குள்ள வாத்து
குள்ள வாத்து | |
---|---|
பச்சைக் குள்ள வாத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பிராண்ட், 1836
|
மாதிரி இனம் | |
நெட்டாபசு ஆரிடசு[1] ஜெமிலின், 1789 | |
சிற்றினங்கள் | |
| |
![]() | |
Distribution
N. auritus N. c. coromandelianus N. c. albipennisauritus N. pulchellus |
குள்ள வாத்துகள் (Pygmy goose) என்பன நெட்டாபசு பேரினத்தைச் சேர்ந்த மிகச் சிறிய "மரக்கிளைகளில் வாழும் வாத்துகளின்" குழுவாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]குள்ள வாத்து பழைய உலக வெப்ப மண்டலப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை அனைத்து காட்டுப் பறவைகளிலும் மிகச் சிறியவை. இவை புறமரபுவழி குழுவாக இருப்பதால்,[2] வகைப்பாட்டியலில் வேறு இடத்தில் வைக்கப்பட வேண்டும். டப்லிங் வாத்து துணைக்குடும்பமான அனாடினேவுடன் ஆரம்பத்தில் கருதப்பட்ட இன உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மேலும் இவை நீர்ப்பறவைகளின் பண்டைய கோண்டுவானா தழுவல் பரவலில் ஒரு பரம்பரையை உருவாக்குகின்றன. இதில் இவை தெளிவற்ற தொடர்புகளைக் கொண்டுள்ளன.[3] மத்திய மெக்சிகோவின் ஜாலிசுகோவின் பிற்பகுதியில் உள்ள கெம்பிலியலினிருந்து (5.0–4.1 மிஆ) விவரிக்கப்படாத புதை படிவ இனம், டார்சோமெட்டாடார்சசின் தூர உறவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது புதிய உலகில் உள்ள இனத்தின் பதிவு மட்டுமே.[4]
நெட்டாபசு பேரினமானது 1836-இல் செருமனி இயற்கையியலாளர் ஜோகன் பிரெட்ரிக் வான் பிராண்ட் என்பவரால் நிறுவப்பட்டது.[5] இந்த பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான நெட்டா என்பதிலிருந்து. நெட்டா என்பதன் பொருள் "வாத்து" என்பதாகும். பவுசு என்றால் "கால்" என்று பொருள்படும். இதன் மாதிரி இனங்கள், ஆப்பிரிக்க குள்ள வாத்து, நெட்டாபசு ஆரிடசு ஆகும்.[6]
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[7]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
![]() |
நெட்டாபசு ஆரிடசு | ஆப்பிரிக்க குள்ள வாத்து | சகாரா கீழமை ஆப்பிரிக்கா |
![]() |
நெட்டாபசு கோரமண்டலியனசு | குள்ளத்தாரா | வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா |
![]() |
நெட்டாபசு புல்செல்லசு | பச்சைக் குள்ள வாத்து | வடக்கு ஆத்திரேலியா மற்றும் தெற்கு நியூ கினி |
குள்ள வாத்துகள் குறுகிய அலகு, வட்டமான தலை மற்றும் குறுகிய கால்களை உடையன. இவை மரப் பொந்துகளில் கூடு கட்டுகின்றன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anatidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
- ↑ Livezey, Bradley C. (1986). "A phylogenetic analysis of recent anseriform genera using morphological characters" (Full text). Auk 103 (4): 737–754. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v103n04/p0737-p0754.pdf.
- ↑ Sraml, M.; Christidis, L.; Easteal, S.; Horn, P.; Collet, C. (1996). "Molecular Relationships Within Australasian Waterfowl (Anseriformes)". Australian Journal of Zoology 44 (1): 47–58. doi:10.1071/ZO9960047. https://archive.org/details/sim_australian-journal-of-zoology_1996_44_1/page/47.
- ↑ Steadman, D.; Carranza-Castaneda, O. (2006). "Early Pliocene to early Pleistocene birds from central Mexico". Universidad Nacional Autónoma de México, Instituto de Geología and Centro de Geociencias, Publicacion Especial 4: 61–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:970-32-3895-5.
- ↑ Brandt, Johann Friedrich von (1836). Descriptiones et icones animalium rossicorum novorum vel minus rite cognitorum (in லத்தின்). Vol. Fasciculus 1: Aves. Jussu et sumptibus Academiae Scientiarum. p. 5.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. Christopher Helm. p. 269.
- ↑ "Screamers, ducks, geese & swans". World Bird List Version 7.3. International Ornithologists' Union. 2017. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
மேலும் படிக்க
[தொகு]- Madge, Steve; Burn, Hilary (1987). Wildfowl : an identification guide to the ducks, geese and swans of the world. London: Christopher Helm. pp. 190–193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7470-2201-1.
வெளி இணைப்புகள்
[தொகு] பொதுவகத்தில் Nettapus பற்றிய ஊடகங்கள்
விக்கியினங்களில் Nettapus பற்றிய தரவுகள்
- Species text in The Atlas of Southern African Birds.