இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14284-88-9 நீரிலி
22392-66-1 இருநீரேற்று
ChemSpider 68023795
EC number 238-187-8
InChI
 • InChI=1S/3C5H7O2.La/c3*1-4(6)3-5(2)7;/h3*3H,1-2H3;/q3*-1;+3
  Key: UUYNRMJIFVOQCR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 131873665
 • CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.[La+3]
பண்புகள்
C15H21LaO6
வாய்ப்பாட்டு எடை 436.23 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டு (Lanthanum acetylacetonate) என்பது La(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நீரிலி அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மம் நன்கு வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் இதன் நீரேற்று வகை அசிட்டைலசிட்டோனேட்டு La(C5H7O2)3(H2O)2 எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

வெற்றிடத்தின் கீழ் வெப்பமடையும் போது இருநீரேற்று அசிட்டைலசிட்டோனேட்டு ஆக்சோ-கொத்து சேர்மமாக La
4O(C5H7O2)10 ஆக மாறுகிறது. இந்த நடத்தை எர்பியம், இட்ரியம், கடோலினியம் மற்றும் யூரோப்பியம் ஆகிய தனிமங்களிலும் காணப்படுகிறது.[4]

உறுதியற்ற மாறிலிகள் 3.65, 5.13 மற்றும் 6.12 (n=1, 2, 3 உடன் தொடர்புடையது) இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன..[5] இலந்தனம் ஆல்காக்சைடுடன் அசிட்டைல் அசிட்டோனை சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டு உருவாகும். இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டின் நான்குநீரேற்று 110 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவுற்று ஒற்றைநீரேற்று உருவாகிறது. 150 °செல்சியசு வெப்பநிலையில் இது நீரிலியாக மாறுகிறது. 180-285 °செல்சியசு வெப்பநிலையில் இலந்தனம் அசிட்டேட்டு உருவாகிறது.[6]

NaLaS2, La2Zr2O7 போன்ற சேர்மங்கள் தயாரிப்பில் இலந்தனம் அசிட்டைலசிட்டோனேட்டு பயன்படுத்தப்படுகிறது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Lanthanum(3+);pentane-2,4-dione". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
 2. Okawara, Toru; Ishihama, Kohei; Takehara, Kenji (2014). "Redetermination of diaquatris(4-oxopent-2-en-2-olato-κ2 O , O ′)lanthanum(III)". Acta Crystallographica Section e Structure Reports Online 70 (7): m258–m259. doi:10.1107/S1600536814013336. பப்மெட்:25161523. 
 3. Phillips, Theodore; Sands, Donald E.; Wagner, William F. (1968). "Crystal and Molecular Structure of Diaquotris(acetylacetonato)lanthanum(III)". Inorganic Chemistry 7 (11): 2295–2299. doi:10.1021/ic50069a024. 
 4. Tamang, Sem Raj; Singh, Arpita; Bedi, Deepika; Bazkiaei, Adineh Rezaei; Warner, Audrey A.; Glogau, Keeley; McDonald, Corey; Unruh, Daniel K. et al. (2020). "Polynuclear Lanthanide–Diketonato Clusters for the Catalytic Hydroboration of Carboxamides and Esters". Nat. Catal. 3 (2): 154–162. doi:10.1038/s41929-019-0405-5. 
 5. N.K. Dutt, P. Banyopadhyay (1964-05-01). "Chemistry of the lanthanons—XIII" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 26 (5): 729–736. doi:10.1016/0022-1902(64)80316-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002219026480316X. பார்த்த நாள்: 2021-09-20. 
 6. Gamal A.M. Hussein, Hamdy M. Ismail (1995-08-01). "Characterization of lanthanum oxide formed as a final decomposition product of lanthanum acetylacetonate: thermoanalytical, spectroscopic and microscopic studies" (in en). Powder Technology 84 (2): 185–190. doi:10.1016/0032-5910(95)02984-A. https://linkinghub.elsevier.com/retrieve/pii/003259109502984A. பார்த்த நாள்: 2021-09-20. 
 7. Yi Ding, Jun Gu, Tao Zhang, An-Xiang Yin, Lu Yang, Ya-Wen Zhang, Chun-Hua Yan (2012-02-15). "Chemoaffinity-Mediated Synthesis of NaRES 2 -Based Nanocrystals as Versatile Nano-Building Blocks and Durable Nano-Pigments" (in en). Journal of the American Chemical Society 134 (6): 3255–3264. doi:10.1021/ja211103b. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:22242812. https://pubs.acs.org/doi/10.1021/ja211103b. பார்த்த நாள்: 2021-09-20. 
 8. Yang Wang, Rishi Kumar, Justin Roller, Radenka Maric (2017-06-01). "Synthesis and Characterization of Nano-crystalline La2Zr2O7 Film by Reactive Spray Deposition Technology for Application in Thermal Barrier Coatings" (in en). MRS Advances 2 (28): 1519–1525. doi:10.1557/adv.2017.154. பன்னாட்டுத் தர தொடர் எண்:2059-8521. http://link.springer.com/10.1557/adv.2017.154. பார்த்த நாள்: 2021-09-20.