உடல் துளைகள்
Appearance
விலங்கின் உடலில் காணப்படும் எந்த ஒரு துளையும் உடல் துளை (body orifice) எனப்படும்.[1] துளைகள் வெளிப்புறத்துளைகள் உட்புறத்துளைகள் என இரண்டு வகைப்படும்.
வெளிப்புறத்துளைகள்
[தொகு]பாலூட்டிகளில் முக்கியமாக மனித உடலில் பல்வேறு வெளிப்புறத் துளைகள் உள்ளன. அவையாவன;
- நாசித்துளை - சுவாசிப்பதற்கும், அதோடு தொடர்புடைய முகர்வு உணர்வுக்கும்
- வாய்த்துளை - உண்பதற்கும், சுவாசிப்பதற்கும், குரல் எழுப்புவதற்கும்
- புறச்செவித் துளை - செவி உணர்விற்கு
- நாசிக்கண்ணீர் நாளம் - இது கண்ணீர் பையிலிருந்து கண்ணீரை மூக்கு துவாரங்களுக்கு கொண்டு செல்வதற்கு.
- மலவாய் - கழிவை வெளியேற்றுவதற்கு
- சிறுநீர்க் குழாய் வழி - சிறுநீர் மற்றும் விந்தணு வெளியேற்றுவதற்கு
- பெண்களில் யோனி என்னும் பாலுறுப்பு - மாதவிடாய் சுழற்சி, பாலுறவு, குழந்தை பிறப்பிற்கு
- முலைக்காம்பு புழைவாய்
வேறு விலங்குகளிலும் சில துளைகள் காணப்படுகின்றன
ஏனைய விலங்கினங்களில்,
- கழிவுப் புழை - பறவைகள், ஊர்வன, இருவாழ்விகள் மற்றும் சில விலங்குகளில் காணப்படும்
- நீரிறக்கித் துளை - மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் சில விலங்குகளில் காணப்படும்
உட்புறத்துளைகள்
[தொகு]இரத்தத்தை இதயத்திலிருந்து வெளிசெலுத்தும்; இதய அடைப்பிதழ்களுக்கிடையே காணப்படும் புழைவழி உட்புறத்துளையை சார்ந்தது.