உள்ளடக்கத்துக்குச் செல்

கேடய வால் பாம்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேடய வால் பாம்புகள்
குவியர் கேடய வால் பாம்பு, (யூரொபெல்டிசு சியாலானிகா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
யூரோபெல்டிடே

ஜெ. பி. முல்லர், 1832
வேறு பெயர்கள் [1]
 • யூரோபெல்தான ஜெ. பி. முல்லர், 1832
 • யூரோபெதாசியா ஜெ. பி. முல்லர், 1832
 • ரைனோபிசு பிட்ஜெஞ்சர், 1843
 • யூரோபெல்டிடே கிரே, 1845
 • யூரோபெதினா கிரே, 1858
 • பிளக்டியூரினா கிரே, 1858
 • ரைனோபிடே கோப், 1900
 • யூரோபெல்தினே மாக் தொவ்ல், 1975

கேடய வால் பாம்புகள் (யூரோபெல்டிடே)(Uropeltidae) கவச வால் பாம்புகள் அல்லது பூமிப் பாம்புகள் என்றும் அறியப்படுகிறது.[2] இவை தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பழமையான, விடமற்ற, வளையில் வாழும் பாம்புகளின் குடும்பமாகும். யூரோபெல்டிடே எனும் சொல் கிரேக்க வார்த்தையான யூரா ('வால்') மற்றும் பெல்டி ('கவசம்'), என்பதிலிருந்து வந்தது. வால் நுனியில் பெரிய கெரட்டின் பொருளால் ஆன கவசம் இருப்பதை இது குறிக்கிறது. டெரெட்ரசு ரோடோகாஸ்டர் இதன் சொந்த பேரினத்தில் அல்லது பிராக்கியோபிடியத்தின் ஒரு பகுதியாக உள்ளதா என்பதைப் பொறுத்து, ஏழு அல்லது எட்டு பேரினங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. இக்குடும்பத்தில் 50க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[2] இந்த பாம்புகள் இவற்றின் பன்முகத்தன்மை, உயிரியல் மற்றும் இயற்கை வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் நன்கு அறியப்படவில்லை.

விளக்கம்[தொகு]

யூரோபெல்டிடேயின் வால்கள்

யூரோபெல்டிடே குடும்பத்தில் உள்ள பாம்புகள் சிறியன. முதிர்ச்சியடைந்த பாம்புகளின் உடல் மொத்த நீளம் (வால் உட்பட) 20–75 cm (7.9–29.5 அங்) ஆகும். இவை புதைந்து வாழும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. இவற்றின் உடற்கூறியல் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. மண்டை ஓடு பழமையானது மற்றும் நெகிழ்வற்றது, குறுகிய, செங்குத்து நாற்கர எலும்பு. கடினமான தாடைகளுடன் கூடியது. கரோனாய்டு எலும்பு கீழ் தாடையில் உள்ளது. கண் கூட்டு எலும்புகள் இல்லை. மேற்கன்னத்துக்குரிய எலும்பு பயனற்ற உறுப்பாகச் சிறுத்துக் காணப்படுகிறது. கண்கள் சிறியதாகவும், சிதைவுற்றதாகவும் இருக்கும். இது கண் மூடும் சவ்வினால் மூடப்படவில்லை. ஆனால் பெரிய பலகோணக் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், இடுப்பு மற்றும் பின் மூட்டுகள், இதன் இருப்பு ஒரு பழமையான பண்பாகக் கருதப்படும் பண்பு, இந்த குடும்பத்தில் மறைந்துவிட்டது.[3]

வால் சிறப்பியல்புடன் கூடியது. இரண்டு பகுதிகளுடன் கூடிய விரிவாக்கப்பட்ட திடமான செதில்களுடன் முடிவடைகிறது. பெரும்பாலும் தடிமனான முட்களுடன் கூடிய செதில்களால் மூடப்பட்ட ஒரு அடிவட்டப் பகுதியைக் கொண்ட மேல் மேற்பரப்பு அல்லது பெரிதாக்கப்பட்ட முள்ளெலும்புத் தகட்டுடன் காணப்படும். வயிற்றுப்புறச் செதில்கள் அளவு மிகவும் குறுகு காணப்படும்.[3] உடல் உருளை வடிவமானது, மென்மையான செதில்களால் மூடப்பட்டிருக்கும்.

நடத்தை[தொகு]

பல வகையான கேடய வால் பாம்புகளின் வாழ்க்கை செயல்கள் குறித்து அதிகமாக அறியப்படவில்லை. கள ஆய்வுகள் பெரும்பாலான இதன் சிற்றினங்கள் வலையில் வாழும் வகையில் துளையிடுபவவை என்றும் மழை பெய்யும் இரவுகளில் மண்ணின் மேற்பரப்பிற்கு அடிக்கடி வெளியே வரலாம் என்றும் குறிப்பிடுகின்றன. பருவ மழையின் போது சாலையில் வாகனப் போக்குவரத்து காரணமாக இந்த பாம்புகள் அதிக அளவில் கொல்லப்படுவதாக உயிரியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மட்க்கிய மேல் மண் அடுக்குகளை விரும்புவதாகவும், அரிதாகவே ஆழமாகப் புதைவதாகவும் தெரிகிறது (மிகவும் வெப்பமான அல்லது வறண்ட காலநிலை காலங்களில்).

வேட்டையாடுபவர்களால் அணுகப்படும் போது, இந்த பாம்புகள் பெரும்பாலான பாம்புகளைப் போலக் கடிக்காது, ஆனால் தங்கள் உடலை ஒரு பந்தாகச் சுருட்டி, தலையை அடியில் மறைத்துக் கொள்கின்றன. சில புழுப் பாம்பைப் போல தங்கள் பாதிப்பில்லாத வால் நுனியால் குத்தலாம். பலவற்றின் பின்புறம் மந்தமான மற்றும் சல்லடைப் போன்றுள்ளது. ஆனால் மிகவும் பிரகாசமான, மாறுபட்ட நிறமுள்ள அடிப்பகுதியுடன் (பிரகாசமான மஞ்சள், சிவப்பு போன்றவை) கூடியது. வேட்டையாடுபவர்களைத் தலைகீழாக மாற்றி இழுப்பதன் மூலம் திடுக்கிட வைக்கிறது. இந்த எச்சரிக்கும் வண்ணம் வேட்டையாடக்கூடிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்பினைத் தருகிறது.[4]

புவியியல் வரம்பு[தொகு]

கேடய வால் பாம்புகள் தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.[1] இந்தியாவில், இவற்றின் பரவல் முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் சில இனங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மத்திய இந்தியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இலங்கையில், உலர் மண்டலம் மற்றும் சமவெளிகள் உட்படப் பல உயிர் மண்டலங்களில் இவை காணப்படுகின்றன.

பரிணாம முக்கியத்துவம்[தொகு]

கேடய வால் பாம்புகளின் இவற்றின் விசித்திரமான புவியியல் பரவல் காரணமாக, தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல மலைத்தொடர்கள் ஒவ்வொன்றும் ஒரு அகணிய பாம்புகளாக உள்ளன. இவை டார்வினின் குருவிகளுக்கு ஒப்பானவை (பரிணாம கதிர்வீச்சு) என்று கருதப்படுகிறது.[5] தெற்காசியாவில் மட்டும் காணப்படும் பாம்புகளின் ஒரே குடும்பம் இதுதான். இந்த குழுவின் மரபணு ஆய்வுகள் பொதுவான வம்சாவளி மற்றும் தோற்றவமைப்புக்குரிய பல்வகைப்படுத்தல் முறைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒத்த முடிவுகளைக் கொண்டு வந்துள்ளன.[6][7] [8] மூலக்கூறு நாளறிபகுப்பாய்வு யூரோபெல்டிட்கள் பேலியோசீன்-இயோசீன் காலப் பகுதியில் தோன்றியதாகத் தெரிகிறது. இதன் சகோதர குழுவான சிலிண்ட்ரோபிடே மற்றும் அனோமோசிலிடேவிலிருந்து 56 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தது.[8]

உணவு[தொகு]

கேடய வால் பாம்புகளின் உணவாக பெரும்பாலும் முதுகெலும்பிலி உயிர்கள் உள்ளன. குறிப்பாக இவை மண்புழுக்களை உண்ணுகின்றன. பிராங்க் வால், உணவு வகைகளை ஆய்வு செய்வதற்காகக் குடல் உள்ளடக்கங்களைப் பகுப்பாய்வு செய்து புழுக்கள் மற்றும் சேறு இருப்பதைத் தெரிவித்தார்.

இனப்பெருக்கம்[தொகு]

யூரோபெல்டிடே குடும்பத்தின் அனைத்து பாம்புகளும் தாயின் உடலில் குஞ்சு பொரிக்கும் முட்டைகளைத் தக்கவைத்துக்கொள்கின்றனர் (உள்பொரி முட்டை).[9]

பேரினம்[தொகு]

பேரினம் வகைப்பாட்டியலாளர் [2] இனங்கள் [2] புவியியல் வரம்பு[1][10]
மெலனோபிடியம் குந்தர், 1864 4 மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா
பிளாட்டிபிலெக்ட்ரசு குந்தர், 1868 2 மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா
சூடோபிலெக்ட்ரசு ஜிஏ பவுலஞ்சர், 1890 1 மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா
பிளெக்ட்ரரசு துமெரில், 1851 3 மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா
ரைனோபிலிசு கெம்ப்ரிச், 1820 24 இலங்கை மற்றும் தென்னிந்தியா
டெட்ரரசு பெடோம், 1886 4 மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியா
யூரோபெல்டிசு* குவியர், 1829 26 தீபகற்ப இந்தியா

* மாதிரி பேரினம்[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

 • யூரோபெல்டிட் இனங்கள் மற்றும் கிளையினங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 McDiarmid, R.W.; Campbell, J.A.; Touré, T.A. (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference Vol. 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
 2. 2.0 2.1 2.2 2.3 "Uropeltidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
 3. 3.0 3.1 Parker HW, Grandison AGC (1977).
 4. Rajendran MV (1985).
 5. Ganesh SR (2015). "Shieldtail snakes (Reptilia: Uropeltidae) – the Darwin's finches of south Indian snake fauna?" pp. 13–24. In: Manual on Identification and Preparation of Keys of Snakes with Special Reference to their Venomous Nature in India. Ooty: Government Arts College.
 6. species:John E. Cadle; Herbert C. Dessauer; Carl Gans; species:Donald Forsyth Gartside (1990). "Phylogenetic relationships and molecular evolution in uropeltid snakes (Serpentes: Uropeltidae): allozymes and albumin immunology". Biological Journal of the Linnean Society 40 (3): 293–320. doi:10.1111/j.1095-8312.1990.tb00541.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4066. பப்மெட்:32313304. 
 7. fr:Franky Bossuyt (2004). "Local Endemism Within the Western Ghats-Sri Lanka Biodiversity Hotspot". Science 306 (5695): 479–481. doi:10.1126/science.1100167. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:15486298. Bibcode: 2004Sci...306..479B. 
 8. 8.0 8.1 Cyriac VP, Kodandaramaiah U (2017). "Paleoclimate determines diversification patterns in the fossorial snake family Uropeltidae Cuvier, 1829". Molecular Phylogenetics and Evolution 116: 97–107. doi:10.1016/j.ympev.2017.08.017. பப்மெட்:28867076. http://vanasiri.in/uploads/2017UropeltidaePhylogeny.pdf. 
 9. Tinkle DW, Gibbons JW (1977). "The Distribution and Evolution of Viviparity in Reptiles". University of Michigan Museum of Zoology, Miscellaneous Publications (154): 1–55. PDF
 10. Pyron RA, Ganesh SR, Sayyed A, Sharma V, Wallach V, Somaweera R (2016). "A catalogue and systematic overview of the shield-tailed snakes (Serpentes: Uropeltidae)". Zoosystema 38 (4): 453–506. doi:10.5252/z2016n4a2. http://sciencepress.mnhn.fr/sites/default/files/articles/pdf/z2016n4a2.pdf. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடய_வால்_பாம்புகள்&oldid=3839068" இலிருந்து மீள்விக்கப்பட்டது