டியூரான்டு கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டியூரான்டு கோப்பை
தோற்றம்1888
மண்டலம் இந்தியா
அணிகளின் எண்ணிக்கைUnknown
தற்போதைய வாகையாளர்Churchill Brothers SC
2011

டியூரான்டு கோப்பை (Durand Cup)1888-இல் அப்போதைய வெளியுறவு செயலராவிருந்த (சிம்லாவில்) மார்டிமர் டியூரான்டு (Mortimer Durand) என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலகட்டத்தில் இப்போட்டிகள், தற்போதைய இமாச்சல பிரதேசத்திலுள்ள தக்சை எனுமிடத்தில் விளையாடப்பட்டன. 1940-இல் நியூ டெல்லிக்கு இப்போட்டிகள் மாற்றப்பட்டன, அதிலிருந்து நியூ டெல்லியிலேயே (டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் மைதானம்) போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. ஆரம்பத்தில் இப்போட்டிகள் இந்தியாவிலிருந்த பிரிட்டிசு படையினரின் பொழுதுபோக்குக்காக நடத்தப்பட்டன.

இப்போட்டி சிம்லாவில் முதல்முறை நடைபெற்றபோது ராயல் ஸ்காட்சு ஃபுசுலியர்சு வெற்றிபெற்றனர், அவர்கள் இறுதிப்போட்டியில் ஹைலேண்டு லைட் இன்ஃபேன்ட்ரி அணியை 2-1 என்ற இலக்கு கணக்கில் தோற்கடித்தனர்.

1947-இல் இந்தியா விடுதலை பெற்றபிறகு இந்திய இராணுவம் இப்போட்டியை நடத்தி வருகிறது. அதிகபட்சமாக மோகுன் பகங் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் 18 முறை வென்றுள்ளன. வழமையாக இப்போட்டியில் மேற்குவங்க அணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போதைய வாகையர் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்சு அணியாகும்.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு மூன்று கோப்பைகள் வழங்கப்படுகின்றன.

  • ஜனாதிபதி கோப்பை (இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தால் முதலில் வழங்கப்பட்டது)
  • டியூரான்டு கோப்பை (இதுவே முதன்மையான போட்டிப் பரிசாகும், இது ஒரு சுழற்கோப்பை)
  • சிம்லா கோப்பை (சிம்லா மக்களால் 1904-இல் முதன்முதலாக வழங்கப்பட்டது, 1965-லிருந்து சுழற்கோப்பையாக உள்ளது)

நடைமுறையில் இங்கிலாந்தில் நடைபெறும் எஃப் ஏ கோப்பையை ஒத்த போட்டியாகவிருந்தாலும் இதன் வாகையர் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவதில்லை; அதற்குத் தகுதிபெற ஐ-கூட்டிணைவு மற்றும் கூட்டமைப்புக் கோப்பை (இந்திய கூட்டிணைவுக் கோப்பை) ஆகியவையே ஒரே வழியாக உள்ளன.

டியூரான்டு கோப்பையின் மரபை நூற்றாண்டுகள் கடந்தும் காப்பாற்றி வருவதில் இந்திய இராணுவத்தின் பங்கு போற்றத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டியூரான்டு_கோப்பை&oldid=1391377" இருந்து மீள்விக்கப்பட்டது