தமிழர் பண்பாட்டில் யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர்களின் பண்பாட்டில் யானைகள் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிக்கின்றன.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் தமிழகத்தின் பெரிய கோவில்களில் கோவில் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரில் சிலர் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள். தமிழகத்தின் முதுமலை போன்ற பகுதிகளில் காட்டுமரங்களைக் எடுத்துக் கொண்டு செல்ல யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பாகன்கள் யானைகளை அழைத்து வந்து யானையை ஆசி வழங்க வைத்து பணம் பெறுவதும் உண்டு.

பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் யானைகளைப் பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன. யானைகள் தமிழில் கரி (நிறத்தால் ஏற்பட்ட பெயர்), களிறு (ஆண் யானை), பிடி (பெண் யானை), போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன. தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.

தமிழ் இலக்கியத்தில் யானைக்குரியச் சொற்களை, தமிழ் விக்சனரியின் யானை என்ற சொல்லாக்கத்தில் காணலாம்.

யானையைப் பற்றிய பழமொழிகள்[தொகு]

  • யானைக்கும் அடிசறுக்கும்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.