நிஷ்கிரமானம்
நிஷ்கிரமானம் அல்லது முதன்முறையாக குழந்தையை வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்தல் (First Outing of the Baby -(சமக்கிருதம்: निष्क्रमण, இது பிறப்பு முதல் இறப்பு வரை இந்து சமயத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய 16 சடங்குகளில் 6வது ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தையை வீட்டிற்கு வெளியே முதன்முதலாக அழைத்துச் செல்லும் போது நடத்த வேண்டிய சடங்காகும். குழந்தையை வீட்டை விட்டு வெளியே அழைத்து செல்வதறு முன்னர், சூரியனைக் காணக்கூடிய முற்றத்தில் ஒரு சதுரப் பகுதியில் பசுவின் சாணம் மற்றும் களிமண்ணால் பூசப்பட்டு, அதில் ஸ்வஸ்திகா அடையாளம் குறிக்க வேண்டும். குழந்தையின் தாய் அதன் மீது அரிசி தானியங்களை சிதறடிப்பார்.. தந்தை குழந்தையைச் சூரியனைப் பார்க்கச் செய்யும் போது, சங்கு ஒலி மற்றும் வேத மந்திரங்கள் எழுப்பி சடங்கு முடிவடைகிறது.[1] மனு தரும சாத்திரத்தின்படி (II.34), குழந்தை பிறந்த 4 மாதத்திற்குப் பிறகு நிஷ்கரரமானச் சடங்கு நடத்த வேண்டும்..[2] According to the Yamasmriti, quoted in Viramitrodaya, a child should see the sun in the third month and the moon in the fourth month after birth.[1]
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pandey, R.B. (1962, reprint 2003). The Hindu Sacraments (Saṁskāra) in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85843-03-1, pp.390-413
- ↑ Buhler, George (2009) [1886]. The Laws of Manu. BiblioLife. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-559-07692-3.