காரிப்பட்டி

ஆள்கூறுகள்: 11°40′N 78°17′E / 11.66°N 78.28°E / 11.66; 78.28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரிப்பட்டி
—  கிராமம்  —
காரிப்பட்டி
இருப்பிடம்: காரிப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°40′N 78°17′E / 11.66°N 78.28°E / 11.66; 78.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


காரிப்பட்டி , தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும்.[4] இது மாவட்ட தலைமையகமான சேலத்திலிருந்து கிழக்கு நோக்கி 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அயோத்தியாபட்டினத்திலிருந்து 6 கி.மீ, சென்னையில் இருந்து 308 கி.மீ தொலைவிலுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 68 (NH 68) இந்த கிராமத்தின் வழியாகச் செல்கிறது. இது உளுந்தூர்பேட்டையையும் சேலத்தையும் இணைக்கிறது.

தபால் தலைமை அலுவலகம் காரிப்பட்டியில் உள்ளது. காரிப்பட்டி அஞ்சலகக் குறியீடு 636106. இந்தப் பகுதிவாழ் மக்களின் மொழி தமிழ் ஆகும். இங்கே ஒருங்கிணைந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. அவசர ஊர்தியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார மையமும் சில தனியார் மருத்துவமனைகளும் இந்தக் கிராமத்தில் உள்ளன.

கரூர் வைஸ்யா வங்கி, (இந்தக் கிராமத்தின் இரு எல்லைகளிலும் இரண்டு கே.வி.பி. தானியங்கி பண பரிவர்த்தனை இயந்திர மையங்கள் உள்ளன - ஏடிஎம் மையம்), கூட்டுறவு வங்கி ஆகியனவும் உள்ளன. நாள் முழுவதும் சேலம் நகரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. குறிபிட்ட நேரங்களில் தொடர் வண்டி வசதியும் உள்ளது.

காரிப்பட்டி தி. பொன்னுமலை 1967, 1972ஆம் ஆண்டு தேர்தலில் பனமரத்துப்பட்டி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு திமுக அரசியல்வாதியாகவும் இருந்தார்.[[1]]

காரிப்பட்டிக்கு அருகில் புனித லூர்து அன்னை ஆலயம் (1.5 கி.மீ), வௌவால் தோப்பு (2 கி.மீ) ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. ஏற்காடு 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காரிபட்டியின் மொத்த மக்கள் தொகை 4,937. பாலியல் விகிதம் 1000 ஆண்களுக்கு 1,015 பெண்கள் என்கிற அளவில் உள்ளது. இது தேசிய சராசரி 929 யை விட அதிகமாகும். ஆறு வயதுக்கு கீழ் 470 குழந்தைகள் உள்ளன. .ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் முறையே 57,36% மற்றும் 0.24% உள்ளனர். கிராமத்தில் சராசரி கல்வியறிவு பெற்றவர்கள் 77,95% இது தேசிய சராசரி 72,99% யை விட அதிகமாகும்[சான்று தேவை].

புவியியலும் காலநிலையும்[தொகு]

கிராமத்தின் சராசரி உயரம் 321 மீ (1,053 அடி) ஆகும்[சான்று தேவை]. இந்த கிராமம் மூன்று பக்கங்களில் மலைகளால் சூழப்பட்டுள்ளது, அதாவது, வடக்கில் சேர்வராயன் மலை, தெற்கில் ஜருகுமலை மற்றும் கிழக்கில் கொடுமலை.

இந்த கிராமத்தில் மார்ச் - ஜூன் வெயில் காலமும், அக்டோபர் - நவம்பர் மழை காலமும், டிசம்பர் - பெப்ரவரி குளிர் காலமும் நிலவுகின்றது

கல்வி[தொகு]

லாபெல் குழந்தைகள் நர்சரி பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏபிஎஸ் தாவரவியல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆகியன அமைந்துள்ளன. இரண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளும், இரண்டு பொறியியல் கல்லூரிகளும், மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இந்த கிராமத்தை சுற்றி அமைந்துள்ளன.

பொருளாதாரம்[தொகு]

இந்த கிராமத்தின் முக்கிய தொழில் உழவு. ஹாட்சன் அக்ரோ ப்ரோடுடக்ட் லிமிடெட், எஸ்.பி. ஸ்பின்கிங் மில் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதோஷ் பிளாஸ்ட்டிக்ஸ் போன்ற தொழிற்சாலைகள் இயங்குகின்றன. பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களையும் செய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிப்பட்டி&oldid=3549297" இலிருந்து மீள்விக்கப்பட்டது