ஏபசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏபசு (Apus) என்ற பறவை பேரினமானது ஏபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக உழவாரன்கள் சிலவற்றை உள்ளடக்கியது. பொதுவாக இவை உழவாரன் என்று அழைக்கப்படுகிறது.

இவை உலகின் வேகமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாகும். இவை தகைவிலான் குருவிகளை ஒத்திருக்கின்றன. ஆனால் தொடர்புடையவை அல்ல. உழவாரன்கள் குறுகிய வால்களையும் அரிவாள் வடிவ இறக்கைகளையும் கொண்டுள்ளன. உழவாரன்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆகாயாத்தில் உயரமான இடத்தில் செலவிடுகின்றன. மிகக் சிறிய கால்களைக் கொண்டுள்ளன, மேலும் இவற்றை பெரும்பாலும் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ள பயன்படுத்துகின்றன.

வகைப்பாட்டியல்[தொகு]

1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கார்ல் லின்னேயஸ் என்பவரால் ஏபசு பேரினம் உருவாக்கப்பட்டது. இது 1777ஆம் ஆண்டில் இத்தாலிய இயற்கை ஆர்வலர் ஜியோவானி அன்டோனியோ ஸ்கோபோலியால் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றினத்தின் இரு சொல் பெயரிலிருந்து (கிருண்டோ ஏபசு) பெறப்பட்டது.[2][3][ [4] ஏபசு என்ற பெயர் உழவாரன் என்பதற்கான இலத்தீன் சொல்லாகும் ஆகும். இது கால்கள் இல்லாத ஒரு வகை தகைவிலான் என்று பழங்காலத்தவர்களால் கருதப்பட்டது (பண்டைய கிரேக்கத்திலிருந்து α, a, "இல்லாத", மற்றும் πούς, pous, "foot").[5]

1950களுக்கு முன்பு, எந்த உயிரினத்தின் குழு ஏபசு என்ற பேரினப் பெயரைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் சில சர்ச்சைகள் இருந்தன.[6] 1801ஆம் ஆண்டில், போச் சிறிய ஓட்டுமீன் உயிரினங்களுக்கு, இன்று திரையோப்சு என அழைக்கப்படும் உயிரினங்களுக்கு, ஏபசு என்ற பேரினப் பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆய்வாளர்கள் தொடர்ந்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். கெய்ல்ஹாக் (1909 இல்) 1777இல் ஸ்கோபோலியால் ஏபசு என்ற பறவை பேரினம் ஏற்கனவே இருந்ததால் இது தவறானது என்று தெரிவித்தார். 1958ஆம் ஆண்டு வரை, விலங்கியல் பெயரிடுதலுக்கான பன்னாட்டு ஆணையம் ஓட்டுமீன்களுக்கு ஏபசு என்ற பேரினப் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராகத் தீர்ப்பளித்து, இதற்குப் பதிலாக திரைப்சு என்ற பேரினப் பெயரினை அங்கீகரித்ததும் சர்ச்சை முடிவுக்கு வந்தது.[7]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் 20 சிற்றினங்கள் உள்ளன:[8]

  • கேப் வெர்டே உழவாரன், ஏபசு அலெக்சாண்ட்ரி
  • சாதா உழவாரன், ஏபசு ஏபசு
  • ப்ளைன் உழவாரன், ஏபசு யூனிகோலர்
  • நியான்சா உழவாரன், ஏபசு நியான்சே
  • பாலிட் உழவாரன், ஏபசு பாலிடசு
  • ஆப்பிரிக்க கருப்பு உழவாரன், ஏபசு பார்பேட்டசு
  • மலகாசி பிளாக் உழவாரன், ஏபசு பால்சுடோனி
  • பெர்னாண்டோ குடா உழவாரன் ஏபசு சுலேடினியா
  • போர்ப்சு-வாட்சன் உழவாரன், ஏபசு பெர்லியோசீ
  • பிராட்பீல்டின் உழவாரன், ஏபசு பிராட்பீல்டி
  • பசிபிக் உழவாரன், ஏபசு பசிபிகசு
  • சலீம் அலியின் உழவாரன், ஏபசு சலிமாலி
  • பிளைத் உழவாரன், ஏபசு லுகோனிக்சு
  • குக்கி உழவாரன், ஏபசு குக்கி
  • அடர்-பிடரி உழவாரன், ஏபசு அகுட்டிகாடா
  • நாட்டு உழவாரன், ஏபசு அபினிசு
  • வீட்டு உழவாரன், ஏபசு நிபாலென்சிசு
  • கோரசு உழவாரன், ஏபசு கோரசு
  • வெண் பிடரி உழவாரன், ஏபசு கேபர்
  • பேட்சி உழவாரன் ஏபசுபேட்சி

அறியப்பட்ட புதைபடிவ சிற்றினங்கள்:

  • ஏபசு கைலார்டி (லா க்ரைவ்-செயின்ட்-ஆல்பன், பிரான்ஸ் நாட்டின் மத்திய/பிற்பகுதி மியோசீன்)
  • ஏபசு வெட்மோரி (ஆரம்பகால - லேட் ப்ளியோசீன்? SC மற்றும் SE ஐரோப்பாவின்)
  • ஏபசு பாரனென்சிசு (தென்கிழக்கு ஐரோப்பாவின் லேட் ப்ளியோசீன்)
  • ஏபசு சப்மெல்பா (சுலோவாக்கியாவின் மத்திய பிளீஸ்டோசீன்)

மியோசீன் "ஏபசு" இக்னோடசு இப்போது புரோசைப்செலாய்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Apodidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. Giovanni Antonio Scopoli (1777) (in la). Introductio ad historiam naturalem. Pragae: Apud Wolfgangum Gerle. பக். 483. https://www.biodiversitylibrary.org/page/11269479. 
  3. Check-list of Birds of the World. Cambridge, Massachusetts: Harvard University Press. 1940. பக். 244. https://www.biodiversitylibrary.org/page/14476715. 
  4. Carl Linnaeus (1758) (in la). Systema Naturæ per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis, Volume 1. Holmiae:Laurentii Salvii. பக். 192. https://www.biodiversitylibrary.org/page/727101. 
  5. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 52. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
  6. O. S. Møller; J. Olesen; J. T. Høeg (2003). "SEM studies on the early larval development of Triops crancriformis (Bosc)(Crustacea: Branchiopoda, Notostraca)". Acta Zoologica 84 (4): 267–284. doi:10.1046/j.1463-6395.2003.00146.x. 
  7. Opinions and Declarations Rendered by the International Commission on Zoological Nomenclature. https://www.biodiversitylibrary.org/page/34986782. 
  8. "Owlet-nightjars, treeswifts & swifts". International Ornithologists' Union. 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபசு&oldid=3826862" இலிருந்து மீள்விக்கப்பட்டது