சுப்பண்ணா ஆர். ஏகுண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்பண்ணா இரங்கநாத் ஏகுண்டி
தொழில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்
நாடு இந்தியன்
எழுதிய காலம் 1945-1995
இலக்கிய வகை கன்னடம் கவிதை
கருப்பொருட்கள் பல்வகை கருப்பொருள்கள்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சாகித்திய அகாதமி விருது,
தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சோவியத் நாடு விருது.
துணைவர்(கள்) இந்திரா ஏகுண்டி

சுப்பண்ணா ஆர். எகுண்டி (Subbanna R. Ekkundi) (1923-1995) இவர் சாகித்ய அகாடமி விருது, தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சோவியத் ஒன்றிய விருதைப் பெற்ற்றுள்ளார்.

ஆரம்பக் கல்வி[தொகு]

ஏகுண்டி 1923 ஆம் ஆண்டில் ஆவேரி மாவட்டத்தில் இரானேபென்னூரில் பிறந்தார். இவரது தந்தை இரங்கநாத் மற்றும் தாய் இராஜக்கா. சாங்லியில் உள்ள வில்லிங்டன் கல்லூரியில் இலக்கிய மாணவர். வில்லிங்டனில், வி.கே.கோகக் மற்றும் ஆர்.எஸ்.முகலி ஆகியோர் ஏக்குண்டியின் பேராசிரியர்களாக இருந்தனர். கனஅள்ளியைச் சேர்ந்த ஏகுண்டி மற்றும் கங்காதர் வி சித்தல் ஆகியோர் வில்லிங்டனில் வகுப்பு தோழர்களாக இருந்தனர். 1944 ஆம் ஆண்டில், இளங்கலை இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு சுப்பண்ணா ஏகுண்டி, பாங்கிகோட்லாவின் ஆனந்தாசரமம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.

இலக்கியம்[தொகு]

1992 ஆம் ஆண்டில், கன்னடத்தில் பாக்குலாடா ஹூவுகலு என்ற இவரது சிறந்த கவிதைப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி மற்றும் கர்நாடக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் இந்தோ-சீனா போரின் போது எழுதப்பட்ட இவரது கவிதை இலதக் இராலி நேபா இராலி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது அரசியல் அனுதாபங்கள் பொதுவுடமைக் கட்சியுடன் இருந்தன. ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பல கவிதைகள் மற்றும் சிறுகதை படைப்புகளை எழுதியுள்ளார். [1] இந்திய இலக்கியத்தின் கலைக்களஞ்சியத்தில் உள்ள ஒரு இடுகையால் இவரது படைப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. [2] அரசியலைத் தவிர, இவரது கவிதை முதன்மையாக பாரம்பரிய இந்திய புராண மற்றும் மத கருப்பொருள்களுடன் தொடர்புடையது. இந்து தத்துவஞானிகளான ஆதிசங்கரருக்கும் மந்தனா மிஸ்ரருக்கும் இடையிலான பிரபலமான விவாதத்தைப் பற்றி இவரது உபய பாரதியில் விவரித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

1970 ஆம் ஆண்டில், சோவியத் நாட்டின் விருது வழங்கப்பட்டது. அம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை முடித்தார். இவரது முழுமையான கவிதைகளின் தொகுப்பு 2008 ஆம் ஆண்டில் பெல்லாக்கி இந்து என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டது. [3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]