ஒலிவியா பிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிவியா பிரீன்
தனிநபர் தகவல்
முழு பெயர்ஒலிவியா கிரேசு எலினா பிரீன்
சுட்டுப் பெயர்(கள்)லிவ்வி
தேசியம் ஐக்கிய இராச்சியம்
பிறப்பு26 சூலை 1996 (1996-07-26) (அகவை 24)
கில்ட்கோர்டு, இங்கிலாந்து
விளையாட்டு
நாடுபெரிய பிரித்தானியா
விளையாட்டுதடகளப் போட்டிகள்
நிகழ்வு(கள்)டி38 வகைப்பாடு விரைவோட்டமும் எப்38 நீளம் தாண்டுதலும்
கழகம்போர்ட்ஸ்மவுத் நகரம்
பயிற்றுவித்ததுஜோனாசு தவியா-டோடூ / ஜூலி ஹோல்மேன்
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2012
மிகவுயர் உலக தரவரிசைடி38 100மீ: 2nd
டி38 20மீ: 3வது
தனிப்பட்ட சாதனை(கள்)100மீ:13.34 விநாடிகள்
200மீ: 28.07 விநாடிகள்

ஒலிவியா "லிவ்வி" பிரீன் (பிறப்பு: 1996 சூலை 26) இவர் வேல்சைச் சேர்ந்த இணை ஒலிம்பியன் தடகள வீரராவார். இவர் முக்கியமாக டி 38 வகை விரைவோட்டத்திலும், எஃப் 38 வகை நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் போட்டியிடுகிறார். 2012 ஆம் ஆண்டில், இவர் 2012 கோடைகால இணை ஒம்பிக்கிற்கு தகுதி பெற்றார். இது டி38 வகை 100 மீட்டரிலும், 200 மீட்டர் விரைவோட்டத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இது டி35-38 பெண்கள் ரிலே அணியின் ஒரு பகுதியாகும். இவர் 2014 மற்றும் 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் வேல்சைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2018 இல் குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற விளையாட்டுகளில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார். [1] [2]

வரலாறு[தொகு]

இங்கிலாந்தின் கில்ட்போர்டில் வேல்சு தாய்க்கும், இசுகாட்லாந்து தந்தைக்கும் இவர் பிறந்தார். பெருமூளை வாதம் கொண்ட இவர், தொடக்கப்பள்ளியில் இருந்தபோதே விளையாட்டைத் தொடங்கினார். [3] இணை ஒலிம்பிக் தேர்வுக்காக அனுமதிக்கும் வகையில், சவரி 2012 இல் இவருக்கு டி38 வகைப்பாடு வழங்கப்பட்டது. [4] சூன் 2012 இல், நெதர்லாந்தின் ஸ்டாட்ஸ்கனாலில் நடந்த ஐபிசி தடகள ஐரோப்பியப் போட்டிகளில் போட்டியிட்டு, 100 மீட்டரிலும், 200 மீட்டரிலும் வெண்கலம் வென்றார். [5] ஐரோப்பியப் போட்டிகளில் 100 மீட்டரில் இவர் ஒரு தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்தார். மேலும் சூலை தொடக்கத்தில் இலண்டனின் கிரிஸ்டல் பேலஸில் நடந்த டயமண்ட் லீக் போட்டிகளில் 200 மீட்டரில் சிறப்பான நேரத்தை பதிவு செய்தார். இவரது காலங்கள் 2012 கோடைகால பாராலிம்பிக்கிற்கு பிரித்தானிய அணிக்கு தாமதமாக அழைப்பு விடுத்தன . இவர் 2012 விளையாட்டுகளின் போது பிரித்தானிய இணை ஒலிம்பிக் தடகள அணியின் இளைய உறுப்பினராக இருந்தார்.

2012 இலண்டனில் இணை ஒலிம்பிக் விளையாட்டு[தொகு]

இவர், டி 38 வகை 100 மீட்டரிலும், 200 மீட்டர் விரைவோட்டத்தில் இலண்டனில் போட்டியிட்டார். டி 35-38 வகைப்பாடு பெண்கள் ரிலே அணியில் முதன்முதலில் கால் பதித்தார்.

100 மீ: 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். மார்கரிட்டா கோன்சரோவா 13.45 விநாடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். [6]

200 மீ: இரண்டாவது வேகமான ஓட்டப்பந்தய வீரராக தகுதி பெற்ற பிறகு, 200 மீட்டர் இறுதிப் போட்டியில் இவர் 30.22 வினாடிகளில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

4 × 100 மீ ரிலே: இவர் (ரிலே இறுதிப்போட்டியில் முதல் கட்டத்த்தில் ஓடினார்) அணித் தோழர்கள் ஜென்னி மெக்லொக்லின், பெத்தி உட்வார்ட் , கத்ரீனா ஹார்ட் [7] ஆகியோருடன் 56.08 விநாடிகள் ஓடி [8] வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒரு பருவத்தின் சிறந்த நேரமாகும்.

2013 லியோனில் நடந்த ஐபிசி உலகப் போட்டிகள[தொகு]

ஐபிசி உலகப் போட்டியில் லியோனில் 100 மீட்டரிலும், 200 மீட்டரிலும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

2014[தொகு]

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வேல்சுக்காகப் போட்டியிட்டு நீளம் தாண்டுதலில் ஏழாவது இடத்தில் பதக்கங்களை வென்றார்.

பின்னர் ஐபிசி ஐரோப்பியப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு 100 மீட்டர் ஓட்டத்தில் தனிப்பட்ட வீரர் சோபி ஆன், உருசியாவின் மார்கரிட்டா கோன்சரோவா ஆகியோருக்கு பின்னால் வந்து வெண்கலத்தை வென்றார்.

இவர் டி35-38 வகைப்பாடு ரிலே அணியின் இரண்டாவது கட்டத்தில் ஓடினார். இதில் பெத்தானி உட்வார்ட், சோபி ஆன் மற்றும் ஜென்னி மெக்லொக்லின் ஆகியோர் இவருடன் ஓடினார். இந்த அணி 53.84 நிமிடங்கள் என்ற புதிய பிரிட்டிசு சாதனையில் உருசியாவுக்கு பின்னால் வந்து வெள்ளியை வென்றது.

குறிப்புகள்[தொகு]

  1. "Breen hoping for a double celebration at Commonwealth Games", The News, 6 July 2014 பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம். Retrieved 25 July 2014
  2. Henson, Mike (8 April 2018). "Commonwealth Games: Nick Miller and Olivia Breen win gold medals". BBC Sport.
  3. "Olivia Breen". paralympics.org.uk. மூல முகவரியிலிருந்து 25 August 2012 அன்று பரணிடப்பட்டது.
  4. McMahin, Mark (11 July 2012). "Breen is fast-tracked to Games". portsmouth.co.uk.
  5. "Olivia Breen". thepowerof10.info.
  6. "London 2012 Official Results". மூல முகவரியிலிருந்து 6 September 2012 அன்று பரணிடப்பட்டது.
  7. "Welsh Sprinters earn Bronze".
  8. "London 2012 Official Results". மூல முகவரியிலிருந்து 7 September 2012 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_பிரீன்&oldid=3027789" இருந்து மீள்விக்கப்பட்டது