எகிப்தின் பவ்சியா
பவ்சியா | |
---|---|
1940 களில் பவ்சியா | |
எகிப்தின் ராணி மனைவி | |
Tenure | 16 செப்டம்பர் 1941 – 17 நவம்பர் 1948 |
பிறப்பு | ராஸ் எல்- தின் அரண்மனை, அலெக்சாந்திரியா, எகிப்திய சுல்தானகம் | 5 நவம்பர் 1921
இறப்பு | 2 சூலை 2013 அலெக்சாந்திரியா, எகிப்து | (அகவை 91)
புதைத்த இடம் | அல்-ரிபா இ பள்ளிவாசல், கெய்ரோ, எகிப்து |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | முகமது அலி (பிறப்பால்) பகலவி (திருமணத்தால்) |
தந்தை | எகிப்தின் முதலாம் புவாது |
தாய் | நசிலி சப்ரி |
எகிப்தின் பவ்சியா ( Fawzia of Egypt ) ( நவம்பர் 1921 - 2 ஜூலை 2013), பவ்சியா பகலவி அல்லது பவ்சியா சிரின் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் எகிப்திய இளவரசியாவார். ஈரானின் முகமது ரேசா பகலவியை திருமணம் செய்துகொண்டதன் மூலம் ஈரானின் ராணியானர்.
இசுமாயில் பாஷாவின் ஏழாவது மகன் முதலாம் புவாத்தின் மகளான இவருக்கு ஈரானிய பட்டத்து இளவரசருடன் 1939 இல் நடந்த திருமணம் ஒரு அரசியல் ஒப்பந்தமாகும். இது மத்திய கிழக்கில் எகிப்திய சக்தியையும் செல்வாக்கையும் ஒருங்கிணைத்தது. அதே நேரத்தில் புதிய ஈரானிய ஆட்சிக்கு மிகவும் மதிப்புமிக்க எகிப்திய அரச மாளிகையுடன் இணைந்து மரியாதையைக் கொண்டு வந்தது. 1945 இல் பவ்சியா எகிப்திய முறையில் விவாகரத்து பெற்றார் (1948 வரை ஈரானில் அங்கீகரிக்கப்படவில்லை). இவர்களுக்கு சகானாசு பக்லவி என்ற ஒரு மகள் இருந்தார்.
1949 இல், பவ்சியா எகிப்திய தூதரான இசுமாயில் சிரைன் என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
வாழ்க்கை
[தொகு]1921 நவம்பர் 5 இல் எகிப்து மற்றும் சூடானின் சுல்தான் புவாது மற்றும் அவரது இரண்டாவது மனைவி நசிலி சப்ரி ஆகியோரின் மூத்த மகளாக அலெக்சாந்திரியாவில் உள்ள ராஸ் எல்-தின் அரண்மனையில் இளவரசி பவ்சியா பிறந்தார். இளவரசி பவ்சியா தனது தந்தையின் மூலம் சர்க்காசியன் வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் தனது தாயின் மூலம் பிரெஞ்சு, துருக்கியம் மற்றும் எகிப்திய வம்சாவளியைக் கொண்டவர். [1]
இளவரசி ஃபாவ்சியா சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றார் [2] மேலும் தனது தாய்மொழியான அரேபிய மொழியைத் தவிர ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார். [3]
இவரது அழகு பெரும்பாலும் திரைப்பட நட்சத்திரங்களான எடி இலமார் மற்றும் விவியன் லீ ஆகியோருடன் ஒப்பிடப்பட்டது.[4]
திருமணம்
[தொகு]ஈரானின் பட்டத்து இளவரசர் முகமது ரேசா பகலவியுடன் இளவரசி பவ்சியாவின் திருமணம் இவரது தந்தை ரேசா ஷா பகலவியால் திட்டமிடப்பட்டது. [5] [6] சன்னி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மற்றும் சியா அரச குடும்பத்தைச் சேர்ந்த பட்டத்து இளவரசரை ஒன்றிணைத்ததில் இந்தத் திருமணம் குறிப்பிடத்தக்கது. [7]
ஈரானின் ராணி
[தொகு]திருமணத்தைத் தொடர்ந்து, இளவரசிக்கு ஈரானிய குடியுரிமை வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டத்து இளவரசர் நாடுகடத்தப்பட்ட தனது தந்தைக்குப் பிறகு ஈரானின் ஷாவாக ஆனார். தனது கணவர் அரியணை ஏறிய உடனேயே, ராணி பவ்சியா 21 செப்டம்பர் 1942, லைஃப் இதழின் அட்டைப்படத்தில் தோன்றினார். செசில் பீட்டனால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. [8] இவர் ஈரானில் புதிதாக நிறுவப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சங்கத்திற்கு தலைமை தாங்கினார். [9]
அரசியல் ரீதியாக நடத்திவைக்கப்பட்ட இத்திருமணம் தோல்வியில் முடிந்தது. பவ்சியா ஈரானில் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். [10] [11]
ராணி பவ்சியா (அப்போது ஈரானில் பேரரசி என்ற பட்டம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை) மே 1945 இல் கெய்ரோவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் எகிப்திய முறையில் விவாகரத்து பெற்றார். [12] [13] அறிக்கைகள், இளவரசி பவ்சியா ஷாவின் ஆண்மைக்குறைவு காரணமாக அவரை கேலி செய்ததாகவும் அவமானப்படுத்தியதாகவும் இதனால் அவர்கள் பிரிந்தனர் எனக் கூறுகிறது. [13]
இறப்பு
[தொகு]1952 ஆம் ஆண்டு ஃபாரூக் மன்னரை வீழ்த்திய புரட்சிக்குப் பிறகு பவ்சியா எகிப்தில் வாழ்ந்தார். [14] பவ்சியா அலெக்சாந்திரியாவில் வசித்து வந்தார். அங்கு இவர் 2 ஜூலை 2013 அன்று தனது 91 வயதில் இறந்தார் [2] [15] ஜூலை 3 ஆம் தேதி கெய்ரோவில் உள்ள சயீதா நபீசா மசூதியில் நண்பகல் தொழுகைக்குப் பிறகு இவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. [16] அவர் தனது இரண்டாவது கணவருக்கு அடுத்ததாக கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட்டார். [8]
ஈரானில் உள்ள ஒரு நகரத்திற்கு பவ்சியாபாத் என இவரது பெயரிடப்பட்டது [3] கெய்ரோவில் உள்ள ஒரு தெருவிற்கு அமிரா பவ்சியா தெரு என பெயரிடப்பட்டது. ஆனால் 1956 இல் அது முஸ்தபா கமல் தெரு என மறுபெயரிடப்பட்டது. [17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rosten, David B (2015), "Queen Nazli Sabri", The Last Cheetah of Egypt: A Narrative History of Egyptian Royalty from 1805 to 1953, iUniverse, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4917-7939-2
- ↑ 2.0 2.1 "Princess Fawzia Fuad of Egypt". The Telegraph. 5 July 2013. https://www.telegraph.co.uk/news/obituaries/10162842/Princess-Fawzia-Fuad-of-Egypt.html."Princess Fawzia Fuad of Egypt". The Telegraph. 5 July 2013. Retrieved 16 July 2013.
- ↑ 3.0 3.1 "Colorful Fetes Mark Royal Wedding that will Link Egypt and Persian". The Meriden Daily Journal. https://news.google.com/newspapers?id=id9IAAAAIBAJ&pg=3855,4689544&dq=pahlavi&hl=en.
- ↑ Hansen, Suzy (21 December 2013). "Queen Fawzia". The New York Times Magazine. https://www.nytimes.com/news/the-lives-they-lived/2013/12/21/queen-fawzia/.
- ↑ Camron Michael Amin. The Making of the Modern Iranian Woman: Gender, State Policy, and Popular Culture, 1865-1946.
- ↑ "Centers of Power in Iran" (PDF). CIA. May 1972. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
- ↑ "Princess Fawzia of Egypt Married". The Meriden Daily Journal. 15 March 1939. https://news.google.com/newspapers?id=it9IAAAAIBAJ&pg=3610,4771011&dq=princess+fawzia&hl=en.
- ↑ 8.0 8.1 Ghazal, Rym. "A forgotten Egyptian Princess remembered". http://www.thenational.ae/news/world/a-forgotten-egyptian-princess-remembered.
- ↑ Kashani-Sabet, Firoozeh (2011). Conceiving Citizens: Women and the Politics of Motherhood in Iran. New York: Oxford University Press. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190254292.
- ↑ Miliani, Abbas The Shah, London: Macmillan 2011 p. 90.
- ↑ Miliani, Abbas The Shah, London: Macmillan 2011 p. 78.
- ↑ Steyn, Mark. "The Princess and the Brotherhood". http://www.nationalreview.com/article/352784/princess-and-brotherhood-mark-steyn/page/0/1.
- ↑ 13.0 13.1 Anderson, Jack. "CIA: Shah of Iran a dangerous ally". Washington. https://news.google.com/newspapers?id=jUFSAAAAIBAJ&pg=6701,1669389&dq=princess+fawzia&hl=en.
- ↑ "Shah's first wife Princess Fawzia dies in Egypt". Dawn. 3 July 2013. http://dawn.com/news/1022360/shahs-first-wife-princess-fawzia-dies-in-egypt.
- ↑ "Princess Fawzia, Shah's first wife, dies in Egypt". Reuters இம் மூலத்தில் இருந்து 2019-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190427175116/https://uk.reuters.com/article/uk-fawzia-idUKBRE9610Q820130702.
- ↑ "Death of Princess Fawzia". Alroeya News. 2 July 2013 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029201713/http://www.alroeya-news.net/en/varieties/33304-33334.html.
- ↑ "Maadi Street Names". Egy. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் எகிப்தின் பவ்சியா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- யூடியூபில் Her funeral by Yqeen News
- Egyptian Royalty by Ahmed S. Kamel, Hassan Kamel Kelisli-Morali, Georges Soliman and Magda Malek.
- L'Egypte D'Antan... Egypt in Bygone Days பரணிடப்பட்டது 22 மே 2019 at the வந்தவழி இயந்திரம் by Max Karkegi.
- Chirine Family tree