க. வெங்கடசுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சம் வெங்கடசுப்பையா
பிறப்பு23 ஆகத்து 1913 (1913-08-23) (அகவை 110)
மைசூர், மைசூர் இராச்சியம்
புனைபெயர்ஜி.வி
தொழில்எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், ஆசிரியர்
காலம்20ஆம் நூற்றாண்டு
கருப்பொருள்அகராதியியல், கன்னட இலக்கணம், ஆசிரியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்மசிறீ
சாகித்திய அகாதமி விருது
பம்பா விருது
துணைவர்இலட்சுமி
இணையதளம்
G. Venkatasubbiah

கஞ்சம் வெங்கடசுப்பையா (Ganjam Venkatasubbiah) [1] (பிறப்பு : 1913 ஆகத்து 23) இவர் ஓர் கன்னட எழுத்தாளரும், இலக்கணவாதியும், ஆசிரியரும், அகராதியியலாரரும் மற்றும் விமர்சகரும் ஆவார். இவர் எட்டு அகராதிகளைத் தொகுத்துள்ளார். கன்னடத்தில் அகராதி அறிவியலில் எதிர்கால வளர்ச்சிக்கான பணிகளை எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் திருத்தியுள்ளார். மேலும் பல ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் கன்னட சாகித்ய அகாதமி விருது மற்றும் பம்பா விருதைப் பெற்றவராவார். கன்னட அகராதியியல் உலகில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. இகோ கன்னடா என்ற இவரது படைப்பு ஒரு சமூக-மொழியியல் அகராதியாகும். இது கன்னட சொற்றொடர்கள், பயன்பாடுகள், சிறப்பியல்பு முறைகள், சொற்றொடர்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையை உள்ளடக்கியது. மேலும் மொழியியலாளர்களுக்கும் சமூகவியலாளர்களுக்கும் ஒரு குறிப்பாக செயல்படுகிறது. கன்னட அகராதி அறிவியல் பற்றிய கன்னட அகராதியான சாத்திர பரிச்சயா என்ற தலைப்பில் வெங்கடசுப்பையா மிகவும் பிரபலமானவர். இது முதல் கன்னட அகராதி ஜெர்மன் பாதிரியாரும், இந்தோலாஜிஸ்டுமான ரெவரெண்ட் ஃபெர்டினாண்ட் கிட்டால் 1894 இல் எழுதியது.சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது. [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இளங்கலை (கௌரவம் ) இரண்டாம் ஆண்டு மகாராஜா கல்லூரி குழு பி.எம்.சிறீகாந்தையா, எஸ். சிறீகாந்தா சாத்திரி மற்றும் ஜி. வெங்கடசுப்பையா ஆகியோரைக் காட்டும் புகைப்படம்

வெங்கடசுப்பையா 1913 ஆகத்து 23 அன்று தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் சிறீரங்கப்பட்டணத்திலுள்ள கஞ்சம் என்ற கிராமத்தில் எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். [3] இவரது தந்தை கஞ்சம் திம்மன்னையா புகழ்பெற்ற கன்னடர் மற்றும் சமஸ்கிருத அறிஞராவார். பழைய கன்னடம் மீதான அன்பை வெங்கடசுப்பையாவை ஊக்குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இவரது ஆரம்ப பள்ளிப்படிப்பு பன்னூர் மற்றும் மதுகிரி நகரங்களில் இருந்தது. தனது தந்தையின் அரசாங்க வேலை காரணமாக அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் வெங்கடசுப்பையா தனது தந்தையை பின்பற்றி ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்குப் பின்தொடர வேண்டியிருந்தது. 1930களின் முற்பகுதியில், வெங்கடசுப்பையாவின் குடும்பம் மைசூர் நகரத்திற்கு இடம் பெயர்ந்தது. இங்கே வெங்கடசுப்பையா மைசூரில் உள்ள யுவராஜா கல்லூரியில் தனது இடைநிலை படிப்புக்காக சேர்ந்தார். அங்கு இவர் கே.வி.பட்டப்பா ( குவெம்பு ) என்பவரின் செல்வாக்கின் கீழ் இருந்தார். பின்னர் வெங்கடசுப்பையா மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் தனது இளங்கலை (கௌரவம்) பட்டம் பெற்றார். இவர் தேர்ந்தெடுத்த பாடங்களில் பண்டைய வரலாறு, சமசுகிருதம் மற்றும் பழைய கன்னடம் ஆகியவை அடங்கும். இங்கே இவர் பம்பா பாரதத்தை கற்பித்த டி.எஸ். வெங்கண்ணையா, தலையங்க அறிவியல் கற்பித்த டி.எல். நரசிம்மாச்சர், காவ்யாமிம்சைக் கற்பித்த தி. ந. சிறீகாந்தையா மற்றும் கர்நாடக வரலாற்றைக் கற்பித்த எஸ். சிறீகாந்த சாத்திரி ஆகியோரின் கீழ் இருந்தார். [4] வெங்கடசுப்பையா தனது முதுகலையை 1936–38 க்கு இடையில் முடித்து பல்கலைக்கழக தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

கல்வியாளர்[தொகு]

கன்னடத் துறையில் விஜயா கல்லூரியில் ஆசிரியராக சேருவதற்கு முன்பு வெங்கடசுப்பையா மாண்டியா, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மற்றும் பெங்களூருவிலுள்ள பெங்களூர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் கற்பித்தார். இந்த ஆண்டுகளில், வெங்கடசுப்பையா தனது நண்பரும் சகாவுமான இராமச்சந்திர சர்மாவை தனது கன்னட கவிதைத் தொகுப்பை புத்தக வடிவில் வெளியிட ஊக்கப்படுத்தினார். இது கோபாலகிருஷ்ணா அடிகா மற்றும் எஸ். ஆர் எகுண்டி ஆகியோரின் முன்னுரையுடன் ஹிருதயகீத் என்ற தலைப்பில் வெளிவந்தது. விஜயா கல்லூரியில், உத்சாகா என்ற மாணவர் பத்திரிகையைத் தொடங்கியதற்காக இவர் நினைவு கூரப்படுகிறார். இவர் ஓய்வுபெறுவதற்கு முன்பு அந்த கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மைசூர் பல்கலைக்கழக கல்வி அமைப்பு மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

இலக்கிய பங்களிப்புகள்[தொகு]

எட்டு தொகுதிகள் அடங்கிய கன்னட-கன்னட நிகண்டு (அகராதி) உட்பட 10 க்கும் மேற்பட்ட அகராதிகளை வெங்கடசுப்பையா தொகுத்துள்ளார். இந்த அகராதி கனரா வங்கி நிவாரண மற்றும் நலச் சங்கத்தின் பிரெய்ல் டிரான்ஸ்கிரிப்ஷன் மையத்தால் பிரெய்ல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னட நாளேடான பிரஜா வாணியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இகோ கன்னடம் என்ற கட்டுரையை எழுதி வருகிறார். இகோ கன்னடத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் [5] நான்கு தொகுதிகளாக ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. [6] இது ஒரு சமூக அகராதி, இது கன்னட சொற்றொடர்கள், பயன்பாடுகள், சிறப்பியல்புகள் மற்றும் சொற்றொடர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையை உள்ளடக்கியது. சுவர்ண கர்நாடகாவை (கர்நாடக உருவாக்கத்தின் வெள்ளி விழா) குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கிளிஷ்டபாத கோஷா (சிக்கலான கன்னட சொற்களின் அகராதி) என்ற தலைப்பில் ஒரு அகராதியையும் இவர் எழுதியுள்ளார். [7] கன்னட மொழியில் இது முதன்மையானது, இது பல நூற்றாண்டுகளாக மொழி உருவாகியுள்ளதால் கன்னட மொழியின் வழித்தோன்றல், நிறுத்தற்குறிகள், ஒலியன் மற்றும் உருவ வடிவங்கள் போன்ற பல்வேறு மொழி விவரக்குறிப்புகளை உள்ளடக்கியது..

கன்னட அகராதி அறிவியல் குறித்த கன்னட அகராதி 'சாத்திர பரிச்சயா' என்ற தலைப்பில் வெங்கடசுப்பையா நினைவுகூரப்படுகிறார். இது முதல் கன்னட அகராதி ஜெர்மன் பாதிரியாரும் இந்தியவியலாருமான ரெவரெண்ட் பெர்டினாண்ட் கிட்டால் 1894 இல் எழுதியதாகும். [2] [8] 1964 - 1969 க்கு இடையில், கன்னட இலக்கிய மையத்தில் இருந்தபோது, அதன் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். தலைவராக, அரசாங்கத்திடமிருந்து சமூகத்தின் நிதி மானியங்களை அதிகரிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். கன்னட கலைக்களஞ்சியம் திட்டம், கார்வார் மற்றும் சரவணபெலகுளாவில் உள்ள சாகித்ய சம்மேலனம் (இலக்கிய அமைப்பு) மற்றும் கன்னட சாகித்ய பரிசத்தின் மாத இதழான 'கன்னட நுடி' ஆகியவற்றின் ஆசிரியராக ஈடுபட்டார். இந்திய அகராதியியல் அமைப்பின் துணைத் தலைவராக 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்ர். [9] 1998 ஆம் ஆண்டில், ஜப்பான், கன்னடம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை ஆசிய ஆய்வுகள் நிறுவனத்தின் பன்மொழி அகராதி திட்டத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு அகாதமியால் தொடங்கப்பட்ட தெலுங்கு அகராதி திட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிதர் மாவட்ட முதலாவது கன்னட இலக்கிய விழாவின் முதல் தலைவராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற 77 ஆவது அகில பாரத கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.

அங்கீகாரம்[தொகு]

கன்னட இலக்கியம் மற்றும் அகராதி உலகிற்கு வெங்கடசுப்பையாவின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏராளமான வாழ்த்து தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுடன், இவருக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இவரது 60 வது பிறந்தநாளில், இவருக்கு சாகித்யாஜி என்ற தலைப்பில் ஒரு பாராட்டு வழங்கப்பட்டது. இதேபோல், இவரது தொண்ணூறாம் ஆண்டில், சப்தசாகரா என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், இவருக்கு வித்வஜீவிதா என்ற பாராட்டுத் தொகுதி வழங்கப்பட்டது. இது கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மற்றும் டாக்டர் படேகல்லு விஷ்ணுபட்டாவால் திருத்தப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இவரது நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், பெங்களூரில் நடந்த ஒரு கண்காட்சி விழாவில் இவருக்கு சத்தானமனா என்ற மற்றொரு பாராட்டுத் தொகுதி வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் தனது ஆசிரியரான எஸ்.சிறீகாந்த சாத்திரி எழுதிய வரலாறு, இந்தியவியல் மற்றும் தொல்பொருள் தொடர்பான பாடங்களில் ஆங்கிலத்தில் எழுத்துக்களின் தொகுப்பு - சிறீகாந்தாயனா பரணிடப்பட்டது 2020-08-12 at the வந்தவழி இயந்திரம் - என்ற புத்தக வெளியீட்டில் தனது 102 வயதில் வெங்கடசுப்பையா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

நூலியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Venkatasubbaiah deserves Jnanpith: Haranahalli". 20 January 2003. 
  2. 2.0 2.1 Arun, G. V. (2013). ಕನ್ನಡದ ಅರ್ಥವನ್ನು ತಿಳಿಸಿದ ನಾಡೋಜ ಪ್ರೊ. ಜಿ. ವೆಂಕಟಸುಬ್ಬಯ್ಯ (First ). Bangalore: Jwalamukhi Mudranalaya. பக். 1–64. 
  3. "Venkatasubbaiah deserves Jnanpith: Haranahalli". Online Edition of The Hindu, dated 20 January 2003. Archived from the original on 28 January 2005. பார்க்கப்பட்ட நாள் 26 October 2007. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Sastri, S. Srikanta. "G. Venkatasubbaiah – Dr S. Srikanta Sastri | Official Website". www.srikanta-sastri.org. Website Administrator. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Igō Kannaḍa: sāmājika nighaṇṭu. 
  6. "Portraying the life of a lexicographer". Online Edition of The Hindu, dated 25 February 2004 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040625114027/http://www.hindu.com/2004/02/25/stories/2004022501540500.htm. பார்த்த நாள்: 26 October 2007. 
  7. "Expert for permanent lexicography section". Online Edition of The Hindu, dated 2 May 2007 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091102233127/http://www.hindu.com/2007/05/02/stories/2007050204290400.htm. பார்த்த நாள்: 27 October 2007. 
  8. Venkatasubbaiah, G (2013). ಪುರಾಣ ಕಥಾವಳಿಯ ಪ೦ಡಿತ ಜಿ. ತಿಮ್ಮಣ್ಣಯ್ಯನವರು (First ). Bangalore: Hoysalamale Sampadaka Mandali. பக். 1–56. 
  9. K. N. Venkatasubba Rao (25 February 2004). "Portraying the life of a lexicographer". Chennai, India. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
G. Venkatasubbiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வெங்கடசுப்பையா&oldid=3433094" இலிருந்து மீள்விக்கப்பட்டது