காம்பத் வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காம்பத் வளைகுடா-வலதுபுறம் உளளது படிமம் நாசா புவி ஆய்வகம்

காம்பத் வளைகுடா (முன்னாளில் காம்பே வளைகுடாஎன அறியப்பட்ட) இந்தியாவின் மேற்கு கடலோரம் குசராத்மாநிலத்தில் காம்பத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)அரபிக் கடலின் ஒரு உள்முகமாகும்.சுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே கத்தியவார் தீபகற்பமும் கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.தபதி ஆறும் நர்மதா ஆறும் இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ளமால் திட்டு மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ளமலாக்கா திட்டுகள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும்.

இந்த கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.

இந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது.

பரூச், சூரத், காம்பத், பாவ்நகர், மற்றும் டாமன் வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது.

காம்பத் வளைகுடா

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பத்_வளைகுடா&oldid=1683217" இருந்து மீள்விக்கப்பட்டது