உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
Shirt badge/Association crest
அடைபெயர்நீலப் புலிகள் (Blue Tigers)
கூட்டமைப்புஅனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புதெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு (தெற்கு ஆசியா)
கண்ட கூட்டமைப்புஏஎஃப்சி (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்ஸ்டீவன் கான்ஸ்டன்டைன்
அணித் தலைவர்சுனில் சேத்ரி
Most capsபாய்ச்சங் பூட்டியா (107)
அதிகபட்ச கோல் அடித்தவர்பிரதீப் பானர்ஜி (65)
பீஃபா குறியீடுIND
பீஃபா தரவரிசை100 Increase1
அதிகபட்ச பிஃபா தரவரிசை94 (பிப்ரவரி 1996)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை169 (செப்டம்பர் 2012)
எலோ தரவரிசை159[1]
அதிகபட்ச எலோ48 (மே 1964)
குறைந்தபட்ச எலோ177 (1977)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
உத்தியோகபூர்வமற்ற:
 ஆத்திரேலியா 5–3 இந்தியா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(சிட்னி, அவுஸ்திரேலியா; 3 செப்டெம்பர் 1938)
உத்தியோகபூர்வ:
இந்தியா இந்தியா 1–2 பிரான்சு 
(லண்டன், இங்கிலாந்து; ஜூலை 31, 1948)[2]
பெரும் வெற்றி
 ஆத்திரேலியா 1–7 India இந்தியா
(Sydney, Australia; 12 December 1956)
இந்தியா India 6–0 கம்போடியா 
(New Delhi, இந்தியா; August 17, 2007)
பெரும் தோல்வி
 சோவியத் ஒன்றியம் 11–1 இந்தியா இந்தியா
(மாஸ்கோ, USSR; 16 September 1955)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1950 இல்)
சிறந்த முடிவுதகுதிபெற்றது
ஆசியக் கோப்பை (கால்பந்து)
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம்-இடம்: 1964

இந்திய தேசிய கால்பந்து அணி (Indian national football team) என்பது இந்தியாவின் தேசிய கால்பந்து அணியாகும். இது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் முறைப்படுத்தப்படுகிறது. இது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பு கூட்டமைப்பாகும். 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள்ளது. ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒரு தொடக்ககால உறுப்பு அமைப்பாக இணைந்தது. இந்திய தேசிய கால்பந்து அணியின் பொற்காலம் 1950-கள் மற்றும் 1960-கள் ஆகும். அக்காலகட்டத்தில் (1950-ல்) கால்பந்து உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. (மற்ற அனைத்து ஆசிய நாடுகளும் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்கவில்லை) ஆயினும் இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. பயணச்செலவுகள், குறைவான பயிற்சி, அணித்தேர்வுக் குழப்பங்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உலகக் கோப்பையைவிட முக்கியமானதாகக் கருதியமை ஆகிய பல காரணங்கள் உலகக் கோப்பையில் பங்கேற்காததற்குக் கூறப்படுகின்றன.[3] இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், ஒரு ஆசியக் கோப்பையில் வெள்ளி மற்றும் உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறன் காட்டிய ஆசிய நாடு என்ற சிறப்பு ஆகிய பெருமைகள் இந்திய கால்பந்து அணிக்கு உரித்தாகும்.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "World Football Elo Ratings". www.eloratings.net.
  2. . fifa.com. 2012-01-28 https://web.archive.org/web/20131023065432/http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=197049/matches/match=32358/report.html. Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help); Missing or empty |title= (help)
  3. Prem Panicker Barefoot in Bengal and Other Stories. yfittopostblog.com (2010-06-14). Retrieved on 2012-01-21.]

வெளியிணைப்புகள்

[தொகு]