உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை யானை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Proboscidea
குடும்பம்:
Elephantidae
பேரினம்:
Elephas
இனம்:
Elephas maximus
துணையினம்:
E. m. maximus
முச்சொற் பெயரீடு
Elephas maximus maximus
L., 1758
இலங்கை யானையின் பரம்பல்

இலங்கை யானை (Sri Lankan elephant, Elephas maximus maximus) என்பது அடையாளம் காணப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும், இலங்கையை வாழ்விடமாகக் கொண்டதும் ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்பில் கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆகக் குறைவடைந்து காணப்படுகின்றது. இவ்வினம் வாழ்விட இழப்பு, சீர்கேட்டு நிலை, பிளவு என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]

இலங்கை யானை ஆசிய யானைகளில் உப இனத்தைச் சார்ந்ததாகும். இதுபற்றி முதலில் கரோலஸ் லின்னேயஸ் 1758 இல் குறிப்பிட்டார்.[2]

இலங்கை யானைகளின் எண்ணிக்கை ஒரு சில தேசிய பூங்காக்களில் பெரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உடவளவை தேசியப் பூங்கா, யால தேசிய வனம், வில்பத்து தேசிய வனம், மின்னேரியா தேசிய வனம் ஆகியன அவ் யானைகளைக் காணக்கூடிய முக்கிய இடங்களாகும்.

பண்புகள்

[தொகு]

பொதுவாக ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானையைவிடச் சிறியவைகயாகவும் தலையில் பெரிய உடலமைப்பைக் கொண்டிருக்கும். அவற்றின் தும்பிக்கை முனையில் ஒன்றை விரல் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். அவற்றின் பின்புறம் புடைத்தோ அல்லது சமதளமாகவோ காட்சியளிக்கும். பொதுவாக, பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தம் அற்றும் காணப்படும்.[3]

இலங்கை யானைகள் தோளை 2 – 3.5 மீ (6.6 – 11.5 அடி) உயரத்திற்கு எழுப்பவல்ல பாரிய உட்பிரிவு இனமாகும். மற்றும் அவற்றின் எடை 2,000 – 5,500 கிலோ கிராம் (4,400 – 12,000 பவுண்டு) ஆகவும், 19 சோடி விலா என்புகளைக் கொண்டும் காணப்படும். இவற்றின் தோல் நிறம் இந்திய யானைகளைவிட கருமையாகவும், அதிக மங்கல் புள்ளிகள் காதுகளிலும், முகத்திலும், தும்பிக்கையிலும், வயிற்றிலும் காணப்படும்.[4]

7 வீதமான ஆண் யானைகள் மாத்திரமே தந்தத்தினையுடையன.[5] ஆயினும், 2011 இல் இலங்கை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எண்ணிக்கை மதிப்பீடு 2 வீதமான யானைகள் மாத்திரமே தந்தங்களைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றது.

இலங்கை தேசிய பூங்காக்களில் உள்ள யானைகளின் எண்ணிக்கையானது கி.மு 200 கால வரலாற்று மற்றும் 19 ஆம் நூற்றாண்டு பிரித்தானிய ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களுடன் ஒப்பு நோக்கம்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கைச் சூழல் மற்றும் நடத்தை

[தொகு]
யானையின் கண் மற்றும் முகத்தில் காணப்படும் மங்கல் நிறமும்

பெரிய விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள யானைகள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) தாவரங்களை ஒரு நாளைய உணவாகக் கொள்ளும். அவை பல வகையான தாவரங்களை உணவாகக் கொள்ளக்கூடியவை. இலங்கையின் வடமேல் பகுதிகளில் சனவரி 1998 முதல் திசம்பர் 1999 வரையான காலப்பகுதிகளில் யானைகளில் உணவுப் பழக்கம் அவதானிக்கப்பட்டது. 35 தாவர குடும்பங்களுக்குச் சொந்தமான 27 பயிரிடப்பட்ட தாவரங்கள் உட்பட மொதத்ம் 116 வகை தாவரங்கள் அவற்றினால் உணவாகக் கொள்ளப்பட்டன. அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டவை மரங்களை அல்லாத புதர், மூலிகை, புல், கொடி வகை தாவரங்களாகும். 25 வீதத்திற்கு மேற்பட்டவை தானிய அல்லது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவையும், 19 வீதமானவை புல் வகை தாவரங்களும் ஆகும். இளம் யானைகள் புல் வகைத் தாவரங்களைப் பிரதானமாக உண்கின்றன.[6]

உணவு வளங்கள் மீள் உருவாக்கக் காடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றபோதிலும் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறை வெற்றிகரமான தாவர வளர்ச்சி முறை முன்னேற்றம் யானைகளுக்குச் சிறப்பான வாழ்விடத்தை வழங்க வல்லது.[7]

எண்ணிக்கைப் போக்கு

[தொகு]
பின்னவள யானைகள் அனாதைமடத்தில் யானைகள்

வரலாற்றை நோக்கும்போது யானைகள் உலர் வலயம், ஈர வலய தாழ் நிலம், குளிரான பனி மலை காடுகள் ஆகியவற்றில் காணப்பட்டன. அவற்றின் பரம்பல் கடல் மட்டத்திலிருந்து மலை வரை நல்ல எண்ணிக்கையில் காணப்பட்டன. 1830 வரை, யானைகள் ஏராளமாகக் காணப்பட்டும் அவற்றை அழிக்க அரசு ஊக்கமளித்தது. யானைகளைக் கொல்வோருக்கு சன்மானமும் வழங்கப்பட்டது. அவற்றின் மறைவு கோப்பி பயிரிடுதலுக்காகக் காடழிப்பு, பின்பு தேயிலை பயிரிடுதலுக்காகக் காடழிப்பு ஆகியவற்றால் மலைப்பகுதி வலயங்களிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைக் காலத்தில் ஏற்பட்டது. 20 ஆம் நூற்றாண்டிலும் ஆரம்பத்திலும்கூட யானைகள் தீவில் கூறாக்கப்பட்டன.[7]

19 ஆம் நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கையானது பிடித்தல், கொல்லுதல் மூலம் ஆபத்தான குறைதலுக்கு உள்ளாகியது. 1829 இற்கும் 1855 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 6,000 இற்கு மேற்பட்ட யானைகள் பிடிக்கப்பட்டும் சுடப்பட்டும் அழிந்தன.[8]

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கையளவு:

  • 12,000 – 14,000 : 19 ஆம் நூற்றாண்டில்
  • 10,000 : 20 ஆம் நூற்றாண்டில்[9]
  • 7,000 – 8,000 : 1920 களில்
  • 1,745 – 2,455 : 1969 இல்[10]
  • 2,500 – 3,435 : 1987 இல்[10]
  • 1,967 : சூன் 1993 இல் ஐந்து பிரதேசங்களில்[11]
  • 3,150 – 4,400 : 2000 இல்[12]
  • 3150 : 2006 இல்
  • 2900-3000 : 2007 இல்
  • 5879 : 2011 யானைகள் கணக்கெடுப்பு

அச்சுறுத்தல்கள்

[தொகு]
பின்னவள யானைகள் அனாதைமடத்தில் பராமரிக்கப்படும் யானைகளின் ஒரு தொகுதி

இலங்கையில் யானைத் தந்த வர்த்தகம் 2000 வருடங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்ப பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நினைவுச்சின்ன சேகரிப்பு வேட்டைக்காரர்களால் யானைகள் கொல்லப்பட்டன. மேஜர் தோமஸ் ரோஜர் 1,500 இற்கு மேற்பட்ட யானைகளைச் சுட்டுக் கொன்றார். இதனடிப்படையில், இவரால் நான்கு வருடங்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு யானை கொல்லப்பட்டது. கப்டன் கலிவே மற்றும் மேஜர் ஸ்கின்னர் ஆகியோரால் தோமஸ் கொன்றதன் அரைவாசியளவு யானைகள் சுடப்பட்டன எனக் கருதப்படுகின்றது. மேலும் பலரால் 250-300 வரையான யானைகள் அக்காலப்பகுதியில் கொல்லப்பட்டன.[13] இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் யால தேசிய வனம் இலங்கையிலுள்ள பிரித்தானியர்களின் வேட்டையாடல் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.[14]

இலங்கையில் உள்நாட்டு யுத்த காலத்தில் நிலக்கண்ணி வெடிகளால் யானைகள் அங்கவீனமாகியும் கொல்லப்படுதலுக்கும் உள்ளாகின. 1990 இற்கும் 1993 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 165 யானைகள் துப்பாக்கி வேட்டு காயத்தினால் இறந்தன. 1994 இல் குறைந்தது 96 யானைகள் சுடப்பட்டும் நிலக்கண்ணி வெடிக்கு உட்பட்டும் கொல்லப்பட்ட, 20 யானைகள் நிலக்கண்ணி வெடியினால் முடமாக்கப்பட்டன.[15]

பின்னவள யானைகள் அனாதைமடத்தில் பாலூட்டப்படும் யானைக்குட்டி

இன்று இலங்கையில் கொம்பன் யானைகள் அருமையாகவுள்ளதானது சட்ட விரோத யானைத் தந்த நடவடிக்கை ஒர் பாரிய விடயமாக இல்லாதுள்ளது. ஆயினும், சில யானைத் தந்த வர்த்தகம் செயற்பாட்டிலுள்ளது. கண்டி சட்ட விரோத யானைத் தந்த வர்த்தகத்திற்கான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. யானைகளுக்கான பாரிய அச்சுறுத்தல் மனித சனத்தொகை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நிலத்திற்கான கேள்வியிலும் தங்கியுள்ளது. நிர்ப்பாசன மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களினால் யானைகளின் இடப்பரப்பு நீர்ப்பாச்சல் விவசாயம் மற்றும் குடியிருப்புக்களினால் குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு உள்ளாகின்றது.[7]

1999 இற்கும் 2006 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100 யானைகள் கொல்லப்பட்டன. யானைகள் பயிர்களையும் வீடுகளையும் காப்பாற்றுவதற்காகவும் கொல்லப்படுகின்றன. மேலும், காடழிப்பு, வறட்சி, பட்டினி போன்ற காரணங்களாலும் கொல்லப்படுகின்றன. வறட்சியான காலங்களில் யானைகள் விவசாய நிலங்களையும் உணவுகளையும் சேதப்படுத்துகின்றன. 2006 ஆம் ஆண்டில் 80 யானைகள் வட மேற்கிலும், 50 யானைகள் தெற்கு மற்றும் கிழக்கிலும், ஏனைய நாட்டின் பகுதிகளில் 30 யானைகளுமாக மொத்தம் 160 யானைகள் கொல்லப்பட்டன.

பாதுகாத்தல்

[தொகு]
யானைகள் குளிப்பாட்டப்படுகின்றன

ஆசிய யானைகள் (Elephas maximus) சிட்சின் அனுபந்தம் I இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் யானைப் பாதுகாப்பு தந்திரோபாயமானது அதிகமானளவு சாத்தியமான எண்ணிக்கை பொருத்தமான வாழ்விட பரந்த இடப்பரப்பில் பாதுகாத்தலை குறிக்கோளாகக் கொண்டது. இதன் அர்த்தம் பாதுகாக்கப்படும் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட இடத்தின் முறையிலும், அதற்கு வெளியிலுள்ள பல விலங்குகள் அவ்விட உதவியாலும், நில உரிமையாளர் பாதுகாக்கப்பட்ட வலையமைப்பு பகுதிக்கும் தடுத்தலை ஏற்றுக் கொள்ளலுமாகும்.[7]

  • கேகாலையிலுள்ள பின்னவள யானைகள் அனாதைமடம் காயப்பட்ட யானைகளைப் பராமரிக்கவும், கைவிடப்பட்ட யானைக் குட்டிகைள கவனிக்கவும் உள்ளது. கிட்டத்தட்ட 70 யானைகள் இங்குள்ளன. இங்கு சினைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.
  • உடவளவை தேசியப் பூங்காவிலுள்ள உடவளவை இடைக்கால நிலையம் ஓர் புனர்வாழ்வு நிலையமாகும். இங்கு கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் காட்டில் விடப்படும் வரை வளர்க்கப்படுகின்றன.

கலாச்சார சித்தரிப்பு

[தொகு]
பெரகரா நிகழ்வில் இலங்கை யானைகள்

யானைகள் சிங்கள அடையாளத்தில் பொதுவான ஓர் விடயமாகப் பல ஆண்டுகளுக்கு (சுமார் 2000) முன்பிருந்தே காணப்பட்டு, பிரித்தானிய ஆட்சி வரை தொடர்ந்தது. போர்த்துக்கேய இலங்கைச் சின்னம், ஒல்லாந்து (இடச்சு) இலங்கைச் சின்னம், பிரித்தானிய இலங்கைச் சின்னம் என்பவற்றில் யானை இடம் பெற்றிருந்தது. அவ்வாறே, பிரித்தானிய இலங்கையின் அரச கொடியிலும் 1875 முதல் 1948 வரையான காலப்பகுதியில் யானை இடம் பெற்றிருந்தது. இன்றுகூட இலங்கையிலுள்ள பலதரப்பட்ட நிறுவனங்களில் யானை சின்னமாகக் குறியீடாகவும் பாவிக்கப்படுகின்றது.

யானைக்கும் மனிதனுக்குமான பல வருடங்களுக்கு மேற்பட்ட தொடர்பானது முக்கிய கலாச்சார அடையாளமாக விளங்குகின்றது. இலங்கையிலுள்ள பெரிய பெளத்த விகாரைகள் யானைகளைக் கொண்டுள்ளன. பெளத்த, சைவ சமயச் சடங்குகள் மற்றும் சமய ஊர்வலங்களில் யானையின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக, பெரகரா நிகழ்வில் யானைகளின் பங்கு முக்கியத்துவமிக்கது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Choudhury, A., Lahiri Choudhury, D.K., Desai, A., Duckworth, J.W., Easa, P.S., Johnsingh, A.J.T., Fernando, P., Hedges, S., Gunawardena, M., Kurt, F., Karanth, U., Lister, A., Menon, V., Riddle, H., Rübel, A., Wikramanayake, E. (2008). "Elephas maximus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Linnaei, C. (1760) Elephas maximus In: Caroli Linnæi Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Halae Magdeburgicae. Page 33
  3. Shoshani, J., Eisenberg, J.F. (1982) Elephas maximus. Mammalian Species 182: 1–8
  4. Shoshani, J. (2006) Taxonomy, Classification, and Evolution of Elephants In: Fowler, M. E., Mikota, S. K. (eds.) Biology, medicine, and surgery of elephants. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8138-0676-3. Pp. 3–14
  5. Jayewardene, J. (1994) The elephant in Sri Lanka. Wildlife Heritage Trust of Sri Lanka, Colombo
  6. Samansiri, K. A. P., Weerakoon, D. K. (2007) Feeding Behaviour of Asian Elephants in the Northwestern Region of Sri Lanka பரணிடப்பட்டது 2016-11-18 at the வந்தவழி இயந்திரம். Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 2: 27–34
  7. 7.0 7.1 7.2 7.3 Santiapillai, C., Fernando, P., Gunewardene, M. (2006) A strategy for the conservation of the Asian elephant in Sri Lanka. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 25: 91–102
  8. Sukumar, R. (1993) The Asian Elephant: Ecology and Management Second edition. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-43758-X
  9. Wanigasundara, M. (1991) Sri Lanka – Elephants slaughtered in civil war. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 6: 16–17
  10. 10.0 10.1 Kotagama, S. (1991) Sri Lanka – Enhancing the survival of elephants. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 6: 24
  11. Hendavitharana, W., Dissanayake, S., de Silva, M., Santiapillai, C. (1994) The Survey of elephants in Sri Lanka. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 12: 1–30
  12. Kemf, E., Santiapillai, C. (2000) Asian elephants in the wild. A WWF species status report. WWF, Gland, Switzerland.
  13. Jayewardene, Jayantha (2012). "Elephants in Sri Lankan History and Culture". Living Heritage Trust. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
  14. Katugaha, H. I. E.(1997) Tuskers of Ruhuna National Park, Sri Lanka. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 18: 67–68
  15. Alahakoon, J., Santiapillai, C. (1997) Elephants: Unwitting victims in Sri Lanka's civil war. Gajah: Journal of the IUCN/SSC Asian Elephant Specialist Group. Number 18: 63–65

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elephas maximus maximus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_யானை&oldid=3766096" இலிருந்து மீள்விக்கப்பட்டது