உள்ளடக்கத்துக்குச் செல்

கனிகா அகுஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிகா அகுஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கனிகா எஸ் அகுஜா
பிறப்பு7 ஆகத்து 2002 (2002-08-07) (அகவை 22)
பட்டியாலா, பஞ்சாப் இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குசகலத்துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 77)21 செப்டம்பர் 2023 எ. மலேசியா
கடைசி இ20ப24 செப்டம்பர் 2023 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017/18–presentபஞ்சாப்
2023–தற்போதுவரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெப இ20 ப அது பெஇ20
ஆட்டங்கள் 2 19 42
ஓட்டங்கள் 1 420 28
மட்டையாட்ட சராசரி 35.00 18.69
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 1* 90 48
வீசிய பந்துகள் 802 393
வீழ்த்தல்கள் 38 18
பந்துவீச்சு சராசரி 13.18 20.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 5/23 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 11/–
மூலம்: CricketArchive, 2 November 2023

கனிகா எஸ் அகுஜா (Kanika S Ahuja பிறப்பு: ஆகஸ்ட் 20, 1998) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் தற்போது பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இடது கை மட்டையாளராகவும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார்..[1][2]

இவர் செப்டம்பர் 2023 இல், மலேசியாவுக்கு எதிரான இந்தியாவுக்கான பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அகுஜா 7 ஆகஸ்ட் 2002 இல் பஞ்சாபின் பாட்டியாலாவில் பிறந்தார்.[4][5]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

ஒடிசாவுக்கு எதிரான 2017-18 முதுநிலை மகளிர் இ20 தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார். [6] 2021–22 மகளிர் முதுநிலை ஒருநாள் தொடரில் 13.13 சராசரியில் 15 இலக்குகள் எடுத்து அதிக இலக்குகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பெற்றார். [7] அந்தத் தொடரில் மகாராட்டிராவுக்கு எதிராக 10 நிறைவுகளில் 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.[8] அதே தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக 88 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்தார். [9]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

சூன் 2023 இல், அகுஜா 2023 ஏசிசி மகளிர் இ20 வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார்.[10] இறுதிப் போட்டியில் இவர் ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]

செப்டம்பர் 2023 இல், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[12] காலிறுதிப் போட்டியில், மழையால் தடைபட்ட பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[13]

சான்றுகள்

[தொகு]
  1. "Player Profile: Kanika Ahuja". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  2. "Player Profile: Kanika Ahuja". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  3. "1st Quarter-Final, Hangzhou, September 21 2023, Asian Games Women's Cricket Competition: Malaysia Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  4. "Player Profile: Kanika Ahuja". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  5. "Spinner Rashi Kanojiya the latest from Agra's cricket nurseries to India squad". Hindustan Times. 3 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  6. "Orissa Women v Punjab Women, 13 January 2018".
  7. "Bowling in Inter State Women's One Day Competition 2021/22 (Ordered by Wickets)".
  8. "Maharashtra Women v Uttar Pradesh Women, 15 November 2021".
  9. "Punjab Women v Rajasthan Women, 6 November 2021".
  10. "BCCI announces India 'A' (Emerging) squad for ACC Emerging Women's Asia Cup 2023". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  11. "Ahuja and Patil star as India A win Women's Emerging Teams Asia Cup". ESPNcricinfo. 21 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  12. "Team India (Senior Women) squad for 19th Asian Games". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  13. "1st Quarter-Final, Hangzhou, September 21 2023, Asian Games Women's Cricket Competition: Malaysia Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிகா_அகுஜா&oldid=3825198" இலிருந்து மீள்விக்கப்பட்டது