இனியவளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இனியவளே
இயக்கம்சீமான்
தயாரிப்புஎம். வேதா
கதைசீமான்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஇளவரசு
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்எம். வி. எம். பிக்சர்ஸ்
வெளியீடுமே 15, 1998 (1998-05-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இனியவளே 1998 ஆம் ஆண்டு பிரபு, சுவலட்சுமி, கீர்த்தி ரெட்டி மற்றும் கௌதமி ஆகியோர் நடிப்பில், சீமான் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம். கவிஞர் தாமரை பாடலாசிரியராக அறிமுகமானார்[1][2][3][4]

கதைச்சுருக்கம்[தொகு]

பிரபாகரன் (பிரபு) ஒரு கவிஞர். அவரது நண்பர்கள் ராஜா (ராஜா) மற்றும் முருகன் (வடிவேலு). பிரபாகரனின் கவிதைகளுக்கு கௌதமி ரசிகை. பிரபாகரனைக் காதலிப்பதாகக் கடிதத்தில் தெரிவிக்கிறாள். ஆனால் பிரபாகரன் அவள் காதலை மறுத்து நண்பர்களாகவே இறுதிவரை இருப்போம் என பதில் அனுப்புகிறான். திருமணத்திற்கு முன் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பது பிரபாகரனின் இலட்சியம். பிரபாகரனின் தந்தையும் (மௌலி), ராமநாதனும் (ரகுவரன்) நண்பர்கள். ராமநாதனின் மகள் மீனாவை (சுவலட்சுமி) பிரபாகரனுக்குத் திருமணம் செய்துவைக்க இருவரும் முடிவுசெய்கிறார்கள். மீனா பிரபாகரனை தன் எதிர்காலக் கணவனாகக் கருதிக் காதலிக்கத் தொடங்குகிறாள். பிரபாகரனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று மறுக்கிறான். தன்னை பிரபாகரனுக்குப் பிடிக்காததால் திருமணத்திற்கு மறுக்கிறான் என்று தவறாக நினைத்து மீனா தற்கொலை செய்துகொள்கிறாள். இதற்கு பிரபாகரன்தான் காரணமென்று மீனாவின் குடும்பத்தினர் தூற்றுகின்றனர். குற்ற உணர்விற்கு ஆளாகும் பிரபாகரன் மீனாவின் தங்கை மஞ்சுவைத் (கீர்த்தி ரெட்டி) திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறான். ஆனால் மஞ்சு தன் அக்காவின் மரணத்துக்குக் காரணமான பிரபாகரனை வெறுக்கிறாள். கௌதமி மஞ்சுவிடம் மீனாவின் மரணத்திற்கு பிரபாகரன் காரணமல்ல, அனைவரும் பிரபாகரனைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று விளக்க முயற்சிக்கிறாள். ஆனால் மஞ்சு சமாதானம் அடையவில்லை. பிரபாகரனின் நண்பன் ராஜாவை மஞ்சுவுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு முதலில் சம்மதிக்கும் ராஜா, தொழிலில் ராமநாதன் நட்டமடைவதால் மஞ்சுவைவிட்டு விலகுகிறான். பிரபாகரனின் காதலே உண்மையானது என்று புரிந்துகொண்ட மஞ்சு பிரபாகரனைத் தேடிச்சென்று தன் காதலைத் தெரிவிக்கிறாள். இதை அறிந்து கோபப்படும் மஞ்சுவின் மாமா (தேவன்) பிரபாகரனைக் கொல்வதற்கு வருகிறான். பிரபாகரன் அவனுடன் சண்டையிட்டு வெற்றிபெற்று தான் மீனாவின் மரணத்திற்குக் காரணமில்லை என்பதை புரியவைக்கிறான். பிரபாகரனும் மஞ்சுவும் இணைகின்றனர்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் சீமான், அறிவுமதி, ஜீவன், புண்ணியர் மற்றும் தாமரை.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அன்னக்கிளி வண்ணக்கிளி கிருஷ்ணராஜ் 4:59
2 கண்ணீருக்கு காசு கிருஷ்ணராஜ் 5:29
3 மலரோடு பிறந்தவளா அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் 5:27
4 மஞ்ச மஞ்ச உன்னிகிருஷ்ணன் 4:31
5 தென்றல் அனுராதா ஸ்ரீராம் 6:08
6 உயிரே உயிரே ஹரிஹரன், ஸ்வர்ணலதா 5:03

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of iniyavaley". cinesouth.com. பார்த்த நாள் 2012-12-25.
  2. "Iniyavalle: Movie Review". indolink.com. பார்த்த நாள் 2012-12-25.
  3. "Iniyavale". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2012-12-25.
  4. "Poetic licence renewed". hindu.com (2011-02-03). பார்த்த நாள் 2012-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியவளே&oldid=2915653" இருந்து மீள்விக்கப்பட்டது