உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் தைலப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் தைலப்பன் (Tailapa III ஆட்சிக்காலம் 1151-1164 ) என்பவன் இரண்டாம் ஜெகதேகமல்லனுக்குப் பின் மேலைச் சாளுக்கிய அரியணை ஏறியவன். இவனுடைய ஆட்சிக் காலம் எனபது சாளுக்கியப் பேரரசின் முடிவுக் காலத்தின் துவக்கமாக இருந்தது. காகதீய அரசின் இரண்டாம் புரோல்லா என்பவன் இவனுடன் போரிட்டு தோற்கடித்து, சாளுக்கிய அரசனான இவனைச் சிறைப்பிடித்தான். இந்த நிகழ்வு இதுவரை இவனுக்கு அடங்கி இருந்த அரசர்களுக்கு இவனை எதிர்க்கத் துணிவைத் தந்தது. சீனு, போசளர்கள் போன்றோர் சாளுக்கியரை விட்டு விலகினர். காளச்சூரிய மன்னன் இரண்டாம் பிஜ்ஜலா என்பவன் மேலைச் சாளுக்கியரின் அரசியல் தலைநகரான கல்யாணியைக் கி.பி.1157 இல் கைப்பற்றினான். இதனால் மூன்றாம் தைலப்பன் அண்ணிகிரிக்குத் (தார்வாட் மாவட்டம் ) தப்பிச் செல்லவேண்டி இருந்தது. இறுதியாக 1162 இல் இரண்டாம் தைலப்பன் போசாள அரசன் வீரநரசிம்மனால் கொல்லப்பட்டான்.

மேற்கோள்[தொகு]

  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தைலப்பன்&oldid=2487949" இலிருந்து மீள்விக்கப்பட்டது