இயேலவர்த்தி நாயுடம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயேலவர்த்தி நாயுடம்மா
Yelavarthy Nayudamma
பிறப்புஇயேலவர்த்தி நாயுடம்மா
10 செப்டம்பர் 1922
இயேலவாரு, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு23 சூன் 1985 (வயது 62)
ஏர் இந்தியா விமானம் 182 , அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேல், அயர்லாந்து

இயேலவர்த்தி நாயுடம்மா [1] (Yelavarthy Nayudamma) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வேதிப்பொறியியலாளராவார். 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 அன்று இவர் பிறந்தார். விஞ்ஞானியான இவர் எம்பரர் கனிசுகா என்று அழைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் 182 குண்டு வெடிப்பின் போது கொல்லப்பட்டார். [2][3]

அறிமுகம்[தொகு]

ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள தெனாலி நகரத்திற்கு அருகிலுள்ள இயேலாவாரு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நாயுடம்மா பிறந்தார். கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் இங்குள்ள ஏ.சி கல்லூரியில் இடைநிலை கல்வியைப் பயின்றார். பின்னர், புகழ்பெற்ற பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வேதித் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டம் பெற்றார். சென்னை தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து தோல் தொடர்பான ஒரு பட்டயப் படிப்பை முடித்தார். இந்தியாவின் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு நாயுடம்மா பங்களித்தார். நிறுவனத்தின் பன்னாட்டு பிம்பத்தை உருவாக்குவதற்கும் இந்திய தோல் தொழிலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர் பொறுப்பேற்றார். [4]

நாயுடம்மா ஒய். பவானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரத்தீசு மற்றும் இரமேசு என்ற இரண்டு மகன்களும், சாந்தி என்ற ஒரு மகளும் குழந்தைகளாவர். சீக்கிய தீவிரவாதக் குழுவால் 1985 ஆம் ஆண்டு சூப் மாதம் 23 அன்று ஏர் இந்தியா 182 குண்டுவெடிப்பில் இவர் இறந்தார். இயேலவர்த்தி நாயுடம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். [5]

விருதுகள்[தொகு]

1971 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பத்மசிறீ விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளும் கௌரவங்களும் நாயுடம்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. [6] 1983 ஆம் ஆண்டில் சென்னை சிறீ இராச லட்சுமி அறக்கட்டளையின் மதிப்புமிக்க விருதான இராச-லட்சுமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

புதுதில்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனராக நாயுடம்மா பணிபுரிந்தார். 1981 ஆம் ஆண்டு சூன் 12 முதல் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 27 வரை புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தராக பணியாற்றினார். இவற்றைத் தவிர பல மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். [7]

முனைவர் நாயுடம்மா நினைவு விருது[தொகு]

டி இராமசாமி, சிவதாணு பிள்ளை, நோரி தாட்டாட்ரேயுடு, சாம் பிட்ரோடா, ஜி. மாதவன், கோட்டா அரிநாரயணா, வி.கே.ஆத்ரேயே, இராசகோபாலன் சிதம்பரம், ஆர். ஏ. மாசேல்கர், யாசுபீர் சிங் பசாச்சு, கத்தூரிரங்கன், வர்க்கீசு குரியன், எசு. இசட். காசிம், எம். ஜி. கே. மேனன், விசய்குமார் சரசுவட் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் மற்றும் பலர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்படும் முனைவர் நாயுடம்மா நினைவு விருதினை பெற்றவர்களாவார்கள்[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Families Remember, Commission of Inquiry into the Investigation of the Bombing of Air India Flight 182". Government of Canada. - The footnotes state that the name is often rendered as "Yelavarthy Nayudamma" or "Yelevarthy Nayudamma" in published sources and that "Yelevarthy" is the family name. The Canadian government report puts the family name last, rendering the name as "Nayudamma Yelevarthy". Published on the website of the Canadian Resource Centre for Victims of Crime, funded by the Canadian Government.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2007-12-21 அன்று பரணிடப்பட்டது.
  3. "Public hearing Volume 11" (Archive). Commission of Inquiry into the investigation of the Bombing of ap Flight 182 (Commission d'enquête relative aux measures d'investigation prises à s contre le vol 182 d'Air India). Friday 13 October 2006. p. 1034 (PDF 39-59).
  4. Nayudamma and CLRI: http://www.clri.org/Default.htm பரணிடப்பட்டது 2008-09-22 at the வந்தவழி இயந்திரம்
  5. "Public hearing Volume 11" (Archive). Commission of Inquiry into the investigation of the Bombing of Air India Flight 182 (Commission d'enquête relative aux measures d'investigation prises à la suite de l'attentat à la bombe commis contre le vol 182 d'Air India). Friday 13 October 2006. p. 1037-1038 (PDF 42-43). "After only a few hours in Cork, I had to rush back to India to see my mother. I flew back in silence only to arrive to the next blow; the news that my mother had died from her suicide before I could reach her."
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து நவம்பர் 15, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 21, 2015.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2007-10-08 அன்று பரணிடப்பட்டது.
  8. "Missile Man-II, looking ahead and farther". The Hindu. மூல முகவரியிலிருந்து 2010-03-01 அன்று பரணிடப்பட்டது.