கே. என். பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. என். பணிக்கர்
பிறப்பு1936
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், வரலாற்றாசிரியர்

கே. என். பணிக்கர் (K. N. Panikkar) (பிறப்பு: 1936 குருவாயூர், கேரளா) ஓர் இடதுசாரி அரசியல்வாதியும்,[1] வரலாற்றின் மார்க்சிய பள்ளியுடன் தொடர்புடைய இந்திய வரலாற்றாளரும் ஆவார்.[2][3][4][5]

இவர், ஏ கன்சர்ன்ட் இந்தியன்'ஸ் கைடு டு கம்யூனிசம் , ஐ.சி.எச்.ஆர் தொகுதியான டொவேர்ட்ஸ் பிரீடம், 1940: ஏ டாக்குமெண்டரி ஹிஸ்டரி ஆப் த பிரீடம் ஸ்ட்ரகுல் (சுதந்திர போராட்டத்தின் ஒரு ஆவண வரலாறு) உட்பட பல புத்தகங்களை எழுதி பதிப்பித்துள்ளார். .

இவரது வழிமுறைகளும் பொது வாழ்க்கையில் இவர் வெளிப்படுத்திய நிலைப்பாடுகளும் இந்து தேசியவாதத்தின் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைத் தூண்டியுள்ளன. குறிப்பாக 1998 முதல் 2004 வரையிலான பாரதிய ஜனதா கட்யின் காலத்தில் இது அதிகரித்துள்ளது.

அரசு ஆதரவு பெற்றப் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து எழுப்பப்பட்ட புகார்களை ஆராயும் நிபுஇவரை நியமித்தது. குழு 2008 அக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. [6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._பணிக்கர்&oldid=3241400" இருந்து மீள்விக்கப்பட்டது