இப்ராகிம் தேனிசுமந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிக் அல்-உலமா, குதுப் அல்-ஆசிகின்

சையது இப்ராகிம்

தேனிசுமந்த்
சுய தரவுகள்
இறப்பு
சமயம்இசுலாம்
குழந்தைகள்மூசா, யூசுப், ஈசா, ஈசாக், பாத்திமா
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்
Jurisprudenceஹனாபி
Tariqaகாதிரியா
வேறு பெயர்(கள்)தேனிசுமந்த்
Relativesசையது முகம்மது தைபூர் (வழிவந்தவர்)
பதவிகள்
பதவிக்காலம்16ஆம் நூற்றாண்டு

இப்ராகிம் தேனிசுமந்த் (Ibrahim Danishmand) 16 ஆம் நூற்றாண்டின் ஜமீந்தாரும் , இசுலாமிய அறிஞரும், மற்றும் காதிரியா சூபிப் பள்ளியைச் சேர்ந்தவரும் ஆவார். தனது வாழ்நாளில் நன்கு மதிக்கப்பட்ட தேனிசுமந்த் பல இசுலாமிய மற்றும் மதச்சார்பற்றப் பாடங்களில் நிபுணராகக் கருதப்பட்டார். வங்காளத்தில் செயல்பட்டு மதத்தைப் பரப்பிய காதிரியா வரிசையில் இவர் முதன்மையானவர் என்று நம்பப்படுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சையது குடும்பத்தில் பிறந்த இவரது சரியான தோற்றம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இவர் 16 ஆம் நூற்றாண்டில் வங்காளத்திற்கு குடிபெயர்ந்த ஈரானைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது ஒரு கருத்து. [1] எனவே மத்திய ஆசியா மற்றும் பெர்சியாவிலிருந்து வங்காள சுல்தான் அலாவுதீன் ஹுசைன் ஷாவால் தனது இராச்சியத்தின் நிர்வாகத்தில் உதவுவதற்காக அழைக்கப்பட்ட பல சையதுகளில் இவரும் ஒருவராக இருக்கலாம்.[2]

மாற்றாக, வரலாற்றாசிரியர் அச்யுத் சரண் சௌத்ரி இவரை சூபித் துறவி சையத் நசிருதீனின் கொள்ளுப் பேரன் என்றும், 13 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் தாரப் சையது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். [3]

வாழ்க்கை[தொகு]

ஒரு சிறந்த எழுத்தாளரான, சையத் இப்ராகிம் இசுலாத்தின் பல பகுதிகளைக் கற்றுக்கொண்டார். இருப்பினும் இவர் குறிப்பாக தஸவ்வுஃப் மீது கவனம் செலுத்தினார். இவரது அறிவிற்காக இவர் தேனிசுமந்த் (புத்திசாலி) என்று அழைக்கப்பட்டார். [1] இவரது வழிகாட்டுதலின் கீழ், இந்து இராஜ்புத்திர பிரபு காளிதாஸ் கஸ்தானி இசுலாத்திற்கு மாறினார். [4] பின்னர், கஸ்தானி சுலைமான் கான் என்ற பெயரையும் பெற்றார். முகலாயப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பரோ-புயானை வழிநடத்திய பிரபலமான இசா கானின் தந்தையாவார்.[5]

சையது இப்ராகிம் பாரசீக மற்றும் அரபு மொழிகளில் சிறந்த அறிஞராக இருந்தார்.[6]இந்தக் காரணத்தால் இவர் லௌதி சுல்தானால் அங்கீகரிக்கப்பட்டார். சுல்தானிடமிருந்து மாலிக் அல்-உலமா (அறிஞர்களின் ராஜா) என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் கௌரவமான குத்புல்-ஆசிகீன் (காதலர்களின் மையம்) என அவர்களால் அறியப்பட்டார். [7][1]ஒரு கட்டத்தில், இவருக்கு வங்காள சுல்தானால் சோனார்கானில் நில வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் சில்ஹெட்டில் உள்ள தாராபில் உள்ள இவரது முந்தைய சொத்துக்களும் மாற்றப்பட்டது. இங்கே, அவர் ஒரு மதப் பள்ளியை நிறுவினார், அங்கிருந்து கொண்டு இவர் இசுலாத்தை போதித்தார். இந்த நடைமுறை இவரது சந்ததியினராலும் மற்றும் இவரது ஆன்மீக வாரிசுகளாலும் தொடர்ந்தது. [1]

இறுதியில் இவர் பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற இசுலாமிய பிரமுகர்கள் அடக்கம் செய்யப்படும் சோனார்கானில் அமைந்துள்ள 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பத் ஷா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது இது ஒரு புனிதத் தலமாக கருதப்பட்டு பக்தர்கள் வருகை தருகின்றனர்.[8]

குடும்பம்[தொகு]

சையது இப்ராகிம் வங்காள சுல்தானின் மூத்த மகளை மணந்தார் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன, அவருடைய பெயர் ரௌசன் அக்தர் பானுவாக இருக்கலாம்.[9] இருப்பினும், இந்த சுல்தானின் சரியான அடையாளம் குறித்து சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. பரிந்துரைகளில் கடைசி இலியாஸ் ஷாஹி ஆட்சியாளர் ஜலாலுதீன் பதே ஷா, உசைன் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த அலாவுதீன் உசைன் சா அல்லது அவரது மகன் கியாசுதீன் மக்மூத் சா ஆகியோர்களில் ஒருவராக இருக்கலாம்.[10][1] இந்த திருமணத்தின் மூலம் சையது இப்ராகிமுக்கு மூசா, ஈசா, யூசுப் மற்றும் ஈசாக் ஆகிய நான்கு மகன்கள் பிறந்தனர்.[11] இருக்கு பாத்திமா பீபி என்ற ஒரு மகளும் (அல்லது பேத்தி) இருந்தார். அவர் பின்னர் ஈசா கானின் மனைவியாகி மூசா கான் என்ற மகனைப் பெற்றெடுத்தார். [12][13]

இவரது சந்ததியினர் சோனார்கானில் முக்கியமான ஜமீந்தார்களாக இருந்தனர். அவர்களில் வரலாற்றாசிரியர் சையது முகமது தைஃபூரும் உள்ளார். [14]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

Bibliography[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_தேனிசுமந்த்&oldid=3845357" இலிருந்து மீள்விக்கப்பட்டது