இலந்தனம் நைட்ரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அச்சனைலிடின்லந்தனம்
| |
வேறு பெயர்கள்
இலந்தனம் மோனோநைட்ரைடு, இலந்தனம்(III) நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
25764-10-7 | |
ChemSpider | 105115 |
EC number | 247-245-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117627 |
| |
பண்புகள் | |
LaN | |
வாய்ப்பாட்டு எடை | 152.91 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் தூள் |
அடர்த்தி | 6.73 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,450 °C (4,440 °F; 2,720 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
வார்ப்புரு:HPhrases | |
வார்ப்புரு:PPhrases | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம் நைட்ரைடு (Lanthanum nitride) என்பது LaN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]நைட்ரசனும் இலந்தனம் முந்நைட்ரைடும் சேர்ந்து சேர்ந்து வினைபுரிவதால் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது.
- 2LaH3 + N2 -> 2LaN + 3H2
இலந்தனம் முந்நைட்ரைடு அம்மோனியாவுடன் வினையில் ஈடுபட்டாலும் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது.:[3]
- LaH3 + NH3 -> LaN + 3H2
இலந்தனம் இரசக்கலவையும் நைட்ரசனும் வினைபுரிந்தாலும் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது:[4]
- 2La + N2 → 2LaN
இயற்பியல் பண்புகள்
[தொகு]இலந்தனம் நைட்ரைடு கருப்பு நிறத்தில் தூளாக உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.[1] அவற்றின் படிகங்கள் Fm3m இடக்குழுவில் கனசதுர படிக அமைப்பில் உள்ளன.[5]
இலந்தனம் நைட்ரைடு இணைகாந்தப் பண்பைக் கொண்டுள்ளது.
வேதிப்பண்புகள்
[தொகு]இலந்தனம் நைட்ரைடு காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீருடன் வினைபுரிகிறது:
- LaN + 3H2O → La(OH)3 + NH3
அமிலங்களுடனும் இது வினைபுரிகிறது:
- LaN + 4HCl → LaCl3 + NH4Cl
பயன்கள்
[தொகு]ஒளி உமிழும் குழல் பொருள், காந்தப் பொருள், குறைக்கடத்தி, உயர்வெப்பமேற்கும் பொருள், சாயம், வினையூக்கி என இலந்தனம் நைட்ரைடு பலவிதங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Lanthanum Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ Derz, Friedrich W. (18 May 2020). H-Z (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 1179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-232209-3. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ Foster, L. S. (1945). The Preparation of Crucibles from Nitrides (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission. Technical Information Service. p. 8. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ Young, R. A.; Ziegler, W. T. (November 1952). "Crystal Structure of Lanthanum Nitride 1,2" (in en). Journal of the American Chemical Society 74 (21): 5251–5253. doi:10.1021/ja01141a004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja01141a004. பார்த்த நாள்: 8 February 2024.
- ↑ Young, R. A.; Ziegler, W. T. (November 1952). "Crystal Structure of Lanthanum Nitride 1,2" (in en). Journal of the American Chemical Society 74 (21): 5251–5253. doi:10.1021/ja01141a004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja01141a004. பார்த்த நாள்: 8 February 2024.
- ↑ "Lanthanum Nitride (LaN) Powder (CAS No. 25764-10-7)" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ Deng, Zihao; Kioupakis, Emmanouil (1 June 2021). "Semiconducting character of LaN: Magnitude of the bandgap and origin of the electrical conductivity". AIP Advances 11 (6). doi:10.1063/5.0055515. Bibcode: 2021AIPA...11f5312D. https://pubs.aip.org/aip/adv/article/11/6/065312/994237/Semiconducting-character-of-LaN-Magnitude-of-the. பார்த்த நாள்: 8 February 2024.