கருஞ்சாம்பல் கரிச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருஞ்சாம்பல் கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. leucophaeus
இருசொற் பெயரீடு
Dicrurus leucophaeus
Vieillot, 1817
Breeding ranges of the various races according to Vaurie, note that some subspecies are no longer considered valid[2]

கருஞ்சாம்பல் கரிச்சான் (ashy drongo, Dicrurus leucophaeus ) என்பது டிக்ரூரிடே என்ற ட்ரோங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றின் உடலின் சாம்பல் நிற நிறக்கூறு, இடம்பெயர்வு முறைகள், கண்ணைச் சுற்றியுள்ள வெள்ளைத் திட்டுகளின் அளவு ஆகியவற்றில் வேறுபாடுக்களைக் கொண்டுள்ளன.

விளக்கம்[தொகு]

தாய்லாந்தில் சலாஞ்சென்சிஸ் என்ற துணை இனம்
முன் தோற்றம்

வயது முதிர்ந்த கருஞ்சாம்பல் கரிச்சானின் உடல் முதன்மையாக அடர் சாம்பல் நிறமாகவும், வால் நீளமாகவும் ஆழமாக பிளவு பட்டதாகவும் இருக்கும், சாம்பல் நிற இறகுகளின் நிறக்கூறில் பல துணையினங்கள் வேறுபடுகின்றன. சில துணையினங்களின் தலையில் வெள்ளைத் திட்டுகள் உள்ளன. இளம் பறவைகள் மங்கிய பழுப்பு சாம்பல் நிறத்தில் இருக்கும்.

இந்தியாவில் காணப்படும் துணையினமான இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் (லாங்கிகாடாடஸ்) மிகவும் கருமையாக கிட்டத்தட்ட கருங்குரிச்சானைப் போன்று இருக்கும். இது அதிக உயரமான வன வாழ்விடங்களில் காணப்படுகிறது. கருங்கரிச்சானின் பளபளப்பு இல்லாத அடர் சாம்பல் நிறத்தில் இதன் அடிப்பகுதி உள்ளது. இதன் கருவிழி கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. லுகோஜெனிஸ் மற்றும் சலாங்கென்சிஸ் ஆகிய துணையினங்கள் வெள்ளை நிற கண்-திட்டுகளைக் கொண்டுள்ளன. அழைப்புகள் கருங்கரிச்சானை விட சற்று மூக்கொலி, நாண் ஒலி ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது.[3]

பரவல்[தொகு]

கருஞ்சாம்பல் கரிச்சான்கள் கிழக்கு ஆப்கானித்தானிலிருந்து கிழக்கே தெற்கு சீனா வரையிலான வெப்பமண்டல தெற்கு ஆசியாவின் மலைப்பகுதிகளிலும், தெற்கு யப்பானில் உள்ள இரியூக்கியூ தீவுகளிலும் (குறிப்பாக ஒகினாவா ) இந்தோனேசியாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் வாழிட எல்லையின் வடக்குப் பகுதியில் உள்ள பல பறவைகள் வலசை போகுபவை.

நடத்தையும், சூழலியலும்[தொகு]

கருஞ்சாம்பல் கரிச்சான் குட்டையான கால்களைக் கொண்டது. இது மரங்களின் உச்சியில் அமர்ந்து பறந்து பறந்து பூச்சிகளை பிடித்து உண்ணும். ஆனால் சில சமயங்களில் மரத்தின் தடித்த கிளைகளில் இருந்தும் உணவு சேகரிக்கிறது.[4] இது தனித்தனியாகவோ, இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இடம்பெயர்வின் போது இவை சிறிய கூட்டமாக பறக்கின்றன.

இவற்றின் இனப்பெருக்க காலம் மே முதல் சூன் வரை ஆகும். இவை மரத்தில் குழிவான கூட்டை அமைத்து அதில் மூன்று அல்லது நான்கு சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டைகளை இடும்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Dicrurus leucophaeus". IUCN Red List of Threatened Species 2016: e.T22706964A94099735. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706964A94099735.en. https://www.iucnredlist.org/species/22706964/94099735. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Vaurie, Charles (1949). "A revision of the bird family Dicruridae". Bulletin of the AMNH 93 (4): 203–342. 
  3. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. பக். 590. 
  4. Santharam, V (1999). "Birds foraging on tree trunks". J. Bombay Nat. Hist. Soc. 96 (3): 468–469. https://www.biodiversitylibrary.org/page/48583155. 
  5. Whistler, Hugh (1949). Popular Handbook of Indian Birds. Edition 4. Gurney and Jackson, London. பக். 158–159. https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n199/mode/2up. Whistler, Hugh (1949).
  6. Ali, S (1986). Handbook of the birds of India and Pakistan. Oxford University Press. பக். 119–122. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dicrurus leucophaeus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சாம்பல்_கரிச்சான்&oldid=3928590" இலிருந்து மீள்விக்கப்பட்டது