அன்னப்பிரசன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னப்பிரச்சனத்திற்கான தயாரிப்புகள்
குழந்தைக்கு சோறு ஊட்டும் சடங்கு

அன்னப்பிரசன்னம் அல்லது சோறு ஊட்டும் சடங்கு (Annaprashana - சமசுகிருதம்:अन्नप्राशन|), பிறப்பு இறப்பு வரை இந்து சமயத்தவர் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் இச்சடங்கு ஏழாவதாகும். தாய்ப் பால் மட்டும் குடிக்கும் குழந்தை முதன்முறையாக அரிசி உணவு சாப்பிடத் தொடங்குவதற்கு நடத்தப்படும் சடங்காகும்.[1][2] இச்சடங்கு குழந்தை பிறந்த 6 அல்லது எட்டாவது மாதங்களில் செய்யப்படும். இச்சடங்கை புரோகிதர் கூறும் நட்சத்திரங்களில் செய்தல் நலம்.[3] இதை சோறு ஊட்டும் சடங்கு என கூறுவர்.

சடங்கிற்கான நல்ல நாள்[தொகு]

குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் திட உணவு ஊட்டும் நிகழ்வை நடத்துவார்கள். இல்லையெனில் குழந்தை பிறந்த 8, 9 அல்லது 12-வது மாதங்களில் ஆடி, மார்கழி மாதங்களை தவிர்த்து பிற மாதங்களில் வரும் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில், திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது நல்லது.

இச்சடங்கை இந்தியாவின் மேற்கு வங்காளம், கேரளா[4] மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநில மக்கள் ஒரு சடங்காக செய்கிறார்கள்.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lochfeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. பக். 43–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780823931798. https://books.google.com/books?id=5kl0DYIjUPgC&q=Annaprashana. 
  2. Asian Agri-History Vol. 16, No. 4, 2012, page 405 https://www.asianagrihistory.org/pdf/volume16/yl-Nene%20-Rigveda-has-%20reference-to-%20Rice.pdf
  3. பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக அன்னபிரசன்னம் செய்யப் போறீங்களா? நல்ல நேரம் மற்றும் நல்ல நாட்கள்
  4. "How to perform Choroonu as per Malayali Hindu Tradition? – How to do the First Rice Eating Ceremony of Child?".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னப்பிரசன்னம்&oldid=3858546" இலிருந்து மீள்விக்கப்பட்டது