காதணி விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதுகுத்துதல்

காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.

நல்ல நாள் மற்றும் நேரத்தினை கணக்கிட்டு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்ச் சாதிகளில் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் முடி எடுத்தல் மற்றும் காதுகுத்தல் நடைபெறுகிறது. சிலர் வீடுகளிலும், மண்டபங்களிலும் விழா நிகழ்த்துகின்றனர். இடம் மற்றும் காலம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டதும்,. முக்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு வாய்மொழியாகவோ, பத்திரிக்கை அடித்து கொடுத்தோ செய்தியினை தெரிவிக்கின்றனர்.

அந்நன்னாளில் அனைவரும் காது குத்தும் இடத்தில் கூடியதும், குழந்தைகளை குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று மொட்டை போடுகின்றனர். பின் அவர்களை குளிப்பாட்டி, தாய்மாமன் சீராக வருகின்ற புத்தாடைகளை அணிவிக்கின்றனர். குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து ஆச்சாரியால் காது குத்தப்படுகிறது. பின்பு தாய் மாமன் தந்த தங்கக் காதணிகளைப் போடுகின்றர். தாய் வழிமாமன் இல்லையேல் அதற்கு நிகரான ஒரு உறவின் மடியிலும் வைத்து காதுகுத்தல் நிகழும்.

காதுகுத்து முடிந்ததும் அனைவரும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடுகின்றர். பின்பு ஆடு போன்ற அசைவ உணவோ, சைவ உணவோ பரிமாறி விருதுண்டு வீடு திரும்புகின்றர்.

பிற கலாச்சாரத்திலும், நாடுகளிலும் காதில் அணிகலன்கள் அணிவது வழக்கத்தில் உள்ளது எனினும் இதை ஒரு விழாவாகக் கொண்டாடும் பாங்கு தமிழ் மக்களிடையே சிறப்பானதாக இதை ஆக்குகிறது.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதணி_விழா&oldid=3858564" இலிருந்து மீள்விக்கப்பட்டது