ஒரண்டை
ஒரண்டை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | பேர்சிஃபார்மீசு
|
குடும்பம்: | அலந்தூரிடே
|
பேரினம்: | அகந்தூரசு
|
இனம்: | A. leucosternon
|
இருசொற் பெயரீடு | |
Acanthurus leucosternon E. T. Bennett, 1833 |
ஒரண்டை (Acanthurus leucosternon) என்பது ஒரு கடல் வெப்பமண்டல மீன் ஆகும், இது முள்வால் வகையி குடும்பத்தைச் சேர்ந்த அகந்தூரிடே ஆகும்.
விளக்கம்
[தொகு]இந்த மீன் சராசரியாக 23 செமீ (9 அங்குலம்) நீளம் வரை எட்டும். தட்டையான இந்த மீனின் உடல் நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற முள்வால் வகையி மீன்களைப் போலவே, ஒரண்டை அதன் முன் துடுப்பால் நீந்துகிறது. இதன் வால் துடுப்பு பிறை வடிவத்தில் உள்ளது. இந்த மீனுக்கு இந்த குடும்பத்தின் பிற மீன்களைப் போல "கூரிய கத்தி போன்ற முள்" உள்ளன. இந்த முள் வால் துடுப்பின் அடியில் இரு பக்கங்களிலும் உள்ளன.[1] இதன் வாய் சிறியது என்பதால் குறுகிய இடங்களில் உள்ள உணவை எடுக்க முடியும். இதற்கு கத்திரி போன்ற சிறிய கூர்மையான பற்கள் உள்ளது.[2] இதன் இரு பக்க உடல் பகுதி நீல நிறத்தில் இருக்கும். இதன் முதுகு துடுப்பு மற்றும் வால் துடுப்பின் அடிப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.[2] தலை கருப்பு நிறத்திலும்,[2] வாய், தொண்டைப் பகுதி, குத மற்றும் இடுப்பு துடுப்புகள் வெண்மையானவையாக இருக்கும்.[3] மார்புத் துடுப்புகள் மஞ்சள் நிற பிரதிபலிப்புகளுடன் காணப்படும். மீன் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை அதன் நீல நிறத்தின் தீவிரம் காட்டுகிறது. மீன் முதிர்ச்சியடையும் போது நிற மாற்றங்களுக்கு உள்ளாகாது.
பரவலும், வாழ்விடமும்
[தொகு]இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல கடல் நீரில் ஒரண்டை காணப்படுகிறது.[4] இந்த இனமானது பவளப் பாறைகள் தொடர்புடைய ஆழமற்ற மற்றும் தெளிவான கடல் நீரில் காணப்படுகின்றன. இது தட்டையான மேல் பாறைகள் மற்றும் கடல்சார் சரிவுகளில் உள்ள பகுதிகளை விரும்புகிறது.[4]
நடத்தை
[தொகு]முள்வால் வகையி குடும்பத்தின் பெருமாலான மீன்களைப் போல ஒரண்டை மீனானது தாவர உண்ணி ஆகும். இவை பெரும்பாலும் கடற் பாசிகளை உண்கின்றன.[5] ஒரண்டை ஒரு பகலாடி ஆகும். இது மற்ற முள்வால் வகையி மீன்களுடன் கூட்டமாக திரியும்.[6] உணவு ஏராளமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இது கூட்டடமாக உணவு உண்ணும், ஆனால் பற்றாக்குறை சந்தர்ப்பங்களில், இது உணவுக்காக தனித்தனியாக போட்டியிடும்.[2] இது தன் கத்தி போன்ற முட்களை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடியது.[6]
பொருளாதார மதிப்பு
[தொகு]
இவை நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை தொழிலைத் தவிர வேறு எதற்கும் அரிதாகவே பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக வளர்ப்பதற்காக விற்கப்படும் மீன் ஆகும். இதை பராமரிப்பது சற்று கடினம். இவை இரவில் பவளப்பாறை குகைகளில் தஞ்சமடைகின்றன. இவை அகாந்தூரசு இனத்தில் உள்ள சில வகை மீன்களைத் தவிர பெரும்பாலான மீன் இனங்களுடன் இணக்கமாக உள்ளன.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ Clipperton, John (1 September 2013). "Powder Blue Tang – Acanthurus leucosternon". Marine Habitat magazine. Fish Junkies Ltd. Archived from the original on 14 February 2014. Retrieved 13 February 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 DK Publishing. Animal Life: Secrets of the Animal World Revealed. DK Publishing. p. 188. ISBN 978-0-7566-8886-8.DK Publishing (17 January 2011). Animal Life: Secrets of the Animal World Revealed. DK Publishing. p. 188. ISBN 978-0-7566-8886-8.
- ↑ Andreas Vilcinskas, La vie sous-marine des tropiques, Vigot, 2002, 475 p. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2711415252), p. 366
- ↑ 4.0 4.1 "Facts about Powder Blue Tang (Acanthurus leucosternon) - Encyclopedia of Life". Eol.org. Retrieved 2014-01-04.
- ↑ "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2004 version. N.p.: FishBase, 2004.
- ↑ 6.0 6.1 6.2 Lougher, Tristan (2006). What Fish?: A Buyer's Guide to Marine Fish. Interpet Publishing. p. 111. ISBN 0-7641-3256-3.Lougher, Tristan (2006). What Fish?: A Buyer's Guide to Marine Fish. Interpet Publishing. p. 111. ISBN 0-7641-3256-3.