உள்ளடக்கத்துக்குச் செல்

இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/La.3O.Yb/q+3;3*-2;+3
    Key: CDUHXVMRIAXWDH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [La+3].[Yb+3].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
LaYbO3
வாய்ப்பாட்டு எடை 359.9577 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி 8.08 கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலந்தனம் அலுமினேட்டு
இலந்தனம் மாங்கனைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு (Lanthanum ytterbium oxide) என்பது LaYbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், இட்டெர்பியம்]] மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து ஒரு திண்மப் பொருளாக இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு உருவாகிறது. பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை இந்த சேர்மம் ஏற்றுக்கொள்கிறது.

தயாரிப்பு

[தொகு]

இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு இயற்கையாகத் தோன்றும் ஒரு கனிமமல்ல. ஆனால் 1200 ° செல்சியசு வெப்பநிலையில் இலந்தனம் ஆக்சைடையும் இட்டெர்பியம்(III) ஆக்சைடையும் சேர்த்து திண்மநிலை வினைக்கு உட்படுத்தினால் இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடை தயாரிக்கலாம். LaYbO3 சேர்மத்தின் ஒற்றை-படிகங்களை 750 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகிய ஐதராக்சைடு இளக்கியை மூடப்பட்ட வெள்ளி குழாய்களில் இட்டு படிக வளர்ச்சி முறையில் வளர்க்கலாம்.[1] அதிர்வூட்டப்பட்ட சீரொளி படிவு மூலமும் மென்படலங்களாக இச்சேர்மத்தை கட்டமைக்கலாம்.

கட்டமைப்பு

[தொகு]

LaYbO3 மற்றும் பிற LaREO3 ஆக்சைடுகள் (RE=Ho, Y, Er, Tm, Yb மற்றும் Lu) சேர்மங்கள் Pnma என்ற இடக்குழுவில் விவரிக்கப்பட்டுள்ள உள் சமச்சீர்மையுடன் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளன. எதிரெதிர் இடமாற்றம் செய்யப்பட்ட La3+ அயனிகளும் கிளேசர் குறியீட்டு முறையின்படி a−b+a− உள்ளமைவில் சாய்ந்திருக்கும் சற்று உருக்குலைந்த YbO6 என்முகமுமாக இக்கட்டமைப்பை விவரிக்க முடியும். YbO6 என்முக சுழற்சியானது La இன் ஒருங்கிணைப்பு எண்ணை 12 இலிருந்து 8 ஆகக் குறைக்கிறது. இதனால் a மற்றும் b அச்சுகளில் எதிர்மறையான வெப்ப விரிவாக்கமும் வெளிப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு அறைவெப்ப நிலையில் மின் தற்கோள் திறனை வெளிப்படுத்துகிறது. ~26 என்ற இம்மதிப்பு 10 கெல்வின் வெப்பநிலையில் 25 ஆக சிறிதளவு குறைகிறது. LaYbO3 2.7 கெல்வின் வெப்பநிலையில் பலவீனமான பெரோ காந்தத்துடன் எதிர்காந்த வரிசையை காட்டும்.[2] LaYbO3 அடிப்படையிலான பெரோவ்சுகைட்டுகள் இடைநிலை வெப்பநிலையில் (600-800 °செல்சியசு) புரோட்டான் கடத்துத்திறனைக் காட்டுவதாகவும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bharathy, M.; Fox, Adam H.; Mugavero, S.J.; zur Loye, H.-C. (2009). "Crystal growth of inter-lanthanide LaLn′O3 (Ln′=Y, Ho–Lu) perovskites from hydroxide fluxes". Solid State Sciences (Elsevier BV) 11 (3): 651–654. doi:10.1016/j.solidstatesciences.2008.10.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:1293-2558. Bibcode: 2009SSSci..11..651B. 
  2. Ito, Kentaro; Tezuka, Keitaro; Hinatsu, Yukio (2001). "Preparation, Magnetic Susceptibility, and Specific Heat on Interlanthanide Perovskites ABO3 (A=La–Nd, B=Dy–Lu)". Journal of Solid State Chemistry (Elsevier BV) 157 (1): 173–179. doi:10.1006/jssc.2000.9071. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 2001JSSCh.157..173I.