இரண்டாம் தைலப்பன்
மேலைச் சாளுக்கியர் (பொ.ஊ. 973-1200) | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||
இரண்டாம் தைலப்பன் (அல்லது ஆகவமல்லன்) (Tailapa II.ஆட்சிக்காலம் 973-997 ) இவன் நுர்மடி தைலப்பன், மற்றும் சத்யஸரய குலதிலகா போன்ற பட்டங்களைச் சூடி இருந்தான். இவன்தான் மீண்டும் மேலைச் சாளுக்கிய பேரரசை மறுநிர்மாணம் செய்தவன் ஆவான். 220 ஆண்டுகள் கிரகணம் சூழ்ந்ததைப்போல் ஒளிகுன்றி இருந்த மரபை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தான். சாளுக்கிய பேரரசின் அதிகாரம் ஆறாம் விக்ரமாதித்தன் காலத்தில் அதன் உச்ச நிலையை அடைந்தது. மீண்டும் உயர்நிலையை அடைந்த இந்த சாளுக்கிய மரபு மேலைச் சாளுக்கியர் , கல்யாணிச் சாளுக்கியர், பிற்காலச் சாளுக்கியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இரண்டாம் தைலப்பன் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் பிரபல கன்னடக் கவிஞர் ரண்ணா ஆவார் . கடாக் பதிவுகளில் இருந்து, இவன் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாக அறியப்படுகிறது.
இராஷ்டிரகூடர்கள் முடிவும், சாளுக்கியர் புத்துயிர்ப்பும்
[தொகு]முற்காலத்தில் செல்வாக்குடன் இருந்த வாதாபி சாளுக்கியர்களுக்கு எதிராக எழுச்சிப் பெற்று அதிகாரத்தைக் இராஷ்டிரகூடர் கைப்பற்றி இருந்தனர். இவர்களுக்கு அடங்கி ஆட்சிசெய்து கொண்டிருந்த இரண்டாம் தைலப்பன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு தனது சுயாட்சியை அறிவித்து தனது பேரரசை நிறுவினான்.
தைலப்பனின் வெற்றிகள்
[தொகு]தைலப்பன் இராஷ்டிரகூட மன்னனான நான்காம் இந்திரன் மற்றும் அவனது படைகளைக் கோதாவரி படுகையில் நடந்த போரில் தோற்கடித்தான். சோழர்கள் குடும்பத்து வாரிசு தொடர்பான நெருக்கடியில் பலவீனம் அடைந்திருந்தனர். இந்நிலையில் உத்தம சோழனுக்கு எதிரான 980இல் நடந்த போரில் தைலப்பன் வெற்றிபெற்றான்.
பேரரசு ஒருங்கிணைப்பு
[தொகு]இராஷ்டிரகூடர்களை கவிழ்த்த தைலப்பன் மான்யகட்டாவில் இருந்து ஆண்டான். பின்னர் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள பல ஆண்டுகள் செலவழித்தான். தக்கானத்தின் நர்மதை , காவிரி . ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியில் தனது ஆட்சியை நிலைநிறுத்தினான். மால்வா அரசன் சாளுக்கியர்களைத் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கையில் வடக்கில் இருந்து சாளுக்கிய அரசின் மீது படையெடுத்து வந்தான். படையெடுப்பை முறியடித்த தைலப்பன் மால்வா அரசன் பரமரா மஞ்சாவையும் கைதியாகப் பிடித்தான். பிடிபட்ட மால்வா அரசன் பிடிபட்ட நிலையில் கைதியாக இறந்தான்.
சோழ மன்னனாக இராஜராஜ சோழன் ஆனபின்பு சோழ அரசு வடக்கு நோக்கி விரிவடைந்து மைசூர் மற்றும் பிற பகுதிகள் அடுத்த 100 ஆண்டுகளுக்குச் சோழராட்சியில் நீடித்தது.
தைலப்பனுக்குப்பின் இவனது மூத்தமகன் சத்யஸ்ரயா 997இல் . ஆட்சிப் பொறுப்பேற்றான்.
மேற்கோள்
[தொகு]- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
- Dr. Suryanath U. Kamat (2001). A Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002). வார்ப்புரு:Lccn