பின்னவள யானைகள் அனாதைமடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Pinnawala Elephant Orphanage
Pinnawala 01.jpg
பின்னவளத்தில் உள்ள யானைகள் கூட்டம்
திறக்கப்பட்ட தேதி 1975
இடம் பின்னவள, கேகாலை, சபரகமுவா, இலங்கை
பரப்பளவு 25 ஏக்கர்கள் (10 ha)
அமைவு 7°18′2″N 80°23′18″E / 7.30056, 80.38833அமைவு: 7°18′2″N 80°23′18″E / 7.30056, 80.38833
விலங்குகளின் எண்ணிக்கை 88 (2011)
உயிரினங்களின் எண்ணிக்கை 1
இணையத்தளம் Pinnawala Elephant Orphanage

பின்னவள யானைகள் அனாதைமடம் இலங்கையில் அமைந்துள்ள அனாதை யானைகளைப் பராமரிக்கும் ஒரு சரணாலயம் ஆகும். இங்கு சுமார் அறுபதற்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளின் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.

1975 இல் சுமார் 25 ஏக்கர் தென்னம் தோப்பு காணியில் மகா ஓயாவை ஒட்டி இந்த அனாதை மடம் அமைக்கப்பட்டது. அந்த நாட்களில் முதன்மையாக இங்கு தாய் கொலை செய்யபட்ட யானைகள் அல்லது குழியினுள் அகப்பட்டு தாய் இறந்தபின் அனாதையான யானைகள் பராமரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் இந்த அனாதை மடம் இருந்தாலும் பின்னாளில் பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்த அனாதை மடம் அமைந்தது. ஆயினும் மீளவும் தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு இந்த அனாதை மடம் மாற்றப்பட்டது. தெகிவளை விலங்கியல் பூங்காவில் இருந்து இறுதியாக பின்னவள எனும் இடத்திற்கு இந்த அனாதை மடம் மாற்றப்பட்டது. இந்த அனாதை மடத்தைப் பார்க்கவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயனிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த அனாதை மடம் நிர்வகிக்கப்படுகின்றது.