உணர்ச்சிகள் (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணர்ச்சிகள்
இயக்கம்கே. ராஜன்
தயாரிப்புகே. ஆர். கணேஷ்
எம். அன்பு
இசைஆர். கே. சுந்தர்
நடிப்புசிறீமன்
அபிதா
அபிநயசிறீ
கலையகம்ஆர்.கே. கிரியேசன்ஸ்
வெளியீடுதிசம்பர் 30, 2005 (2005-12-30)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உணர்ச்சிகள் (Unarchigal) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. ராஜன் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீமன், அபிதா, அபிநயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். கே. ராஜன், குணால், ராதாரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படம் 2005 திசம்பரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

2005 சூனில், இயக்குனர் கே ராஜன் சிவகாசி ஜெயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நிறம் மாறிய ரோஜாக்கள் என்ற பெயரிலான படத்தை எடுக்க முடிவு செய்தார். சிந்து துலானி நடித்த அலையடிக்குது (2005) ஏற்கனவே இந்த பிரச்சினையை உள்ளடக்கியது. ராஜன் பின்னர் உணர்சிகள் என்ற படத்தில் பணிபுரியத் தொடங்கினார், இது இளம் பருவத்து இளைஞர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டது. இதில் நடிகைகள் தேவயானி மற்றும் சிந்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் இவர்களுடன் புதுமுக ஆண் நடிகர்கள் நடிப்பதாக திட்டமிடப்பட்டது.[3] இருப்பினும் படத் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தில் நடிக்கும் நடிகர்களில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் ராஜன் அப்பாஸ், குணால் ஆகியோருடன் படத்தைத் தொடங்கினார். உணர்ச்சிகள் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் நடிக்க 2005 சூலையில் அபிதா, அபிநயஸ்ரீ ஆகியோர் ஒப்பந்தமாயினர்.[4][5][6] படத்தின் இசைவெளியீடானது 2005 செப்டம்பர் 10 அன்று நடிகர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.[7]

இசை[தொகு]

படத்திற்கு ஆர். கே. சந்தர் இசையமைத்தார்.[8]

வெளியீடு[தொகு]

படம் வெளியானதும், விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/unarchigal-tamil-movie-review-7708.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.behindwoods.com/News/22-1-05/thevayani_unarchigal.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.behindwoods.com/features/Slideshows/slideshows2/tamil-glamour-actress/tamil-glamour-actress-abhinayasree.html
  6. http://www.indiaglitz.com/abbas-kunal-come-together-tamil-news-15241.html
  7. http://www.indiaglitz.com/unarchigal-audio-launch-tamil-event-8092.html
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2022-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-10-15 அன்று பார்க்கப்பட்டது.