உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு மாகாண சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கு மாகாணசபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Eastern Provincial Council

கிழக்கு மாகாண சபை
2வது கிழக்கு மாகாண சபை
வகை
வகை
தலைமை
முதலமைச்சர்
எதிர்க்கட்சித் தலைவர்
தலைமைச் செயலர்
டி. எம். எஸ். அபயகுணவர்தன
24 செப்டம்பர் 2012 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்37
அரசியல் குழுக்கள்
அரசு (22)

எதிரணி (15)

வலைத்தளம்
ep.gov.lk

கிழக்கு மாகாண சபை (Eastern Provincial Council, EPC) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் 37 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

வரலாறு

[தொகு]

1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[1] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[2] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபையாக இணைக்கப்பட்டன.[3] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[4] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போது இடம்பெறவில்லை. தற்காலிக இணைப்பு ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[5] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவர்களின் நீண்ட கால எதிர்ப்பினை அடுத்து, 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[3] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[3] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை கொழும்பின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது.

தலைவர்கள், முதலமைச்சர்கள், செயலர்கள்

[தொகு]

தலைவர்கள்

துணைத் தலைவர்

முதலமைச்சர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள்

தலைமைச் செயலர்கள்

  • ஆர். தியாகலிங்கம் (2007)[14]
  • எச். எம். ஹேரத் அபயவீர, (2007)[15]
  • வி. பி. பாலசிங்கம், (2008-12)[16]
  • டி. எம். எசு. அபயகுணவர்தன (2012-இன்று)[17][18]

மாகாணசபைத் தேர்தல்கள்

[தொகு]

2008 தேர்தல்

[தொகு]

2008 மே 10 இல் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[19]

கூட்டணிகளும் கட்சிகளும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை கூடுதல்
ஆசனங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, NC, இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) 144,247 52.96% 8 105,341 58.09% 6 59,298 42.99% 4 2 308,886 52.21% 20
  ஐக்கிய தேசியக் கட்சி (சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி) 121,272 44.52% 6 58,602 32.31% 4 70,858 51.37% 5 0 250,732 42.38% 15
  மக்கள் விடுதலை முன்னணி 4,745 1.74% 0 379 0.21% 0 4,266 3.09% 1 0 9,390 1.59% 1
தமிழ் சனநாயக தேசியக் கூட்டணி (ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் விடுதலைக் கூட்டணி et al.) 7,714 4.25% 1 0 7,714 1.30% 1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,418 2.99% 0 0 5,418 0.92% 0
  சுயேட்சைக் குழு 737 0.27% 0 823 0.45% 0 1,073 0.78% 0 0 2,633 0.45% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 296 0.11% 0 943 0.52% 0 1,309 0.95% 0 0 2,548 0.43% 0
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்) 1,816 1.00% 0 459 0.33% 0 0 2,275 0.38% 0
ஐக்கிய தேசிய கூட்டணி 597 0.22% 0 0 597 0.10% 0
விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி 63 0.02% 0 157 0.09% 0 163 0.12% 0 0 383 0.06% 0
அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி 378 0.27% 0 0 378 0.06% 0
புதிய சிங்கள மரபு 312 0.11% 0 0 312 0.05% 0
தேசிய அபிவிருத்தி முன்னணி 100 0.04% 0 89 0.06% 0 0 189 0.03% 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்திர பக்சய 11 0.00% 0 85 0.05% 0 13 0.01% 0 0 109 0.02% 0
முசுலிம் விடுதலை முன்னணி 39 0.02% 0 0 39 0.01% 0
இலங்கை தேசிய முன்னணி 21 0.01% 0 9 0.01% 0 0 30 0.01% 0
இலங்கை முற்போக்கு முன்னணி 17 0.01% 0 9 0.01% 0 0 26 0.00% 0
ருகுண மக்கள் கட்சி 9 0.00% 0 5 0.00% 0 0 14 0.00% 0
லிபரல் கட்சி 3 0.00% 0 0 3 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 272,392 100.00% 14 181,355 100.00% 11 137,929 100.00% 10 2 591,676 100.00% 37
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 20,997 21,088 12,695 54,780
மொத்த வாக்குகள் 293,389 202,443 150,624 646,456
பதிவு செய்த வாக்காளர்கள் 409,308 330,950 242,463 982,721
வாக்காளர் வீதம் 71.68% 61.17% 62.12% 65.78%

2012 தேர்தல்

[தொகு]

கிழக்கு மாகாணசபைக்கான 2012 செப்டம்பர் 8 ஆம் நாள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்:[20]

கூட்டணிகளும் கட்சிகளும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 92,530 33.66% 5 64,190 31.17% 4 43,324 28.38% 3 2 200,044 31.58% 14
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 44,749 16.28% 2 104,682 50.83% 6 44,396 29.08% 3 0 193,827 30.59% 11
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 83,658 30.43% 4 23,083 11.21% 1 26,176 17.15% 2 0 132,917 20.98% 7
  ஐக்கிய தேசியக் கட்சி 48,028 17.47% 3 2,434 1.18% 0 24,439 16.01% 1 0 74,901 11.82% 4
சுயேட்சைக் குழு 1,178 0.43% 0 9,019 4.38% 0 2,164 1.42% 0 0 12,361 1.95% 0
தேசிய சுதந்திர முன்னணி 9,522 6.24% 1 0 9,522 1.50% 1
  மக்கள் விடுதலை முன்னணி 2,305 0.84% 0 72 0.03% 0 777 0.51% 0 0 3,154 0.50% 0
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 531 0.19% 0 1,777 0.86% 0 385 0.25% 0 0 2,693 0.43% 0
சோசலிசக் கூட்டணி 1,489 0.54% 0 379 0.18% 0 612 0.40% 0 0 2,480 0.39% 0
அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி 76 0.03% 0 384 0.25% 0 0 460 0.07% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 103 0.04% 0 37 0.02% 0 149 0.10% 0 0 289 0.05% 0
இலங்கை தொழிற் கட்சி 111 0.04% 0 50 0.02% 0 107 0.07% 0 0 268 0.04% 0
நமது தேசிய முன்னணி 163 0.08% 0 0 163 0.03% 0
ஐக்கிய இலங்கை பெரும் பேரவை 10 0.00% 0 15 0.01% 0 97 0.06% 0 0 122 0.02% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 74 0.03% 0 16 0.01% 0 0 90 0.01% 0
ஜன சேத்த பெரமுன 31 0.01% 0 19 0.01% 0 35 0.02% 0 0 85 0.01% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 7 0.00% 0 78 0.05% 0 0 85 0.01% 0
முசுலிம் விடுதலை முன்னணி 42 0.02% 0 15 0.01% 0 0 57 0.01% 0
ருகுணு மக்கள் கட்சி 13 0.00% 0 3 0.00% 0 0 16 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 274,935 100.00% 14 205,936 100.00% 11 152,663 100.00% 10 2 633,534 100.00% 37
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,744 17,223 11,324 45,291
மொத்த வாக்குகள் 291,679 223,159 163,987 678,825
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 441,287 347,099 245,363 1,033,749
Turnout 66.10% 64.29% 66.83% 65.67%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  2. "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
  3. 3.0 3.1 3.2 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 அக்டோபர் 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html. 
  4. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm. 
  5. V.S. Sambandan (14 November 2003). "Sri Lanka's North-East to remain united for another year". த இந்து இம் மூலத்தில் இருந்து 25 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040225085959/http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2009. 
  6. 6.0 6.1 "UNP, SLMC councilors boycott EPC first sitting". தமிழ்நெட். 5 சூன் 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25888. 
  7. "Pillayan sworn in as CM for Eastern Province". தமிழ்நெட். 16 மே 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25662. 
  8. "Majeed sworn in as Eastern CM". டெய்லி மிரர். 18 செப்டம்பர் 2012. http://www.dailymirror.lk/news/22010--majeed-sworn-in-as-eastern-cm.html. 
  9. "New EP Chief Minister takes oaths". டெய்லி மிரர். 6 பெப்ரவரி 2015. http://www.dailymirror.lk/63033/new-ep-governor-takes-oaths. 
  10. "Hakim takes oath as UNP national list parliamentarian". தமிழ்நெட். 10 சூலை 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26313. 
  11. "Grave concern over the effects of urgent bill". சண்டே டைம்சு. 6 நவம்பர் 2011. http://www.sundaytimes.lk/111106/Columns/political.html. 
  12. "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப். 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. 
  13. Satyapalan, Franklin R. (30 செப். 2012). cat=article-details&page=article-details&code title=62691 "Inaugural session of Eastern PC tomorrow". சண்டே ஐலண்டு. http://www.island.lk/index.php?page cat=article-details&page=article-details&code title=62691. 
  14. Gurunathan, Sinniah (4 பெப்ரவரி 2007). "NPC Secretariat at Kanniya, EPC at Trincomalee". சண்டே டைம்சு. http://sundaytimes.lk/070204/News/123news.html. 
  15. "Sinhalese appointed East's Chief Secretary". தமிழ்நெட். 6 ஏப்ரல் 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21808. 
  16. 3/G-%209579%20(E)%20I%20-%20I.pdf "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary 1543/03. 31 March 2008. http://documents.gov.lk/Extgzt/2008/pdf/Mar/1543 3/G-%209579%20(E)%20I%20-%20I.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  17. "Colombo appoints Sinhala Chief Secretary, sidelines Tamils in EPC". தமிழ்நெட். 25 செப். 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35600. 
  18. "New Chief Secretary Assumed Duty". Eastern Provincial Council. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-02.
  19. "Provincial Council Elections 2008 Final District Results: - Eastern Province". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-12-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-03.
  20. "Provincial Council Elections 2012: Eastern Province". Department of Elections, Sri Lanka.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_மாகாண_சபை&oldid=3792691" இலிருந்து மீள்விக்கப்பட்டது