இந்து சமயத்தினரின் 16 சடங்குகள்
Appearance
இந்து சமயத்தினர் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 16 சடங்குகள் குறித்து கல்ப சூத்திரங்கள் மற்றும் தர்ம சாத்திரங்களில் குறித்துள்ளது. இந்த சடங்குகளில் பல புரோகிதரைக் கொண்டு செய்ய வேண்டும். சடங்குகளின் விவரம் பின்வருமாறு[1][2]:
- கர்ப்பதானம் - முதலிரவு அல்லது சாந்தி முகூர்த்தம்
- பும்சவனம் - கர்ப்பவதிக்கு 3 அல்லது 4ம் மாதத்தில் செய்ய வேண்டியது.
- சீமந்தம் - கர்ப்பவதிக்கு 5 அல்லது 7ம் மாதத்தில் செய்ய வேண்டியது.
- ஜாதகர்மா - பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி நீக்கும் சடங்கு
- பெயர் சூட்டுதல் - குழந்தைக்கு நாமகரணம் செய்தல்
- நிஷ்கிரமானம் - குழந்தையை முதன்முதலாக வெளியுலகிற்கு அழைத்துச் செல்லுதல்
- அன்னப்பிரசன்னம் - குழந்தைக்கு முதன்முதலாக சாதம் ஊட்டுதல்
- முடி காணிக்கை - குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல்
- காதணி விழா - குழந்தைக்கு முதன்முதலாக காது குத்துதல்
- வித்தியாரம்பம் - குழந்தையை நெல் மணி தட்டில் ஓம் என எழுத வைத்தல்.
- உபநயனம் - குழந்தைக்கு முப்புரி நூல் அணிவித்தல்
- வேதாரம்பம் - குருவிடம் வேதங்கள் அல்லது போர்க் கலையை கற்க அனுப்புதல்
- மீசை மழித்தல் - இளைஞர்களின் மீசை & தாடியை மழிக்கும் சடங்கு
- கல்வி முடிக்கும் சடங்கு - குருவுக்கு குரு தட்சணை வழங்குதல்
- திருமணம் - ஆண்-பெண்களுக்கு திருமணம் செய்துவைத்தல்
- இறுதிச் சடங்கு - இறப்புச் சடங்கு