எகிப்தின் பாரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் பாரூக்
இராணுவ உடையில் பாரூக் மன்னன் (1948)
எகிப்து மற்றும் சூடானின் மன்னன்[1]
பிறப்பு(1920-02-11)11 பெப்ரவரி 1920
அப்தீன் அரண்மனை, கெய்ரோ, எகிப்திய சுல்தானகம்
இறப்பு18 மார்ச்சு 1965(1965-03-18) (அகவை 45)
சான் கேமிலோ மருத்தவமனை, உரோம், இத்தாலி
அரசமரபுமுகமது அலி வம்சம்
தந்தைஎகிப்தின் முதலாம் புவாத்
தாய்நஸ்லி சப்ரி
மதம்இசுலாம்
கையொப்பம்முதலாம் பாரூக்'s signature

முதலாம் பாரூக் (Farouk I) (11 பிப்ரவரி 1920 - 18 மார்ச் 1965) இவர் முகம்மது அலி வம்சத்திலிருந்து எகிப்தின் பத்தாவது ஆட்சியாளராகவும், எகிப்து மற்றும் சூடானின் இறுதி மன்னனாகவும் இருந்தார். இவரது தந்தை முதலாம் புவாத் என்பவருக்குப் பின் 1936 இல் பதவிக்கு வந்தார். 1952 ஆம் ஆண்டு எகிப்திய புரட்சியில் இவர் பதவிலிருந்து தூக்கியெறியப்பட்டு, பின்னர், 1965 இல் இத்தாலிக்கு நாடுகடத்தப்பட்டார்.

இவரது சகோதரி, இளவரசி பௌசியா புவாத், பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் முகம்மத் ரிசா ஷா பகலவியின் முதல் மனைவியாவார். [2]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

இவர், 1920 பிப்ரவரி 11 அன்று கெய்ரோவின் அப்தீன் அரண்மனையில், சுல்தான் முதலாம் புவாத் என்பவருக்கும், அவரது இரண்டாவது மனைவி நஸ்லி சப்ரி என்பவருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். [3] அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த [4] இவர் தனது பாரம்பரியத்தைப் பற்றி எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தார். மேலும் ஒரு மன்னனாக, இவர் 30 அல்பேனிய மெய்க்காப்பாளர்களை தன்னுடைய பாதுகாவலர்களாகக் கொண்டிருந்தார். ஏனெனில் அல்பேனியர்களை தனது வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒரே நபராக இவர் கருதினார். [5]

இத்தாலியைச் சேர்ந்த அன்டோனியோ புல்லி என்பவர் இவரது இளமைக்கால நண்பராக இருந்தார். அவர் பாருக்கின் ஆட்சிக் காலத்தில் எகிப்தின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவரானார். [6] [7] [5] [8] இவரது தந்தை இறப்பதற்கு முன்பு, இங்கிலாந்தின் வூல்விச்சில் உள்ள இராணுவக் கழகத்தில் கல்வி பயின்றார்.

நாணயம் சேகரிப்பு[தொகு]

இவர் வரலாற்றில் மிகவும் பிரபலமான நாணய சேகரிப்புகளில் ஒன்றைக் கொண்டிருந்தார். அதில் மிகவும் அரிதான அமெரிக்கத் தங்க நாணயமான 1933இல் வெளியான இரட்டை கழுகு உருவம் பொறித்த நாணயமும் [9] , 1913இல் வெளியிடப்பட்ட அமெரிக்க ஐந்து-சென்ட் நாணயமும் அடங்கும் . [10]

குடும்பம்[தொகு]

இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி யூசெப் சுல்பிகர் பாஷா என்பவரின் மகள் சபினாஸ் சுல்பிகர் (1921-1988) என்பவருடன் முதல் திருமணம் இருந்தது. சபினாஸ் தனது திருமணத்திற்குப் பின்னர் பரிதா என பெயர் மாற்றப்பட்டார். இவர்கள் ஜனவரி 1938 இல் திருமணம் செய்து கொண்டனர். இராணி பரிதா ஆண் வாரிசை உருவாக்க முடியாமல் போனதால் திருமணம் 1948 இல் விவாகரத்தில் முடிந்தது.

1950 ஆம் ஆண்டில், பதினெட்டு வயதான நாரிமன் சாடெக் (1933-2005) என்பவரை பாரூக் 1951 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் இவர்களுக்கு வருங்காலத்தில் இரண்டாம் புவாத் என்றழைக்கப்பட்ட அகமது பவுத் என்ற மகன் பிறந்தான். குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு இவர்கள் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 1954 இல் விவாகரத்து செய்தனர்.

இறப்பு[தொகு]

இவர் 1965 மார்ச் 18 அன்று ஒரு உணவகத்தில் இறந்தார். எகிப்திய உளவுத்துறை இவர் விஷம் குடித்து இறந்தார் எனக் கூறினாலும், இவரது உடலில் அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. தான் கெய்ரோவில் உள்ள அல் ரிஃபாய் பள்ளிவாசல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விருப்பினார். ஆனால் அந்தக் கோரிக்கையை அப்போதைய எகிப்திய அரசாங்கம் மறுத்து விட்டது. பின்னர், இவர் இத்தாலியிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. Whiteman, Marjorie Millace; Green Hackworth (1963) (snippet view). Digest of International Law. Vol. 2. U.S. State Department. பக். 64. இணையக் கணினி நூலக மையம்:79506166. https://books.google.com/books?id=vVIMAQAAIAAJ&q=%22King+of+Egypt+and+the+Sudan%22. பார்த்த நாள்: 26 February 2010. "The Egyptian Parliament amended the Constitution by Law 176 of 16 October 1951, to provide that the title of the King should be "King of Egypt and the Sudan" instead of "King of Egypt, Sovereign of Nubia, Sudan, Kordofan and Darfur"." 
  2. "Princess Fawzia Fuad of Egypt". The Telegraph. 5 July 2013. https://www.telegraph.co.uk/news/obituaries/10162842/Princess-Fawzia-Fuad-of-Egypt.html. பார்த்த நாள்: 16 July 2013. 
  3. "Biography for King Farouk". IMDb. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  4. "Ancestors of Queen Nazli" (JPG). Egy.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2010.
  5. 5.0 5.1 Stadiem 1991.
  6. Stadiem 1991, ப. 120.
  7. Stadiem 1991, ப. 121.
  8. Stadiem 1991, ப. 122.
  9. Lester, Carl N. "Numismatic "Gumshoe:" On the Trail of King Farouk". Gold Rush Gallery.
  10. "1913 Liberty Head Five Cents". Coinfacts. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Farouk I of Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_பாரூக்&oldid=3061363" இலிருந்து மீள்விக்கப்பட்டது