முள்வால் வகையி
அக்காந்துரைடீ | |
---|---|
அக்காந்துரஸ் சோகல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்காந்துரைடீ
|
பேரினம் | |
அக்காந்துரஸ் |
அக்காந்துரைடீ (Acanthuridae) அல்லது முள்ளுடம்பிகள் என்பன ஒரு மீன் குடும்பம் ஆகும். அறிவியற்பெயரில் உள்ள அக்காந்த்தசு (acanthus) என்னும் சொற்பகுதி கிரேக்க மொழியில் முள், கூரிய முள் என்னும் பொருள் கொண்டது. இக் குடும்பம், ஆறு பேரினங்களில் ஏறத்தாழ 80 இனங்களை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலும், பவளப் பாறைகளுக்கு அருகே, வெப்பவலயக் கடல் பகுதிகளில் வாழும் கடல் மீன்கள் ஆகும். இவற்றுட்பல ஒளிரும் நிறங்களைக் கொண்டவை. அதனால், தொட்டிகளில் வளர்ப்பதற்கு விரும்பப்படுகின்றன.
வால் பகுதியில் பக்கத்துக்கு ஒன்று அல்லது பலவாக அமைந்திருக்கும் முதுகெலும்பு முட்கள் இக் குடும்பத்துக்குரிய தனித்துவமான இயல்பு ஆகும். இம் முட்கள் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்குக் கூர்மையானவை. முதுகுத் துடுப்பு, குதத் துடுப்பு ஆகிய இரண்டுமே பெரியவை. உடலின் நீளத்தின் பெரும்பகுதி வரை நீண்டிருப்பவை. சிறிய வாயில் ஒற்றை வரிசையில் பற்கள் காணப்படுகின்றன. இவை அல்காக்களை உண்பதற்குப் பயன்படுகின்றன.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2007). "Acanthuridae" in FishBase. February 2007 version.