2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XIV மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
London Paralympics 2012.svg.png
நடத்தும் நகரம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
பங்குபற்றும் அணிகள்164
பங்குபற்றும் வீரர்கள்4294
நிகழ்வுகள்21 விளையாட்டுக்களில் 503
துவக்க விழா29 ஆகத்து
இறுதி விழா9 செப்டம்பர்
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் அரங்கம்இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
கோடைக்காலம்:
பீஜிங் 2008 ரியோ 2016  >
குளிர்காலம்:
வான்கூவர் 2010 சோச்சி 2014  >

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Paralympic Games) பதினைந்தாவது இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் மாநகரில் ஆகத்து 29, 2012 முதல் செப்டம்பர் 9, 2012 வரை நடைபெற்றது.

2012இல் இலண்டன் மூன்றாம் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்துகின்ற போதும் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் இந்த விளையாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் முறையாக நடைபெறுகின்றன; 1984ஆம் ஆண்டின் கோடைக்கால இணை ஒலிம்பிக் ஐக்கிய இராச்சியத்தின் இசுடோக் மண்டெவில்லிலும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் கூட்டாக நடைபெற்றன.

1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் துவங்கப்பட்ட அதே நாளில் உடல் குறையுடையோருக்கான முதல் அமைப்புசார் விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை இசுடோக் மண்டெவில் மருத்துவமனையின் மருத்துவர் லுட்விக் கட்மான்[1] தண்டுவடத்தில் காயப்பட்ட பிரித்தானிய இரண்டாம் உலகப் போர் முன்னாள் வீரர்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த முதல் போட்டிகள் உலக சக்கர நாற்காலி மற்றும் உறுப்பிழந்தோர் விளையாட்டுக்கள் என அழைக்கப்பட்டன.[2]

பங்குபற்றும் நாடுகள்[தொகு]

2012 லண்டன் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியே அதிக எண்ணிக்கையான போட்டியாளர்கள் பங்குபற்றும் போட்டியாகவும் அதிக எண்ணிக்கையான நாடுகள் பங்குபற்றும் போட்டியாகவும் உள்ளது.[3] 2008 ஒலிம்பிக் போட்டிகளிலும் பார்க்க 250 பேர் கூடுதலாக, அதாவது 4,200 போட்டியாளர்கள் இதில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய நாடுகளிலும் மேலதிகமாக 17 நாடுகள் இதில் பங்குபற்றுகின்றன. பதினான்கு நாடுகள் முதன்முதலாக இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. அவையாவன: அன்டிகுவா மற்றும் பார்படா, புரூணை, கமரூன், கொமோரோஸ், கொங்கோ சனநாயகக் குடியரசு, ஜிபுட்டி, காம்பியா, கினியா-பிஸ்ஸௌ, லைபீரியா, மொசாம்பிக், வட கொரியா, சான் மரீனோ, சொலமன் தீவுகள் மற்றும் அமெரிக்க வெர்ஜின் தீவுகள்.[3] 1988க்குப் பின் முதற்தடவையாக டிரினிடாட் மற்றும் டொபாகோ பங்குபற்றுகிறது.[4][5] போட்ஸ்வானாவும் மலாவியும் ஆரம்பத்தில் பங்குபற்ற எண்ணியிருந்தும், ஆரம்ப விழாவுக்குச் சற்று முன்னர் அரச நிதியுதவியின்மையைக் காரணங் காட்டி போட்டியிலிருந்து விலகிக்கொண்டன. இதில் மலாவி தனது முதல் மாற்றுத்திறணாளர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட எதிர்பார்த்திருந்தது.[6]

பின்வரும் தேசிய இணை ஒலிம்பிக் குழுக்கள் தமது அணிகளை விளையாட அனுப்பியுள்ளன:[7]

பங்குபற்றும் தேசிய இணை ஒலிம்பிக் அணிகள் (போட்டியாளர் எண்ணிக்கை)

விளையாட்டுக்கள்[தொகு]

ஒவ்வொரு விளையாட்டிலும் உள்ள போட்டிகளின் எண்ணிக்கை அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

 ●  துவக்க விழா     போட்டி நிகழ்வுகள்  ●  இறுதிப் போட்டிகள்  ●  இறுதி விழா
ஆகத்து/ செப்டம்பர் 2012 29
புத.
30
வியா
31
வெள்.
1
சனி
2
ஞாயி.
3
திங்.
4
செவ்.
5
புத.
6
வியா.
7
வெள்.
8
சனி
9
ஞாயி.
தங்கப்
பதக்கங்கள்
வில் வித்தை 4 3 2 9
தடகளம் 11 17 20 17 21 20 21 16 23 4 170
பொச்சா 3 4 7
மிதிவண்டி 5 5 5 3 18 4 6 4 50
குதிரையேற்றம் 2 3 2 4 11
அணிக்கு ஐவராக காற்பந்தாட்டம் 1 1
அணிக்கு எழுவராக காற்பந்தாட்டம் 1 1
கோல் பந்து 2 2
யுடோ 4 4 5 13
பாரம் தூக்குதல் 2 3 3 3 3 3 3 20
துடுப்பு படகோட்டம் 4 4
பாய்மரப் படகோட்டம் 3 3
சுடுதல் 2 2 2 1 1 1 1 2 12
நீச்சல் 15 15 15 14 14 15 15 15 15 15 148
மேசைப் பந்தாட்டம் 11 10 4 4 29
கைப்பந்தாட்டம் 1 1 2
சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டம் 1 1 2
சக்கர நாற்காலி வாள்வீச்சு 4 4 2 1 1 12
சக்கர நாற்காலி காற்பந்தாட்டம் 1 1
சக்கர நாற்காலி டென்னிசு 1 2 3 6
மொத்த இறுதிப் போட்டிகள் 28 40 49 59 51 54 64 47 48 57 6 503
அனைத்து மொத்தம் 28 68 117 176 227 281 345 392 440 497 503
விழாக்கள்
ஆகத்து/ செப்டம்பர் 2012 29
புத.
30
வியா.
31
வெள்.
1
சனி
2
ஞாயி.
3
திங்.
4
செவ்.
5
புத.
6
வியா.
7
வெள்.
8
சனி
9
ஞாயி.
தங்கப்
பதக்கங்கள்

[17]

பதக்கப் பட்டியல்[தொகு]

குறிப்பு

      போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சீனா 91 75 65 231
2  உருசியா 36 38 28 102
3  ஐக்கிய இராச்சியம்
34 43 43 120
4  உக்ரைன் 32 24 28 84
5  ஆத்திரேலியா 32 23 30 85
6  ஐக்கிய அமெரிக்கா 31 29 38 98
7  பிரேசில் 21 14 8 43
8  செருமனி 18 26 22 66
9  போலந்து 14 13 9 36
10  நெதர்லாந்து 10 10 19 39

மேற்கோள்கள்[தொகு]

 1. Paralympics History பரணிடப்பட்டது 2009-02-06 at the வந்தவழி இயந்திரம் By Susana Correia in Accessible Portugal Online Magazine
 2. "History of the Paralympic Movement". Canadian Paralympic Committee. 2 ஆகஸ்ட் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2010 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "It's Official – London 2012 to be Biggest Paralympic Games Ever | IPC". Paralympic.org. 8 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Paralympic athletes thrill students", The Guardian (T&T), 17 May 2012
 5. Trinidad & Tobago at the Paralympics, IPC
 6. Degun, Tom (29 August 2012). "Botswana and Malawi pull out of London 2012 Paralympic Games". inside world parasport. 29 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 7. https://archive.is/20130103164138/www.london2012.com/paralympics/athletes/%23tabFilter-3
 8. https://archive.is/20121204173352/www.london2012.com/paralympics/country/faroe-islands/
 9. "Rogoimuri ruled out of 2012 Paralympics". Fijilive.com. 2012-08-23. 2012-08-29 அன்று பார்க்கப்பட்டது.
 10. https://archive.is/20121205031826/www.london2012.com/paralympics/country/jordan/athletes/index.html
 11. North Korea - Athletes
 12. "Mūsējo sportistu starti Paralimpiskajās spēlēs Londonā 2012" (Latvian). Latvian Paralympic Comittee. 10 August 2012. 19 August 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 13. "London games: 500 Days to go!". Ukinlebanon.fco.gov.uk. 9 August 2012. 13 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 14. BNS. "Paskelbta Lietuvos rinktinė, startuosianti Londono parolimpinėse žaidynėse — DELFI Žinios". Sportas.delfi.lt. 13 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Team South Africa named for 2012 Paralympics". SASCOC. 26 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Comité Paralímpico Español - Juegos Paralímpicos Londres 2012 - Noticias". Paralimpicos.es. 28 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 17. http://media.ticketmaster.com/en-gb/img/sys/tournament/london2012/para-complete.pdf

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
பீஜிங்
கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
இலண்டன்

XIV Paralympiad (2012)
பின்னர்
ரியோ டி ஜெனிரோ