உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தோஷ் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் கோப்பை
தோற்றம்1941
மண்டலம்இந்தியா
அணிகளின் எண்ணிக்கை31
தற்போதைய வாகையாளர்சர்வீசஸ் (3 பட்டங்கள்)
அதிக முறை வென்ற அணிமேற்குவங்கம் (முன்னதாக வங்காளம்)(31 பட்டங்கள்)
2013 சந்தோஷ் கோப்பை

சந்தோஷ் கோப்பை (Santosh Trophy) என்பது ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் இந்திய காற்பந்தாட்டப் போட்டியாகும். இதில் இந்திய மாநில அணிகளும் மத்திய அரசு நிறுவன அணிகளும் பங்கேற்கின்றன. முதல் முறை நடத்தப்பட்ட போட்டியில் வங்காள அணி வென்றது; வங்காள அணியே இக்கோப்பையைப் பலமுறை, அதாவது 31 முறை, வென்றுள்ளது.

இப்போட்டி 1941-இல் தொடங்கப்பட்டது. 1996-இல் தேசிய கால்பந்து கூட்டிணைவு தொடங்கப்படும் வரை சந்தோஷ் கோப்பையே இந்தியாவில் கால்பந்துக்கென நடத்தப்படும் மிகப்பெரும் போட்டியாக இருந்தது. தற்போதைய வங்களாதேசத்தில் இருக்கும் சந்தோஷின் மகாராஜா சர் மன்மத நாத் ராய் சௌத்ரி-யின் பெயரில் நடத்தப்படுகிறது. அவர் இந்திய கால்பந்து சங்கம் வங்காளக் கால்பந்து அமைப்பு (இவர்களே கோப்பையை வழங்குபவர்கள்) ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.

இரண்டாம் இடத்திற்கான கமலா-குப்தா கோப்பை இந்திய கால்பந்து சங்கத்தால் வழங்கப்படுகிறது. மூன்றாம் இடத்திற்கான சம்பங்கி கோப்பை 1952 இலிருந்து மைசூர் கால்பந்து சங்கத்தால் வழங்கப்படுகிறது. மைசூரைச் சேர்ந்த சம்பங்கி எனும் சிறப்பான கால்பந்து வீரரின் நினைவாகவே இக்கோப்பை வழங்கப்படுகிறது.

போட்டிவடிவம்

[தொகு]

சந்தோஷ் கோப்பைக்கான போட்டிவடிவம் காலப்போக்கில் பலவித மாற்றங்களைச் சந்தித்துள்ளது. தற்போதைய போட்டிவடிவில், முதல் நிலையாக தகுதிச்சுற்றுப் போட்டிகள் உள்ளன. இச்சுற்றில் பங்குபெறும் அணிகள், மூன்று அல்லது நான்கு அணிகள் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பெறும். இக்குழுக்களில் வெற்றிபெறும், அதாவது முதலிடம் பெறும், அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். இச்சுற்றில், தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடத் தேவைப்படாத, முன்னுரிமை பெற்ற நான்கு அணிகளும் இணையும். தற்போது போட்டி காலிறுதிச்சுற்று நிலையை எட்டுகிறது. போட்டியில் உள்ள 12 அணிகளும் மூன்று அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பெறும். இந்நான்கு குழுக்களிலும் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் ஒருமுறை மட்டும் விளையாடப்பெறும் வடிவில் போட்டி உள்ளது. இப்போட்டிகளில், தேவைப்படின், அதிகப்படியான நேரம், பொன்-இலக்கு (கோல்டன் கோல்), பெனால்டி போன்ற முறைகளில் முடிவு எட்டப்படும்.

வாகையர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்இரண்டாம் இடம்கெலிப்பெண்
1941–42வங்காளம்தில்லி51
1942–43போட்டி நடைபெறவில்லை
1943–44போட்டி நடைபெறவில்லை
1944–45தில்லிவங்காளம்20
1945–46வங்காளம்பாம்பே20
1946–47மைசூர்வங்காளம்00; 20
1947–48வங்காளம்பாம்பே00; 10
1948–49போட்டி நடைபெறவில்லைபோட்டி நடைபெறவில்லை
1949–50வங்காளம்ஐதராபாத்50
195051வங்காளம்ஐதராபாத்10
195152வங்காளம்பாம்பே10
195253மைசூர்வங்காளம்10
195354வங்காளம்மைசூர்00; 31
195455பாம்பேசர்வீசசு21
195556வங்காளம்மைசூர்10
195657ஐதராபாத்பாம்பே11; 41
195758ஐதராபாத்பாம்பே31
195859வங்காளம்சர்வீசசு10
195960வங்காளம்பாம்பே31
196061சர்வீசசுவங்காளம்00; 10
196162ரெயில்வேசுபாம்பே30
196263வங்காளம்மைசூர்20
196364மகாராஷ்டிராஆந்திரப் பிரதேசம்10
196465ரெயில்வேசுவங்காளம்21
196566ஆந்திரப் பிரதேசம்வங்காளம்11; 10
196667ரெயில்வேசுசர்வீசசு00; 20
196768மைசூர்வங்காளம்10
196869மைசூர்வங்காளம்00; 10
196970வங்காளம்சர்வீசசு61
197071பஞ்சாப்மைசூர்11; 31
197172வங்காளம்ரெயில்வேசு41
197273வங்காளம்தமிழ்நாடு41
197374கேரளாரெயில்வேசு32
197475பஞ்சாப்வங்காளம்60
197576வங்காளம்கருநாடகம்00; 31
197677வங்காளம்மகாராஷ்டிரா10
197778வங்காளம்பஞ்சாப்11; 31
197879வங்காளம்கோவா10
1979–80வங்காளம்பஞ்சாப்10
1980–81பஞ்சாப்ரெயில்வேசு00; 20
1981–82வங்காளம்ரெயில்வேசு20
1982–83வங்காளம் மற்றும் கோவா(ஒருமித்த வெற்றியாளர்கள்)00; 00
1983–84காவாபஞ்சாப்10
1984–85பஞ்சாப்மகாராஷ்டிரா30
1985–86பஞ்சாப்வங்காளம்00; 41 (pen)
1986–87வங்காளம்ரெயில்வேசு20
1987–88பஞ்சாப்கேரளா00; 54 (pen)
1988–89வங்காளம்கேரளா43 (pen)
1989–90கோவாகேரளா20
1990–01மகாராஷ்டிராகேரளா10
1991–92கேரளாகோவா30
1992–93கேரளாமகாராஷ்டிரா20
1993–94வங்காளம்கேரளா22; 75 (pen)
1994–95வங்காளம்பஞ்சாப்21 (golden goal)
1995–96வங்காளம்கோவா20
1996–97வங்காளம்கோவா10 (கூ.நே.பி.)
1997–98வங்காளம்கோவா10
1998–99வங்காளம்கோவா50
1999–00மகாராஷ்டிராகேரளா10
2000–01போட்டி நடைபெறவில்லை
2001–02கேரளாகோவா32 (பொன் இலக்கு-golden goal)
2002–03மணிப்பூர்கேரளா21 (பொன் இலக்கு)
2003–04போட்டி நடைபெறவில்லை
2004–05கேரளாபஞ்சாப்32 (பொன் இலக்கு)
2005–06கோவாமகாராஷ்டிரா11; 20 (கூ.நே.பி.)
2006–07பஞ்சாப்வங்காளம்00; 53 (Pen)
2007–08பஞ்சாப்சர்வீசசு10
2008–09கோவாவங்காளம்00; 42 (Pen)
2010வங்காளம்பஞ்சாப்21
2011வங்காளம்மணிப்பூர்21
2012சர்வீசசுதமிழ்நாடு32
2013சர்வீசசுகேரளா00; 43 (Pen)

வெற்றியாளர்கள்/இரண்டாம் இடம் பெற்றோர்

[தொகு]

ஒட்டுமொத்த பட்டியல்

[தொகு]
அணி பட்டங்கள் இரண்டாம் இடம் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற தடவைகள்
மேற்கு வங்கம் (முன்னதாக வங்காளம்) 31 12 43
பஞ்சாப் 8 6 14
கேரளா 5 8 13
கோவா 5 7 12
மகாராஷ்டிரா (முன்னதாக பாம்பே) 4 11 15
கருநாடகம் (முன்னதாக மைசூர்) 4 5 9
ரெயில்வேசு 3 5 8
சர்வீசசு 3 5 8
ஆந்திரப் பிரதேசம் (முன்னதாக ஐதராபாத்) 3 3 6
டெல்லி 1 1 2
மணிப்பூர் 1 1 2
தமிழ்நாடு (முன்னதாக மதராசு) 0 2 2

1972-லிருந்து: மாநில அணிகளும் போட்டியில் பங்குபெற ஆரம்பித்த பிறகு

[தொகு]
அணி பட்டங்கள் இரண்டாம் இடம் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற தடவைகள்
மேற்கு வங்கம் 16 4 20
பஞ்சாப் 7 5 12
கேரளா 5 8 13
கோவா 5 7 12
மகாராஷ்டிரா 3 4 7
மணிப்பூர் 1 1 2
ரெயில்வேசு 0 4 4
கருநாடகம் 0 1 1
சர்வீசசு 2 1 3
தமிழ்நாடு 0 2 2

இலக்கடைந்தோர்/கோல் அடித்தோர்

[தொகு]

சந்தோஷ் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல் அடித்த முதல் 6 வீரர்கள்:

  • 1) இந்தர் சிங் (பஞ்சாப்): 45 இலக்குகள்
  • 2) முகமது அபீப் (ஆந்திரா மற்றும் வங்காளம்): 34 இலக்குகள்
  • 3) சியாம் தாபா (சர்வீசசு மற்றும் வங்காளம்): 31 இலக்குகள்
  • 4) பி.கே. பானர்ஜி (வங்காளம் மற்றும் ரெயில்வேசு): 28 இலக்குகள்
  • 5) சுரஜித் சென்குப்தா (வங்காளம்): 26 இலக்குகள்
  • 5) பிசுவாஜித் பட்டாச்சார்யா (வங்காளம்): 26 இலக்குகள்[1]

உசாத்துணைகள் மற்றும் வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_கோப்பை&oldid=3265984" இலிருந்து மீள்விக்கப்பட்டது