கே. எம். பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sardar
K. M. Panikkar
Ambassador of India to France
பதவியில்
1956-1959
முன்னவர் Hardit Malik
பின்வந்தவர் N. Raghavan
Ambassador of India to Egypt
பதவியில்
1952-1954
முன்னவர் Asaf Ali Asghar Fyzee
பின்வந்தவர் Ali Yavar Jung
Ambassador of India to China
பதவியில்
20 May 1950 – 12 September 1952
பின்வந்தவர் N. Raghavan
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 3, 1895(1895-06-03)
Travancore, British India (Modern day Kerala, India)
இறப்பு 10 திசம்பர் 1963(1963-12-10) (அகவை 68)
Mysore, Karnataka, India
படித்த கல்வி நிறுவனங்கள் Madras Christian College
University of Oxford
பணி Novelist, journalist, historian, administrator, diplomat

காவலம் மாதவா பணிக்கர் (3 ஜூன் 1895 - 10 டிசம்பர் 1963) [1] [2] இவர் ஓர் இந்திய அரசியல் பிரமுகரும், அரசு தூதரும் ஆவார். மேலும் பேராசிரியர், செய்தித்தாள் ஆசிரியர், வரலாற்றாசிரியர் மற்றும் நாவலாசிரியர் என்று பன்முக ஆளுமைமிக்கவராக விளங்கினார். [3] பிரிட்டிஷ் இந்தியப் பேரரசில் ஒரு சுதேச மாநிலமான திருவிதாங்கூரில் பிறந்த இவர் மெட்ராஸிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1925 இல் இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியரானார். பின்னர், அவர் சேம்பர் ஆஃப் பிரின்சஸின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து பாட்டியாலா மாநிலத்திற்கும் பின்னர் பிகானேர் மாநிலத்திற்கும் வெளியுறவு அமைச்சராக செயல்ப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 1947 ஐ.நா பொதுச் சபையின் அமர்வில் சர்தார் மாதவ பானிக்கர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின் 1950 ல், இவர் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பணியில் வெற்றிகரமான செயல்பாடுகளால் பதவிக்காலத்திற்குப் பிறகு 1952 இல் எகிப்து நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கபட்டு எகிப்து சென்றார். மேலும் இவர் 1953 இல் அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். பின்பு இவர் பிரான்ஸ்க்கான இந்தியாவின் தூதராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். கூடுதலாக காஷ்மீர் பல்கலைக்கழகம் மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மாதவ பணிக்கர் 1895 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் புத்திலத்து பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் சலாயில் குஞ்சிகுட்டி குஞ்சம்மா [4] ஆகியோருக்குப் மகனாக பிறந்தார். தனது ஆரம்ப பள்ளிகல்வியை கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரி பள்ளி மற்றும் சென்னை பால்ஸ் பள்ளி, வேப்பரியில் பயின்றார்.

பின்னர் இவர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ந்தார். எம்.சி.சி யில் அவர் புதேஷாத் ராமன் மேனன், நந்தியேலத் பத்மநாப மேனன் மற்றும் சதாசிவ ரெட்டி ஆகியோரின் சமகாலத்தவராக இருந்தார்.

வரலாற்று படிப்பை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக ஏப்ரல் 1914 இல் இங்கிலாந்து சென்றார். பிறகு அங்கு படிப்பை முடித்த பணிக்கர் லண்டனின் மிடில் டெம்பில் சட்டபடித்தை படித்து முடித்தார்.

பானிக்கர் தனது சான்றுகளை மாவோ சேதுங்கிற்கு அளிக்கிறார், சி. 1950.

தனது படிப்பை முடித்த பணிக்கர் பிறகு போர்த்துக்கல் மற்றும் ஹாலந்து நாடுகள் மலபாருடன் இருந்த ஈடுபாட்டை ஆய்வு செய்ய போர்ச்சுகல் மற்றும் ஹாலந்துக்குச் பயணித்தார். தனது ஆய்வின் முடிவுகளை மலபார் மற்றும் போர்த்துகீசியம் (1929) மற்றும் மலபார் மற்றும் டச்சு (1931) என்ற இரு புத்தகமாக வெளியிடார். மேலும் பணிக்கர் கேரள சாகித்ய அகாடமியின் முதல் தலைவராக இருந்தார்.

[5] அவர் புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் பாடலாசிரியர் கவலம் நாராயண பானிகரின் தாய்மாமன் ஆவார்.

தொழில்[தொகு]

படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பணிக்கர் முதலில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணி செய்தார். பிறகு. இந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியராக 1925 இல் பத்திரிகை துறைக்கு திரும்பினார்.

விஜயா லட்சுமி பண்டிட் மற்றும் ஜாவ் என்லை ஆகியோருடன் பணிக்கர் (இடது).
  1. "Students' Britannica India". Popular Prakashan (22 April 2018).
  2. "Kavalam Madhava Panikkar - Indian statesman".
  3. Panikkar, Kavalam Madhava, (1895–10 Dec. 1963), Vice-Chancellor Jammu and Kashmir University, Srinagar, since 1961; Ex-Member of Parliament, Rajya Sabha - WHO'S WHO & WHO WAS WHO. doi:10.1093/ww/9780199540891.001.0001/ww-9780199540884-e-55219. http://www.ukwhoswho.com/view/10.1093/ww/9780199540891.001.0001/ww-9780199540884-e-55219?rskey=Ww0vZN&result=1. 
  4. "Sardar K.M. Panikkar - Biography" (2020-04-13). மூல முகவரியிலிருந்து 2020-04-13 அன்று பரணிடப்பட்டது.
  5. An Autobioagraphy, K M Panikkar, (Madras: Oxford University Press, 1977)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._பணிக்கர்&oldid=3022833" இருந்து மீள்விக்கப்பட்டது