கிசுலாப் கல்லூரி

ஆள்கூறுகள்: 21°08′54″N 79°04′17″E / 21.1483°N 79.0715°E / 21.1483; 79.0715
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசுலாப் கல்லூரி
Hislop College
கிசுலாப் கல்லூரி அஞ்சல் தலை 2018ஆம் ஆண்டில்
வகைஇளநிலை கல்லூரி
உருவாக்கம்1883; 141 ஆண்டுகளுக்கு முன்னர் (1883)
அமைவிடம், ,
வளாகம்Urban
சேர்ப்புநாக்பூர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.hislopcollege.ac.in/

கிசுலாப் கல்லூரி (Hislop College) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் நாக்பூர் நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

நிறுவனர்[தொகு]

இக்கல்லூரிக்கு இசுகாட்லாந்து சேவகர் இசுடீபன் கிசுலாப் (1817-1863) பெயரிடப்பட்டது. இவர் ஓர் குறிப்பிடத்தக்க சுவிசேஷகர், கல்வியாளர் மற்றும் புவியியலாளர் ஆவார். கலைக்களஞ்சிய அகராதியின் ஆசிரியரான ராபர்ட் ஆண்டருடன் இணைந்து விதர்பா பிராந்தியத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றினார்.[2]

வரலாறு[தொகு]

கிசுலாப் கல்லூரி 1883-ல் நாக்பூரின் மகால் பகுதியில் நிறுவப்பட்டது (ஆனால் இன்று அது மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது). நாக்பூர் மத்திய மாகாணங்களின் தலைநகராக இருந்தபோதிலும், 1882வரை இதில் கல்லூரி இல்லை.

கல்லூரி 1904 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1923-ல் நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆறு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும்.

அமெரிக்கப் போதகர், ஜேம்ஸ் எம். லாசன், இளையோர், 1953 முதல் 1956 வரை வளாக அமைச்சக அலுவலகத்தில் ஒரு சேவகராகப் பணியாற்றினார். காந்திய அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைப் படித்தார். இது இவரது இயக்கத்தை உருவாக்கும் திறன்களைப் பாதித்தது. இதன்பிறகு இவர் குடிசார் உரிமைகள் இயக்கத்தில் முன்னணி அறிவார்ந்த சக்தியாக அமெரிக்கா திரும்பினார்.[3]

ஆராய்ச்சி[தொகு]

கிசுலாப் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தாவரவியல், சமூகவியல், உயிர் வேதியியல், வணிகவியல், இயற்பியல், கணினி அறிவியல், இலக்கியம் (ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி) ஆகிய துறைகளில் 60 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். வணிகம், தாவரவியல், வரலாறு மற்றும் சமூகவியல் பற்றிய பிரிவில் 15 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுகிறது.[1]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

இக்கல்லூரியின் அருகில் உள்ள பகுதியைச் பலர் கிசுலோப் கல்லூரியில் தங்கள் கல்வியை முடித்துள்ளனர்.

இவர்கள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hislop College. Hislop College. Retrieved on 20 December 2018.
  2. "The Rev. Robert Hunter, M.A., LL.D., F.G.S". Geological Magazine 4 (8): 382–384. 1897. doi:10.1017/S0016756800184249. Bibcode: 1897GeoM....4..382.. 
  3. King, Mary Elizabeth. "What Makes Lawson's Role Unique?". www.jameslawsoninstitute.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசுலாப்_கல்லூரி&oldid=3788970" இலிருந்து மீள்விக்கப்பட்டது