இந்து சமய திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணமகளை, பெண்ணின் தந்தை, மணமகனுக்கு கன்னியாதானம் செய்யும் சடங்கு
மணமகன், மணப்பெண்ணை பாணிக்கிரகணம் செய்யும் சடங்கு

இந்து திருமணம் (மராத்தி: लग्न (लग्न), கல்யாணம்; கன்னடம் मुद्वे (मदुवे); தெலுங்கு: कल्याण அல்லது பெல்லி) என்பது இந்துக்களுக்கான பாரம்பரிய திருமண விழாவைக் குறிக்கிறது. 'திருமணம்' என்ற சொல்லின் நேரடிப் பொருள் - குறிப்பாக தாங்குவது என்பதாகும். இந்தியாவில் திருமணம் என்பது அக்னி தேவன் சாட்சியாக கடவுளால் நிச்சயக்கப்படுவதாக கருதப்படுகிறது. மணமக்களின் புனிதமான சங்கம் என்றும் கருதப்படுகிறது.[1]திருமணம் ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகிறது.

இந்து திருமண விழா மிகவும் வண்ணமயமானதுடன் பல நாட்கள் நீடிக்கும். மணமகன் மற்றும் மணமகள் வீடுகள் - நுழைவாயில், கதவுகள், சுவர்கள், தரை, கூரை வண்ணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிப்படுகிறது.

முக்கிய திருமணச் சடங்குகள்[தொகு]

இந்து சமய வேதங்களின்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சங்கமம் ஆகும். இதில் தர்மம் (கடமை), அர்த்தம் (செல்வம் மற்றும் பிற சொத்துகளைப் பெறுதல்), காமம் (பொருள் மற்றும் பிற) மற்றும் மோட்சம் (நித்திய விடுதலை) ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கான உறுதிப்பாடு உள்ளது.

இந்து திருமணங்களில் மூன்று முக்கியச் சடங்குகள் கொண்டுள்ளது. இவைகள் குடும்ப மரபுகள், உள்ளூர் மரபுகள், குடும்பங்களின் வளங்கள் மற்றும் பிற காரணிகளை பிரதிபலிக்கிறது.

  1. கன்னியாதானம்: (பொருள்:மணமகனுக்கு தன்மகளை ஒருவர் தானமாக வழங்குதல்') : திருமணச் சடங்குகளில் ஒரு முக்கிய நிகழ்வு கன்னிகாதனம்..இது மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் வலக்கையை மணமகனின் வலதுக் கையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைப்பதாகும்.[2] இது மணமகளை மணமகன் வீட்டிற்கு அனுப்பும் சடங்கின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[3]
  2. பாணிக்கிரகணம் - அக்னி முன்னிலையில் நடக்கும் ஒரு சடங்கு, இச்சடங்கின் போது மணமகன், மணமகளின் கையை தாங்கிப் பிடித்துக் கொள்தல் ஆகும். இது மணமக்களின் சங்கமத்தின் அடையாளமாக உள்ளது.[4]
  3. சப்தபதி -மணமக்கள் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு, அக்னி குண்டத்தை "ஏழு சுற்றுகள்" சுற்றுதல் வேண்டும்..

திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள்[தொகு]

தென்னிந்தியாவில் மட்டும் இந்து சமயத் திருமணங்களில் மணமகன், மணமகளுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் வழக்கம் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் தாலி கட்டிய பிறகு நாகவல்லி சடங்கு செய்வர். திருமணம் முடிந்த ஒரு நன்னாளில் சாந்தி முகூர்த்தம் நடைபெறும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்கள்[தொகு]

  1. http://www.hindubooks.org/sudheer_birodkar/hindu_history/practices3.html பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்
  2. கன்னிகாதானம்
  3. Prinja, N. (2009 August 24). Hinduism & Weddings. London, UK: BBC News.
  4. Williams, M.M. (1893). Indian wisdom; or, Examples of the religious, philosophical, and ethical doctrines of the Hindus. London: Luzac & Co.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_சமய_திருமணம்&oldid=3863018" இலிருந்து மீள்விக்கப்பட்டது