார் பூகம்பம் ஏற்பட்டபோது, இராஜேந்திர பிரசாத் மற்றும் சின்கா ஆகியோரின் தலைமையில் 1934 சனவரி 17 அன்று பீகார் மத்திய நிவாரணக் குழு அமைக்கப்பட்டபோது அதன் துணைத் தலைவரானார். மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை இவர் மேற்கொண்டார் . மேலும் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் விரிவான மற்றும் திறமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டன. 1935 ஆம் ஆண்டில் சகாபாத்-பாட்னா தொகுதியில் இருந்து மத்திய அமைப்பு உறுப்பினராக மிகப்பரிய வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1936 இல் பீகார் சட்டமன்றத்தில் உறுப்பினரானார் . 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ், பிரிட்டிசார் வழங்கிய மாகாண சுயாட்சியில் அமைந்த முதல் காங்கிரசு அமைச்சகத்தில் 1937 சூலை 20 அன்று பதவியேற்றார். இவர் பீகார் மாகாணத்தின் துணை முதல்வராகவும் மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினையில் இவரும் சிறி கிருட்டிணா சின்காவும் அப்போதைய ஆளுநர் மாரிஸ் கார்னியர் ஹாலட்டுடன் உடன்படவில்லை, இருவரும் பதவியை துறக்க முடிவெடுத்தனர். ஆளுநர் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது, இவர்கள் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்கினர். ஆனால் 1939ஆம் ஆண்டில், நாட்டின் அனைத்து காங்கிரசு அரசாங்கங்களையும் போலவே, இந்திய மக்களின் அனுமதியின்றி இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியபோது இவர்கள் மீண்டும் தங்கள் பதவியை வெட்டு வெளியேறினர்.[4]

1940-41ல் சத்தியாக்கிரகத்திற்கான காந்தியின் அழைப்புக்கு பதிலளித்த முதல் [8] சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவராவார். 1942 இல் இவர் பிரிட்டிசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு[9] அசாரிபாக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1944 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட இவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இவர் நிதி அமைச்சராகவும் பீகார் துணை முதல்வராகவும் பீகாரின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்தார்.[8]

நவீன பீகாரின் வளர்ச்சியில் பங்கு[தொகு]

இவர் தேசியவாத இராசேந்திர பிரசாத் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் அவரது நெருங்கிய சகாவான பீகார் கேசரி முதல்வர் சிறி கிருட்டிணா சின்கா ஆகியோருடன் சேர்ந்து, நவீன பீகாரை கட்டமைத்த கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[10]<ref>Bihar:First Five Year plan. "First Finance Minister". Archived from the original on 18 August 2010. பார்க்கப்பட்ட நாள் 5 December 2003.

மேற்கோள்கள்[தொகு]

 1. 'Aim to develop institute into university' HARD TALK/ DM Diwakar பரணிடப்பட்டது 2018-08-18 at the வந்தவழி இயந்திரம். Telegraphindia.com (7 November 2011). Retrieved on 7 December 2018.
 2. Nalin Verma. (10 April 2014) Goodbye to good life for heirloom பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம். Telegraphindia.com. Retrieved on 7 December 2018.
 3. "Members of the Constituent Assembly Bihar". Parliament of India. பார்க்கப்பட்ட நாள் 20 May 2005.
 4. 4.0 4.1 4.2 "Eminent Congressman-Anugrah Narayan Sinha". Kamat Research database. Archived from the original on 10 June 2007. பார்க்கப்பட்ட நாள் 25 June 2007.
 5. 5.0 5.1 "SATYAGRAHA LABORATORIES OF MAHATMA GANDHI". aicc.org.in. Archived from the original on 6 December 2006. பார்க்கப்பட்ட நாள் 8 December 2006.
 6. "Great freedom Fighters". Kamat's archive. Archived from the original on 20 February 2006. பார்க்கப்பட்ட நாள் 25 February 2006.
 7. Shree Shankar Sharan (13 December 2005). "The Better Man Has Won". India Rights Online. Archived from the original on 27 May 2013.
 8. 8.0 8.1 8.2 8.3 "Anugrah babu-first Bihar Deputy CM". Indian Post. பார்க்கப்பட்ட நாள் 16 December 2004.
 9. First Finance cum Labour Minister. Rajendra Prasad's archive.
 10. A.J. Philip (7 September 2006). "A gentleman among politicians:Anugrah babu-one of the makers of Bihar". The Tribune. India. Archived from the original on 13 October 2006. பார்க்கப்பட்ட நாள் 5 September 2006.

குறிப்புகள்[தொகு]

 • Anugrah Narayan Sinha, Meray Sansmaran, an autobiography
 • Anugrah Abhinandan Granth samiti. 1947 Anugrah Abhinandan Granth. Bihar.
 • Anugrah Narayan Centenary Year Celebration Committee. 1987. Bihar Bibhuti : Vayakti Aur Kriti, Bihar.
 • A.J. Philip, A gentleman among politicians
 • Dr. Rajendra Prasad, Dr. Rajendra Prasad, Correspondence and Select Documents
 • R. R. Diwakar, Bihar Through The Ages
 • Bihar State Archives, Documentaries and Articles on Dr. A N Sinha
 • Bameshwar Singh, Congress ministries under the High Command shadow,1988
 • Bimal Prasad (editor). 1980. A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan. Oxford University Press, தில்லி.
 • P. S. Appu, The All India Services: Decline, Debasement and Destruction

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anugrah Narayan Sinha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுக்ரா_நாராயண்_சின்கா&oldid=3760388" இலிருந்து மீள்விக்கப்பட்டது