ஓம்புயிர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உயிரியலில் ஓம்புயிர் (host) அல்லது விருந்து வழங்கி என்பது, ஒட்டுண்ணிகளாக வாழும் வைரசுக்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், பூஞ்சைகள் போன்றவற்றுக்கு உணவும், வாழிடமும் அளிக்கும் உயிரினங்களாகவும், அத்துடன் ஒன்றிய வாழ்வு (Symbiosis) வாழும் உயிரினங்களில் இணை வாழ்வை நடத்தும் அடுத்த உயிரினத்துக்கு உணவையும், வாழிடத்தையும் வழங்கும் உயிரினங்களாகவும் இருப்பவையேயாகும். விலங்குகளின் உடற்கலங்களில் வைரசுக்கள் ஒட்டுண்ணியாக வாழும்போது விலங்குகள் ஓம்புயிராகவும், நைதரசன் உருவாக்கும் பக்டீரியாக்கள் அவரைவகைத் தாவர வேர்களில் ஒன்றியவாழ்வு வாழும்போது அவரைவகைத் தாவரங்கள் ஓம்புயிராகவும், ஒட்டுண்ணிப் புழுக்கள் விலங்குகளில் வாழும்போது, விலங்குகள் ஓம்புயிர்களாகவும் இருக்கின்றன.