ஆர். மகாதேவன்
ஆர். மகாதேவன் (தேவன்) | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 8, 1913 திருவிடைமருதூர், தமிழ்நாடு |
இறப்பு | மே 5, 1957 | (அகவை 43)
புனைபெயர் | தேவன் |
தொழில் | நிர்வாக ஆசிரியர், ஆனந்த விகடன் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலைமாணி (கும்பகோணம் அரசினர் கல்லூரி) |
காலம் | 1934 - 1957 |
வகை | நகைச்சுவை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | துப்பறியும் சாம்பு |
தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
பத்திரிகாசிரியர்
[தொகு]சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.
எழுத்துலகில்
[தொகு]துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.
தேவனின் படைப்புகள்
[தொகு]புதினங்கள்
[தொகு]- மைதிலி (1939)மைதிலி
- மாலதி (1942 ) மாலதி
- கோமதியின் காதலன் கோமதியின் காதலன்
- துப்பறியும் சாம்பு (1942)
- கல்யாணி (1944)
- மிஸ் ஜானகிமிஸ் ஜானகி
- ஸ்ரீமான் சுதர்ஸனம்'ஸ்ரீமான் சுதர்ஸனம்'
- மிஸ்டர் வேதாந்தம் மிஸ்டர் வேதாந்தம் (1949-50)
- ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
- லட்சுமி கடாட்சம் (1951-5 2) லட்சுமி கடாட்சம்
- ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)
பயணக் கட்டுரைகள்
[தொகு]- நடந்தது நடந்தபடியே
- ஐந்து நாடுகளில் அறுபது நாள்
கட்டுரை, கதைத் தொடர்கள்
[தொகு]- மிஸ்டர் ராஜாமணி
- விச்சுவுக்குக் கடிதங்கள்
- அப்பளக் கச்சேரி
- பெயர்போன புளுகுகள்
- ராஜத்தின் மனோரதம்
- கமலம் சொல்கிறாள்
- ஸரஸுவுக்குக் கடிதங்கள்
- பல்லிசாமியின் துப்பு
- போக்கிரி மாமா
- போடாத தபால்
- அதிசயத் தம்பதிகள்
- கண்ணன் கட்டுரைகள்
- ராஜியின் பிள்ளை
- மல்லாரி ராவ் கதைகள்
- சின்னஞ் சிறுகதைகள்
- பிரபுவே! உத்தரவு
- புஷ்பக விஜயம்
- ஜாங்கிரி சுந்தரம்
தொகுப்புகள், சிறுகதைகள்
[தொகு]- ஏன் இந்த அசட்டுத்தனம்
- பார்வதியின் சங்கல்பம்
- சீனுப்பயல்
- மனித சுபாவம்
- பல்லிசாமியின் துப்பு
- ஜாங்கிரி சுந்தரம்
- போக்கிரி மாமா
- ரங்கூன் பெரியப்பா
- சொன்னபடி கேளுங்கள்
- மோட்டார் அகராதி
அல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
தேவனைப் பற்றி பெரியோர்
[தொகு]“ | "ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்" - கல்கி | ” |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]தேவனின் படைப்புகள்
[தொகு]- தேவனின் சில கட்டுரைகள்
- தேவனின் வேதாந்தம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ்டர் வேதாந்தம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- தேவன் பார்வையில் ஒரு பத்திரிகை ஆபீஸ் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ்டர் ராஜாமணி-1 பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ்டர் ராஜாமணி-2 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ்டர் ராஜாமணி-3 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ்டர் ராஜாமணி-4 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- எழுத்தாளர்கள் பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- பழைய ஞாபகங்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- வைத்தியம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ரோடுஸென்ஸ் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சில விளையாட்டுக்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- உபாத்தியாயர்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ஸரஸ்வதி காலெண்டர் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- அலமுவின் சுயசரிதை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- பழைய நினைவுகள்
- கண்ணன் கட்டுரைகள்
- அட!நாராயணா! பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- நாகப்பன் பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- மாணாக்கர்களுக்கு மட்டும் பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- விளம்பர வாழ்க்கை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ஐயோ! சுண்டெலி ! பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம்
- எனது மனமார்ந்த நன்றி பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- வியாபார தந்திரம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- வைத்தியருக்கு மருந்து பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- வெற்றிக்கு வழி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சொப்பனம் பலிக்குமா? பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- யாருக்கு எச்சரிக்கை? பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மோட்டார் அகராதி பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- கண்!ஜாக்கிரதை! பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- புது வருஷம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- புகழும் புகழ்ச்சியும் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- பொழுதைப் போக்காதே! பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சட்டம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
- ”புருஷ லட்சணம்” பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- கண்ணன் கட்டுரைகள்
- தேவனின் சில படைப்புகள்
- துப்பறியும் சாம்பு : 32.திரை எழும்புகிறது!(சிறுகதை)
- துப்பறியும் சாம்பு: 17.பங்களா மர்மம் (சிறுகதை)
- மாலதி (நாவல்)
- போடாத தபால்
- கல்கி என்னும் காந்த சக்தி
- நடந்தது நடந்தபடியே :4. நான் கேட்ட கதைகள்
- எனது மனமார்ந்த நன்றி
- தென்னாட்டுச் செல்வங்கள் -1 ‘தேவன் + சில்பி’
வேறு
[தொகு]- அமரர் 'தேவன்' நினைவுக் கட்டுரைப் போட்டிகள்
- துப்பறியும் சாம்பு'; ஒரு வெண்பா பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - பசுபதி
- தேவன் -ஐம்பதாண்டு நினைவு -வி.திவாகர்
- தேவன் கதாபாத்திரங்கள் -வி.திவாகர்
- தேவன் கதாபாத்திரங்கள்-2 -வி.திவாகர்
- துப்பறியும் சாம்பு - வி.திவாகர்
- தேவனைப் பற்றி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- நானும் தேவனும் -கடுகு
- கல்யாணி - ஒரு விமரிசனம் -வே.சபாநாயகம்
- தேவன் வருவாரா - சுஜாதா
- எழுத்துக்கலை பற்றித் 'தேவன்'
- தேவன் - ஓர் எளிய அறிமுகம்
- தேவன் நினைவு நாள்: 2010 - சு.பசுபதி
- தேவன் நினைவுகள்
- துப்பறியும் தேவன் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம், பரிபூர்ணா, தினமணி, சூன் 26, 2011
- துப்பறியும் சாம்பு -1 - சு.பசுபதி
- துப்பறியும் சாம்பு -3 - சு.பசுபதி
- எங்கள் தேவன் - ஏ.எஸ்.ராகவன்
- தேவன் நூறு ( தேவன் ஒரு சகாப்தம்) - திவாகர்
- தேவனுக்கு வழி விடுங்கள்! - ராணி மைந்தன், தினமணி 15 செப்டம்பர் 2013
- தேவன் கதைகளில் பெண்கள் - ‘அம்பை’ - நவம்பர் 2013,’அமுதசுரபி’