உள்ளடக்கத்துக்குச் செல்

உண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ixodoidea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
உண்ணி
Tick
புதைப்படிவ காலம்:
இசோடைசு, கடின உண்ணி
இசோடைசு, கடின உண்ணி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ixodoidea
குடும்பங்கள்
  • இசோடிடே – கடின உண்ணிகள்
  • அர்காசிடே – மென் உண்ணிகள்
  • நுட்டல்லிடே – ஒரு இனம்

உண்ணி (Tick) என்பது, சிலந்திதேள் வகுப்பின் உயிரியல் வரிசையில் பாராசிடிஃபார்மெஸ் (Parasitiformes) என்பதின் ஒரு பகுதியாகும். சிலந்திப்பேன் (Mite) பூச்சி வகையை சார்ந்த இது, மென்னுண்ணி இனம் (பேன்) எனும் துணை வகுப்பைச் சேர்ந்ததாகும். ஒட்டுண்ணி வாழ்வு (வெளிப்புற ஒட்டுண்ணிகள்) முறையைப் பின்பற்றி வாழும் இந்த உண்ணிகள், பாலூட்டிகளின் இரத்தம், பறவைகள், மற்றும் சில நேரங்களில் ஊர்வன மற்றும் உப்புநீர்க் குழம்புகளை உண்ணுவதன் மூலம் வாழ்கின்றது.[1] உண்ணி கிரீத்தேசியக் காலத்தில் உருவானவையே என்பதற்கு, தொல்லுயிர் எச்சங்களில் ஒன்றான, காலத்தால் அழியாத சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின்களில் பொதுவான வடிவத்தில் அமிழ்ந்துள்ளன. உண்ணிகள் உலகம் முழுவதும் பரவலாக காணப்பட்டாலும், குறிப்பாக ஈரமான, மற்றும் வெப்பமான காலநிலைகளில் அதிகளவு வாழ்கின்றன.[2]

கிட்டத்தட்ட அனைத்து உண்ணிகளும் இரண்டு பெரிய குடும்பங்களாக உள்ளது, நசுக்க கடினமான "இசோடைதே" (Ixodidae) அல்லது கடின உண்ணிகள் எனப்படுவதும், மற்றும் "அர்காசைதே" (Argasidae) அல்லது மென்மையான உண்ணிகள் என இருவகை உண்ணிகள் ஒன்று சேர்ந்தவையாகும்.[3] எட்டு கால்களை உடைய முதிர்ந்த உண்ணிகள் உணவு உண்ணும் போது இரத்தத்தால் விரிவடைந்து, முட்டை அல்லது பேரிக்காய் வடிவிலான உடல்களையும் அடையும். உடலின் முதுகுப்புறத்தில் கடினமான கவசத்தைக் கொண்டுள்ள கடின உண்ணிகளுக்கு, பறவையலகு போன்ற கடினமான வாய்ப்பகுதி உள்ளது, அதேவேளையில் மிருதுவான உண்ணிகளுக்கு இதுபோன்ற வாய்ப்பகுதி உடலின் கீழ்பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு குடும்பங்களும், விருந்து வழங்கி எனும் ஓம்புயிரின் நாற்றம் அல்லது சூழ்நிலை மற்றும் சுற்றுசூழல் மாற்றங்களின் அடிப்படையில் மறைந்து வாழ்கின்றது.[4]

உண்ணிகள் தனது வாழ்க்கை சுழற்சியில், ஊர்வனவற்றின் வளர்ச்சியினல் ஆரம்பக் கட்டமாக கருதப்படும் முட்டை, விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான முட்டைப்புழு எனப்படும் குடம்பி, கருமுட்டையில் தொடங்கி, முதிர்நிலையை அடையும்வரை பல இடை வளர்நிலைகளைக் குறிக்ககூடிய அணங்கு மற்றும் பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற முறைகளில் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதி நிலையான முதிர்நிலை ஆகிய நான்கு நிலைகளில் இருக்கின்றன.[5] "இசோடைட்" (Ixodid) வகை உண்ணிகள் தங்கள் வாழ்க்கை சுழற்சியை முடிக்க ஒரு ஆண்டுக்கு குறைந்தது மூன்று ஓம்புயிரிகள் எடுத்துக்கொள்கிறது. "அர்காசைட்" (Argasid) உண்ணிகள், ஏழு அணங்கு வளர்நிலைகளாகும், அதன் ஒவ்வொரு நிலையிலும் குருதி உணவு தேவைப்படுகிறது. ஏந்துயிரியான உண்ணிகள், குருதி உறிஞ்சும் பழக்கத்தின் காரணமாக, மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை பாதிக்ககூடிய, குறைந்தது பன்னிரண்டு நோய்கள் தாக்கப்படுகிறது.[6]

உயிரியல்

[தொகு]

வகைப்பாடு மற்றும் இனவரலாறு

[தொகு]

உண்ணிகளின் தொல்லுயிர் எச்சங்கள் கிரீத்தேசியக் காலம் முதல் இருப்பது, பொதுவாக மரப்பிசின்களின் மூலம் அறியப்பட்டது. அது பெரும்பாலும் கிரீத்தேசியக் காலத்தில் (146 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவானது, மூன்றில் ஒரு பகுதியிலிருந்து (65 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பரிணாமம் மற்றும் பரவுதல் அடைந்துள்ளது. பழமையான முன் உதாரணத்திற்கு கிரீத்தேசியக் காலத்திய மரப்பிசினியில் "அர்காசைட்" (Argasid) எனும் பறவை உண்ணி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான நியூ செர்சியில் உள்ளது.[7]

வீச்சு மற்றும் வாழிடம்

[தொகு]

உண்ணி இனங்கள் பரவலாக உலகம் முழுவதும் பரவியுள்ளன, ஆனால் அவை சூடான, ஈரப்பதமான காலநிலையுடன் கூடிய நாடுகளில் அதிகரித்து வருகின்றன, ஏனெனில் அவைகள் உருமாற்றதிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு காற்றில் ஈரப்பதம் தேவைப்படுகிறது, மற்றும் ஏனெனில் குறைந்த வெப்பநிலையானது தங்கள் முட்டையில் இருந்து குடம்பியாக மாற்றம் அடையும் வளர்ச்சியை தடுக்கும்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. "Tick-borne infections in human and animal population worldwide". www.ncbi.nlm.nih.gov (ஆங்கிலம்). 2015 Mar 12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-27. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "All About Ticks". www.ticksafety.com (ஆங்கிலம்). @ 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-03-28. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Phylogeny of hard- and soft-tick taxa (Acari: Ixodida) based on mitochondrial 16S rDNA sequences
  4. "Tick identification - Authors: Prof Maxime Madder, Prof Ivan Horak, Dr Hein Stoltsz" (PDF). www.ticksafety.comwww.afrivip.org (ஆங்கிலம்). @ 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-28. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Tick pictures and information
  6. "Articles about Ticks". www.nexles.com (ஆங்கிலம்). @ 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-28. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Ticks[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Ticks - FACTS". Archived from the original on 2017-10-14. பார்க்கப்பட்ட நாள் 2018-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணி&oldid=3927994" இலிருந்து மீள்விக்கப்பட்டது