அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு
ஏஎஃப்சி
Association crest
தோற்றம்23 சூன் 1937
ஃபிஃபா இணைவு1948
ஏஎஃப்சி இணைவு1954
எஸ்ஏஎஃப்எஃப் இணைவு1997
தலைவர்பிரஃபூல் பாட்டீல்
இணையதளம்www.the-aiff.com

அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு (All India Football Federation-AIFF) என்பது இந்தியாவில் சங்க கால்பந்து போட்டிகளுக்கான மேற்பார்வை அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய தேசிய கால்பந்து அணி மற்றும் ஐ-லீக் (இந்திய கூட்டிணைவு - I League) ஆகியவற்றை, இன்னும் சில கால்பந்து போட்டிகளையும் நிர்வகிக்கிறது. ஐ-லீக் என்பது இந்தியாவின் முதல்தர கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித் தொடராகும்.

1937-இல் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. 1947-இல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1948-ஆம் ஆண்டில் ஃபிஃபா கூட்டமைப்பில் இணைந்தது.

1954-இல் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இவ்வமைப்பும் தொடக்க உறுப்பினராக இணைந்தது.

போட்டிகள்[தொகு]