உள்ளடக்கத்துக்குச் செல்

காவலம் நாராயண பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவலம் நாராயண பணிக்கர்
காவலம் நாராயண பணிக்கர்
பிறப்பு(1928-05-01)1 மே 1928
காவலம், திருவிதாங்கூர்
இறப்பு26 சூன் 2016(2016-06-26) (அகவை 88) [1]
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிகவிஞர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடலாசிரியர்

காவலம் நாராயண பணிக்கர் (Kavalam Narayana Panicker ) (பிறப்பு:1928 மே 1 - இறப்பு: 2016 சூன் 26) இவர் ஒரு இந்திய நாடக ஆசிரியரும், நாடக இயக்குனரும் மற்றும் கவிஞருமாவார். இவர் 26க்கும் மேற்பட்ட பல மலையாள நாடகங்களை எழுதியுள்ளார். பாரம்பரியமிக்க சமசுகிருத நாடகங்களிலிருந்தும், ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்தும் தழுவி எழுதியுள்ளார். அதில் குறிப்பாக மத்தியமாவ்யயோகம் (1979), காளிதாசரின் விக்ரமூர்வசியம் (1981, 1996), சாகுந்தலம் (1982), கர்ணாபரம் (1984, 2001), பாசாவின் உரு பாங்கம் (1988) சுவப்னவாசவதத்தம், மற்றும் தூத்தவாக்யம் (1996) போன்றவை அடங்கும்.[2] இவர் கலை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமான திருவனந்தபுரம் பாசாபாரதியின் அடித்தளத்திற்கு வழிவகுத்த சோபனம் என்ற நாடகக் குழுவின் நிறுவனரும், இயக்குனருமாவார்..[3]

இவருக்கு 1983 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி, இயக்குனருக்கான சங்கீத நாடக அகாடமி விருதைவழங்கியது. 2002இல் வாழ்நாள் சாதனைக்கான அதன் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி கூட்டாளர் விருதை வழங்கியது [4] 2007 ஆம் ஆண்டில், கலை துறையில் இவரது பணிக்காக இந்திய அரசு பத்ம பூஷண் கௌரவத்தை வழங்கியது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, தனது 88 வயதில், 2016 சூன் 26 அன்று இவர் தனது இல்லத்தில் காலமானார். 2019இல் இவரது நினைவாக காவலம் நாராயண பணிக்கர் விருது நிறுவப்பட்டு சேர்த்தலையைச் சேர்ந்த கவிஞர் மாதவ் கே வாசுதேவனுக்கு வழங்கப்பட உள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]
காவலம் நாராயண பணிக்கர்

இவர் இந்தியாவின் கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள குட்டநாட்டில் இருந்து ஒரு பழங்கால குடும்பத்தில் காவலம் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பப் பெயர் சலாயில் என்பதாகும். இவர் சர்தார் காவலம் மாதவ பணிக்கரின் மருமகனும், மலையாளக் கவிஞரான முனைவர் கே. அய்யப்ப பணிக்கரின் உறவினரும் ஆவார்.[5]

இவர் கோட்டயத்திலிலுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் பயின்றார். அதன் முன்னாள் மாணவர்களில் கே.பி.எஸ். மேனன் மற்றும் அவரது மாமா சர்தார் கே.எம். பானிக்கர் ஆகியோர் அடங்குவர். இவர் ஆலப்புழாவின் சனாதன தர்மக் கல்லூரியில் (எஸ்டி கல்லூரி) பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற்றுள்ளார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

1955 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், கலை மற்றும் இலக்கியத்தில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு ஆறு ஆண்டுகள் சட்டத்தை பயின்றார். 1961 ஆம் ஆண்டில் திருச்சூரின் கேரள சங்கீத நாடக அகாடமியின் செயலாளராக பரிந்துரைக்கப்பட்டார். இவரது தளத்தை கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூருக்கு மாற்றினார். இவரது படைப்புகள் எப்போதும் கேரளாவின் பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற மரபுகளில் வேரூன்றியுள்ளன.

காவலம் நாராயண பணிக்கர்

1974 ஆம் ஆண்டில் காவலம் தனது இல்லத்தை மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் அவனவன் கடம்பா என்ற இவரது நாடகத்தை ஜி அரவிந்தன் படமாக்கினார். காவலம் முன்னாள் சோவியத் ஒன்றியம் உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். கிரேக்கத்தில் அவர் கிரேக்க கலைஞர்களுடன் இலியாயானா, இந்திய ராமாயணத்தின் இணைவு மற்றும் கிரேக்க காவியமான இலியட்ஆகியவற்றில் பணியாற்றினார்.

மிகச்சிறந்த கூடியாட்டம் மேதையான புகழ்பெற்ற நடிகர் குரு மணி மாதவ சாக்கியார் மணி மாதவ சாக்கியர்: தி மாஸ்டர் அட் ஒர்க் (1994) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் பார்வதி விராகம் படத்தில் (1993) கூடியாட்டம் வடிவத்தில் மணி மாதவ சாக்கியார் இராவணனாக நடித்துள்ளார்.[6] மலையாள சினிமாவில் ஒரு பாடலாசிரியராக, உல்சவப்பிட்டென்னு, மஞ்சாடிகுரு (2008), வடக்கக்கொரு ஹிருதயம் (1978), மர்மாரம் (1982) போன்ற படங்களுக்கு எழுதியுள்ளார். பிந்தைய இரண்டு படங்களுக்கு சிறந்த பாடல்களுக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.

இவர் ஏசியானெட் தகவல் தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும், புதுடெல்லியின் சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவருக்கு திருமணமாகி தனது மனைவி சாரதாமணியுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். மேலும் இவரது சொந்த கிராமமான காவலத்தில் மற்றொரு வீடும் உள்ளது. இவருக்கு காவலம் அரிகிருட்டிணன் மற்றும் காவலம் சிறீகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அக்டோபர் 2009இல் இவர் இறப்பதற்கு முன்பு இவரது மகன் காவலம் அரிகிருட்டிணன் பாசாபாரதியின் தலைமை தொடர்பு நபராக பணியாற்றினார். அவரது இளைய மகன் காவலம் சிறீகுமார், கேரளாவில் ஒரு பாடகராக [7] கடந்த மூன்று தசாப்தங்களாக எண்ணற்ற நாட்டுப்புற மற்றும் ஒளி இசை எண்களைப் பாடிவருகிறார்.இவர் பல ஆண்டுகளாக மலையாள படங்களுக்காகவும் பாடி வருகிறார்.[8]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]

இவருக்கு 1998 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதும், 2002 ல் சங்கீத நாடக அகாடமி கூட்டாளர் கௌரவமும் 2007 இல் பத்ம பூஷண் அலங்காரமும் வழங்கப்பட்டன.[9]

இவர், 1978 இல் வடக்கக்கொரு ஹிருதயம் மற்றும் 1982 இல் மர்மாரம் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடல்களுக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதை இரண்டு முறை வென்றுள்ளார் மத்தியப்பிரதேச அரசால் (1994-1995 ) காளிதாஸ் சம்மன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இறப்பு

[தொகு]

காவலம் நாராயண பணிக்கர் தனது பிற்கால வாழ்நாள் முழுவதும் வயது தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டார். அதன் சிகிச்சைக்காக இவர் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் இவர் சமூகத் துறையில் தீவிரமாக இருந்தார். 2016 சூன் 16 அன்று, இவர் இறுதி முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு இவர் திரும்பி வந்தாலும், 2016 சூன் 26 அன்று இரவு 9:30 மணிக்கு தனது இல்லத்தில் இறந்தார். தனது சொந்த கிராமமான காவலத்தில் உள்ள இவரது வீட்டில் முழு மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Dramatist, poet Kavalam Narayana Panicker passes away". மலையாள மனோரமா. 26 June 2016. http://english.manoramaonline.com/news/just-in/kavalam-narayana-panicker-no-more-kerala.html. பார்த்த நாள்: 26 June 2016. 
  2. Works of Kavalam Narayana Panicker பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. Cody, p. 1035
  4. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 17 February 2012.
  5. Pratx, Philippe. "Kavalam Narayana Panikkar - Interview". www.indereunion.net.
  6. "Films of Sangeet Natak Akademi, New Delhi". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-27.
  7. Sarasijanayanan, Prasannakumaran. "Kavalam Sreekumar Hits, Devaragam on the web". www.devaragam.com. Archived from the original on 2007-12-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-27.
  8. Kavalam Srikumar on MSI
  9. "Padma Bhushan for Nooyi, Mittal" இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120126011545/http://www.expressindia.com/news/fullstory.php?newsid=80307. பார்த்த நாள்: 26 May 2009. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலம்_நாராயண_பணிக்கர்&oldid=4165627" இலிருந்து மீள்விக்கப்பட்டது